மியூச்சுவல் ஃப்ண்ட்ட்டில் அதிகபட்சம் எத்தனை வருடங்கள் முதலீடு செய்யலாம்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மியூச்சுவல் ஃப்ண்ட் முதலீடு என்பது பாதுகாப்பானது மற்றும் அதிக வருவாய் தரக்கூடியது என்பதை மக்கள் தற்போது படிப்படியாக புரிந்து கொண்டு வருகின்றனர்.

மியூச்சுவல் ஃப்ண்ட் சரியானது என மக்கள் புரிந்து கொண்டதால் தான் ஒவ்வொரு வருடமும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும் தொகை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மியூச்சுவல் ஃப்ண்ட்டில் அதிகபட்சம் ஒருவர் எத்தனை ஆண்டுகள் முதலீடு செய்யலாம் என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

மியூச்சுவல் ஃபண்ட்ஸில் தினமும் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்குமா?மியூச்சுவல் ஃபண்ட்ஸில் தினமும் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்குமா?

மியூச்சுவல் ஃப்ண்ட்

மியூச்சுவல் ஃப்ண்ட்

பிக்சட் டெபாசிட், ஆர்டி உள்ளிட்ட பல முதலீடுகளை விட அதிக வருவாய் தரக்கூடியது மியூச்சுவல் ஃப்ண்ட் என்றும் அதேபோல் முதலீட்டுக்கும் பாதுகாப்பானது என்றும் நிதி ஆலோசகர்கள் தெரிவித்து வருகின்றனர். எனவேதான் குறுகிய கால அல்லது நீண்டகால முதலீட்டிற்கு மியூச்சுவல் ஃப்ண்ட்டை மக்கள் தேர்ந்தெடுத்து அதில் முதலீடு செய்து வருகின்றனர்.

நீண்டகால முதலீடு

நீண்டகால முதலீடு

மியூச்சுவல் ஃப்ண்ட் முதலீட்டை பொருத்தவரை நீண்ட காலத்திற்கு முதலீடு செய்வது அதிக வருவாய் தரும் என நிதி ஆலோசகர்கள் கூறி வந்ததை ஏற்கனவே பலமுறை பார்த்தோம். அதே நேரத்தில் நீண்ட காலம் என்றால் ஒருவர் எத்தனை ஆண்டுகள் அதிகபட்சமாக முதலீடு செய்யலாம் என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

வரைமுறை இல்லை

வரைமுறை இல்லை

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு என்பதற்கு கால வரைமுறை என்பது இல்லை. ஒருவர் 10 ஆண்டுகள், 20 ஆண்டுகள் அல்லது 30 ஆண்டுகள் என அவரவர் வசதிக்கேற்ப எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். அறங்காவலர் குழுவில் இருந்து முதலீடு செய்பவர்கள் இலக்கே இல்லாமல் அவற்றை தொடர்ந்து முதலீடு செய்து வருவதை பார்த்து வருகிறோம்.

இலக்கு

இலக்கு

எனவே மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை பொருத்த வரை இத்தனை ஆண்டுகள் தான் முதலீடு செய்ய வேண்டும் என்று வரைமுறை இல்லை என்பதும் முதலீடு செய்பவர் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் தங்கள் இலக்கை நிர்ணயித்து கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறைந்தபட்சம்

குறைந்தபட்சம்

அதேபோல் மியூச்சுவல் பண்டில் குறைந்த பட்சம் எவ்வளவு நாட்கள் முதலீடு செய்யலாம் என்ற சந்தேகம் மக்கள் மனதில் உள்ளது. மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் குறைந்தபட்சம் ஒரு நாள் கூட முதலீடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த ஒரு நாள் என்பது என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதாவது ஒரு குறிப்பிட்ட முதலீட்டுக்கான NAV யூனிட்டுகளை நாம் வாங்கும் போது அந்த யூனிட்டுகள் நமக்கு ஒதுக்கப்பட்ட பின்னர் அடுத்த நாள் நாம் அந்த NAV திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் குறைந்த பட்சம் ஒரு நாள் என்றாலும் அந்த முதலீடு நமக்குத் திரும்பக் கிடைக்க மூன்று அல்லது நான்கு நாட்கள் ஆகலாம், சில சமயம் ஒரு வாரம் கூட ஆகலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

திட்டம்

திட்டம்

எனவே மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை பொருத்தவரை குறைந்தபட்சம் ஒரு நாள் முதல் அதிகபட்சம் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் முதலீடு செய்யலாம் என்பதை மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is the maximum tenure that I can invest in Mutual Funds?

It is significant that every year the amount invested in mutual fund is increasing because people understand that mutual fund is right. Now let us see the maximum number of years one can invest in a mutual fund.
Story first published: Wednesday, November 2, 2022, 6:43 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X