வருமான வரி தாக்கல் செய்யப் போறீங்களா? இந்த டாக்குமெண்ட்கள் எல்லாம் தேவை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில், பொதுவாக ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் தனி நபர்கள், வருமான வரிப் படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும்.

 

கடந்த 2019 - 20 நிதி ஆண்டில் சம்பாதித்த வருமானத்துக்கு, வரும் 30 நவம்பர் 2020 வரை வருமான வரிப் படிவங்களை முறையாக நிரப்பி சமர்பிக்க, கால அவகாசம் கொடுத்து இருக்கிறது மத்திய அரசு.

சரி, வருமான வரிப் படிவங்களை முழுமையாக நிரப்பி, சமர்பிக்க, என்னென்ன டாக்குமெண்ட்கள் எல்லாம் தேவை என்பதைத் தான் இங்கு பார்க்கப் போகிறோம்.

படிவம் 16 (Form 16)

படிவம் 16 (Form 16)

இந்த படிவத்தை, சம்பளம் கொடுக்கும் கம்பெனிகளே தயாரித்து, ஊழியர்களுக்கு கொடுப்பார்கள். இந்த படிவத்தில் பகுதி A & பகுதி B என இரண்டு பிரிவுகள் இருக்கும். பகுதி A-ல், ஊழியரிடம் இருந்து, கம்பெனிகள், எவ்வளவு பணத்தை டிடிஎஸ்-ஆக பிடித்து வருமான வரித் துறையினரிடம் செலுத்தி இருக்கிறது என்கிற விவரங்கள் இருக்கும். இதே பகுதியில் தான் ஊழியர்களின் பான் விவரம், டான் விவரம் போன்றவைகள் எல்லாம் இருக்கும். பகுதி B-ல் ஊழியர்களின் சம்பள விவரங்கள் இருக்கும்.

படிவம் 26AS (Form 26AS)

படிவம் 26AS (Form 26AS)

இந்த 26 AS படிவத்தை, வருமான வரித் துறையினரின் வலைதளத்தில் காணலாம். இந்த படிவத்தில், நமக்கு வர வேண்டிய வருமானத்தில் இருந்து, யார், எவ்வளவு பிடித்தம் செய்து வருமான வரித் துறையினரிடம் செலுத்தி இருக்கிறார்கள் என்கிற விவரங்களைப் பார்க்கலாம். அதே போல, நாமே முன் வந்து செலுத்திய வருமான வரி விவரங்களையும் இதில் பார்க்கலாம்.

முதலீடுகளுக்கான ஆதாரங்கள்
 

முதலீடுகளுக்கான ஆதாரங்கள்

பொதுவாக, தனி நபர்கள், வருமான வரிச் சட்டப் பிரிவு 80C -ன் கீழ் சொல்லப்பட்டு இருக்கும் முதலீடுகள் மற்றும் இன்சூரன்ஸ் திட்டங்களில் பணத்தைப் போட்டு, வரிச் சலுகைக்கு க்ளெய்ம் செய்வார்கள். அப்படி க்ளெய்ம் செய்ய விரும்புபவர்கள், முதலீடுகள் மற்றும் இன்சூரன்ஸ் திட்டங்களுக்கு, பணம் செலுத்தியதற்கான ரசீதுகள், பாலிசி சான்றிதழ்கள் போன்ற ஆதாரங்களை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.

வீட்டுக் கடன்

வீட்டுக் கடன்

தனி நபர்கள் வருமான வரிச் சலுகை பெற பயன்படுத்தும் மற்றொரு முக்கியமான விஷயம் வீட்டுக் கடன். வீட்டுக் கடனுக்குச் செலுத்தும் வட்டியை வருமான வரிச் சட்டம் 24 பிரிவின் கீழும், அசல் தொகையை 80 சி பிரிவின் கீழும் க்ளெய்ம் செய்யலாம். வீட்டுக் கடனுக்கு செலுத்திய தவணைகளில், எவ்வளவு ரூபாய் வட்டியாகவும், எவ்வளவு ரூபாய் அசலாகவும் செலுத்தி இருக்கிறோம் என்பதற்கான ஆதாரங்களையும் வைத்திருக்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What are the documents required to file ITR

What are the important documents required to file the Income tax return for the financial year 2019 - 20.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X