2020ல் அதிகரித்த ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம்.. இந்த கொரோனாவால் பெரும் தொல்லையே..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடப்பு ஆண்டில் ஹெல்த் இன்சூரன்ஸ்களுக்கான பிரீமியம் தொகை கணிசமான அளவு அதிகரித்துள்ளது. இது வாடிக்கையாளர்களிடையே சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

ஏனெனில் இது குறித்து தொடர்ந்து கட்டுபாளரிடம் சமூக வலைதளங்களில் புகார்கள் அதிகரித்து வருகின்றன.

அதே நேரம் இதற்கு பதிலளிக்கும் விதமாக ஐஆர்டிஏஐ, சில பாலிசிகளுக்கு பிரீமியத்தினை மாற்றியமைக்க அனுமதி கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

பிரீமியம் அதிகரிப்பு

பிரீமியம் அதிகரிப்பு

கடந்த செப்டம்பர் 30, 2020, நிலவரப்படி, 388 தயாரிப்புகளில், 55 பாலிசிகளில் மட்டும் பிரீமியங்கள் 5 சதவீதம் வரை அதிகரித்திருப்பதாக ஐஆர்டிஏஐ விளக்கமளிக்கத்துள்ளது.
மேலும் 2020 நவம்பர் 30 வரையிலான காலத்தில் 5 காப்பீட்டாளர்களுக்கு மட்டுமே 5%க்கு அப்பால் பீரிமியத்தினை திருத்த சுகாதார அமைப்பு அனுமதி கொடுத்துள்ளதாக கூறியுள்ளது. ஒரு வாடிக்கையாளர் இந்த பிரீமிய அதிகரிப்புக்கு எதிராக புகார் அளித்தால், காப்பீட்டாளர் தங்கள் இழப்பு விகிதத்தினை நியாயப்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளது.

மருத்துவ பணவீக்கம்

மருத்துவ பணவீக்கம்

அதோடு அதிகரித்து வரும் மருத்துவ பணவீக்கமும், பிரீமியம் அதிகரிக்க ஒரு காரணமாக அமைந்துள்ளது. 2020ம் நிதியாண்டில் தொற்று நோய் காரணமாக மெடிக்கல் பணவீக்கமும் 19.5% அதிகரித்துள்ளதாக துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாகவும் சில இன்சூரன்ஸ் திட்டங்களில் பிரீமியம் அதிகரித்துள்ளது.

என்ன காரணம்?

என்ன காரணம்?

மேலும் பல மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சைக்காக அதிக கட்டணங்களை அதிகமாக வசூலிக்கின்றன. மற்ற கட்டணங்களும் அதிகமாக உள்ளன. இதனையும் இன்சூரன்ஸ் நிறுவனம் கவர் செய்யுமாறு உந்தப்பட்டன. இதன் காரணமாக இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பிரீமியங்களை அதிகரிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

பிரீமியம் அதிகரிக்கும்

பிரீமியம் அதிகரிக்கும்

இது குறித்தான இந்தியாவில் மருத்துவ பணவீக்கம் மற்றும் காப்பீட்டு தயாரிப்புகள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையின் படி, காப்பீட்டு நிறுவனங்கள் ஒவ்வொரு 2 முதல் 4 வருடங்களுக்கும் பிரீமியத்தை 15% - 35% உயர்த்த முனைகின்றன. ஏனெனில் சுகாதார காப்பீட்டு விலை மருத்துவ பணவீக்கத்திற்கு ஊக்குவிக்கும் வகையில் அதிகரித்து வருகின்றது.

வயது & உடல் நல பிரச்சனை

வயது & உடல் நல பிரச்சனை

பாலிசிதாரர் வயதாகும்போது காப்பீட்டு நிறுவனங்கள் அதிக பிரீமியம் வசூலிக்க முனைகின்றன. அதோடு ஒவ்வொரு 3 - 5 வருடங்களுக்கும் மேலாக பிரீமியங்கள் உயர்த்தப்படுகிறது. மேலும் பாலிசிதாரர்கள் உடல் நல பிரச்சனைகளில் இருக்கும்போது காப்பீட்டு நிறுவன, பாலிசிதாரர்களுக்கான பிரீமியத்தை உயர்த்துகிறது.

மருத்துவ பணவீக்கம் அதிகரிக்கும்

மருத்துவ பணவீக்கம் அதிகரிக்கும்

ஏனெனில் தனி நபர்கள் வயதாகும்போதும், சுகாதார பிரச்சனை அதிகரிக்கும்போதும் ஹெல்த் இன்சூரன்ஸினை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. இதனால் பாலிசி க்ளைம் செய்வது அதிகரிக்கின்றது. மில்லிமானின் ஆய்வறிக்கையின் படி, வயது மற்றும் மருத்துவ பணவீக்கம் ஆகியவை 50 சதவீதம் வரை உயரலாம் என்றும் எதிர்பார்க்கின்றது.

கொரோனா பாதிக்கும் அபாயம்

கொரோனா பாதிக்கும் அபாயம்

கொரோனா வைரஸால் வயதானவர்கள் அதிகம் பாதிக்கபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆக சில பாலிசிகளில் இன்சூரன்ஸ் பிரீமியம் அதிகரிக்க வழிவகுத்துள்ளது. எனினும் பிரீமியம் அதிகரித்துள்ள இந்த நேரத்தில், பயனாளர்களுக்கும் பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. அதாவது வருடத்திற்கு ஒரு முறை பிரீமியம் செலுத்தி வந்தவர்களுக்கு, தற்போது மாதம் மாதம் செலுத்திக் கொள்ளலாம் எனவும், காலாண்டுக்கு ஒரு முறை செலுத்தலாம் என பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

சில சலுகைகளும் உண்டு

சில சலுகைகளும் உண்டு

டிஜிட்டல் முறையில் ஆவனங்களை சமர்பித்துக் கொள்ளலாம். அதாவது ஆவணங்கள் ஏதும் hard copy ஆக இல்லாமல், டிஜிட்டல் முறையில் கொடுத்துக் கொள்ளலாம். நடப்பு ஆண்டில் சில பாலிசிகள் புதிய விதிகளின் அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதுவும் ஒரு காரணம்

இதுவும் ஒரு காரணம்

ஆரம்பத்தில் பாலிசிகளை விற்பனை செய்வதற்காக நிறுவனங்கள் பாலிசிகளை குறைந்த விலையில் அறிமுகப்படுத்துகின்றன. எனினும் அவைகள் நீண்டகாலத்திற்கு நீடிக்க முடியாதவைகளாக உள்ளன. இது க்ளைம் விகிதத்தினை அதிகரிக்கிறது. அதாவது செலுத்தப்பட்ட மொத்த க்ளைம் தொகையானது, சேகரிக்கப்பட்ட மொத்த பிரீமிய தொகையினை விட அதிகமாக உள்ளது. இதனால் தான் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பிரீமியத்தினை உயர்த்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Why insurance premiums spiked in 2020?

Insurance updates.. Why insurance premiums spiked in 2020?
Story first published: Tuesday, December 15, 2020, 19:25 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X