மியூச்சுவல் ஃபண்டில் சிஸ்டமேட்டிக் வித்டிராயல் திட்டம் என்றால் என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பது பாதுகாப்பு மற்றும் அதிக வருவாய் தரும் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

குறிப்பாக மியூச்சுவல் ஃபண்டில் SIP என்று கூறப்படும் சிஸ்ட்மேடிக் இன்வெஸ்ட்மெண்ட் பிளானை பல நிதி ஆலோசகர்கள் பரிந்துரை செய்வார்கள் என்பது தெரிந்ததே.

அந்த வகையில் தற்போது SWP என்றால் அதாவது சிஸ்டமேட்டிக் வித்டிராயல் திட்டம் என்றால் என்ன? குறித்து தற்போது பார்ப்போம்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு அல்லது நேரடி பங்குவர்த்தகம்.. எது பெஸ்ட்? மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு அல்லது நேரடி பங்குவர்த்தகம்.. எது பெஸ்ட்?

 மியூச்சுவல் ஃபண்ட் SIP

மியூச்சுவல் ஃபண்ட் SIP

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் SIP மற்றும் ஒட்டு மொத்த முதலீடு என்று கூறப்படும் லம்ப்சம் முதலீடு ஆகியவை உள்ளன என்பது தெரிந்ததே. SIP மூலம் முதலீடு செய்தால் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி முதலீடு செய்ய வேண்டும். நாம் இலக்கை அடையும் போது நம் கையில் மிகப்பெரிய தொகை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மியூச்சுவல் ஃபண்ட் லம்ப்சம்

மியூச்சுவல் ஃபண்ட் லம்ப்சம்

அதேபோல லம்ப்சம் முதலீடு என்றால் மொத்தமாக ஒரே ஒருமுறை மட்டும் முதலீடு செய்துவிட்டு அதன் பின்னர் சில ஆண்டுகாலம் காத்திருந்து அதற்கான பலனை நாம் மொத்தமாக பெறலாம்.

மியூச்சுவல் ஃபண்ட் SWP

மியூச்சுவல் ஃபண்ட் SWP

இந்த நிலையில் SWP என்று கூறப்படும் சிஸ்டமேட்டிக் வித்டிராயல் திட்டம் என்பது குறித்து தற்போது பார்ப்போம். ஒரு குறிப்பிட்ட தொகையை மொத்தமாக முதலீடு செய்துவிட்டு உங்கள் மாதாந்திர குடும்ப செலவுகளை நிர்வகிப்பதற்கு வழக்கமான வருமானம் வர வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் இந்த திட்டத்தை நீங்கள் தேர்வு செய்யலாம்.

மாத வருமானம் பெறலாம்

மாத வருமானம் பெறலாம்

நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். SWP என்ற சிஸ்டமேட்டிக் வித்டிராயல் திட்டத்தில் ஒரு பொருத்தமான திட்டத்தை தேர்வு செய்து அதில் உங்களிடம் இருக்கும் ஒரு ஒட்டு மொத்த தொகையை முதலீடு செய்ய வேண்டும். அதன்பின் ஒரு வருடம் கழித்து சிஸ்டமேட்டிக் வித்டிராயல் திட்டத்தின்படி நீங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் அதாவது மாதம் அல்லது காலாண்டு அல்லது வருடத்திற்கு ஒருமுறை ஒரு குறிப்பிட்ட தொகையை பெறலாம். நீங்கள் பெற விரும்பும் தொகையையும் கால இடைவெளியையும் நீங்களே தேர்வு செய்யலாம். உங்கள் விருப்பத்தை அவ்வப்போது மாற்றிக்கொள்ளவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

டிவிடெண்ட் vs SWP

டிவிடெண்ட் vs SWP

டிவிடெண்ட் திட்டத்தை விட சிஸ்டமேட்டிக் வித்டிராயல் திட்டம் சிறப்பானது. ஏனெனில் டிவிடெண்ட் என்பது உங்களுக்கு உறுதியாக கிடைக்கும் என்று கூற முடியாது. நீங்கள் முதலீடு செய்த மியூச்சுவல் ஃபண்ட் இழப்பை சந்தித்தால் உங்களுக்கு டிவிடெண்ட் கிடைக்காது. ஆனால் SWP திட்டம் அப்படி அல்ல, நீங்கள் தேர்வு செய்த தொகை உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும்.

சரியான முதலீடு

சரியான முதலீடு

எனவே SWP திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் ஒவ்வொரு மாதமும் நீங்கள் உங்கள் மாதச் செலவுக்கு தேவையான தொகையை பெறுவதற்கு இந்த திட்டம் சரியானதாக இருக்கும் என்பது குறிப்பிடப்பட்டது. ஒரே ஒருமுறை மட்டும் ஒட்டு மொத்த தொகையை தொடக்கத்தில் முதலில் செய்து அதன் பின் நீங்கள் எதிர்பார்க்க கூடிய தொகையை ஒவ்வொரு மாதமும் அல்லது காலாண்டில் பெற்றுக்கொள்ளலாம். இதனால் உங்கள் அசல் தொகையில் எந்தவிதமான பாதிப்பும் வராது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is Systematic Withdrawal Plans in a Mutual Fund?

If you are looking for a regular income inflow to manage your monthly household expenses, you should go for Systematic Withdrawal Plans (SWPs)in a Mutual Fund.
Story first published: Saturday, October 15, 2022, 7:07 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X