கொரோனா காலத்தில் பாதுகாப்பாக எதில் முதலீடு செய்யலாம்? 8% வருமானம் வருமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸால் நிதித் துறை மட்டுமல்ல, ஒட்டு மொத்த பங்குச் சந்தைகளையே சில பல ஆண்டுகளுக்கு பின்னோக்கிச் தள்ளிவிட்டது.

இதனால் முகேஷ் அம்பானி, பில் கேட்ஸ் போன்ற படா பில்லியனர்களுக்கே பில்லியன் டாலர் கணக்கில் சொத்து மதிப்பு நஷ்டமாகி இருக்கிறது.

இந்த கால கட்டத்தில் எதில் முதலீடு செய்யலாம்? என்ன வருமானம் வரும்? எப்படி ஒழுங்காக பணத்தை போட்டு வருமானம் ஈட்டுவது?

ஏன் 8 சதவிகிதம்

ஏன் 8 சதவிகிதம்

இந்தியாவின் சராசரி பணவீக்கம் 6.5 சதவிகிதம் வரும் என எடுத்துக் கொள்வோம். ஆக ஒரு முதலீடு என்பது குறைந்த பட்சம் பணவீக்கத்தை விட கூடுதலாக வருமானம் கொடுக்க வேண்டும் இல்லை என்றால் முதலீடுகளின் மூலம் நமக்குப் பயன் இல்லை. எனவே தான் 8 % வருமானத்தைத் தேடுகிறோம்.

ஃபிக்ஸட் டெபாசிட்

ஃபிக்ஸட் டெபாசிட்

இது நம் எல்லோருக்குமே தெரிந்த முதலீடு தான். ஆனால் 8 சதவிகிதத்துக்கு மேல் வட்டி கொடுக்கிறார்களா என்றால்... கொடுக்கிறார்கள். ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் என்பார்களே அந்த வங்கிகள் கொடுக்கிறார்கள். இந்த ரக வங்கிகள் சாதாரண மக்களுக்கே 8 %-த்துக்கு மேல் வட்டி கொடுக்கும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை வைத்திருக்கிறார்கள்.

9.00 % வட்டி

9.00 % வட்டி

Fincare Small Finance Bank என்கிற வங்கி, 36 மாதம் முதல் 42 மாதங்கள் வரையான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு 9.00 சதவிகிதம் வட்டி கொடுக்கிறார்கள். அதே போல Utkarsh Small Finance Bank என்கிற வங்கியும் 777 நாட்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு 9.00 சதவிகிதம் வட்டி கொடுக்கிறார்கள்.

8.25 % வட்டி

8.25 % வட்டி

Jana Small Finance Bank என்கிற வங்கி 1,555 நாட்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு 8.25 % வட்டி கொடுக்கிறார்கள். Equitas Small Finance Bank என்கிற வங்கி 888 நாட்களுக்கான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு 8.25 % வட்டி கொடுக்கிறார்கள். இதில் உங்களுக்கு சரிப்பட்டு வரும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை நீங்களே தேர்வு செய்து கொள்ளுங்கள்.

கடன் மியூச்சுவல் ஃபண்டுகள்

கடன் மியூச்சுவல் ஃபண்டுகள்

ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் எல்லாம் அத்தனை சிறப்பாக வருமானம் கொடுக்கவில்லை. ஆனால் கடன் சார்ந்த கில்ட் ஃபண்டுகள், டைனமிக் பாண்ட் ஃபண்டுகள் எல்லாம் நல்ல வருமானம் கொடுத்துக் கொண்டு இருக்கிறன. பெரும்பாலான ஃபண்டுகள் சுமாராக 8 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் கொடுத்துக் கொண்டு இருக்கின்றன. எனவே நல்ல முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்து நல்ல வருமானம் பார்க்கவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Which is moderately safe investment and giving 8 % return now

Which investment plans are moderately safe investment and giving 8 % return now, Small finance banks & debt mutual funds are giving more than 8 % returns now.
Story first published: Saturday, April 18, 2020, 11:02 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X