வீட்டுக்கடன் வாங்கபோறீங்களா.. எந்த வங்கியில் எவ்வளவு வட்டி.. இதையும் தெரிஞ்சுக்கோங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இன்றளவிலும் நடுத்தர வர்த்தகம் மற்றும் கீழ்தட்டு மக்களின் மிகப்பெரிய ஆசையாக இருப்பதே சொந்த வீடு தான்.

 

ஏனெனில் சொந்த வீடு என்பது நடுத்தர வர்க்கத்தின் கனவாகவும், ஏழை மக்களின் மிகப்பெரிய கனவாகவும் இருந்தது ஒரு காலம். ஆனால் இன்றோ அப்படி இருக்க வேண்டியதில்லை. ஏனெனில் இங்கு பல வாய்ப்புகள் உள்ளது.

மனிதர்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக இருக்கும் உணவு, உடை, உறைவிடம் உள்ளிட்டவற்றில் முதல் இரண்டினையும் எளிதில் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் மூன்றாவதாக உள்ளது அவ்வளவு எளிதல்ல. எனினும் இன்றைய காலகட்டத்தில் வங்கிகளில் கடன் வாங்கியாவது வீட்டை கட்டியாகணும் என்று பலரும் கூறுவதனை நாம் கேட்டிருக்க முடியும்.

வட்டி விகிதத்தினை ஒப்பிட்டு பாருங்கள்

வட்டி விகிதத்தினை ஒப்பிட்டு பாருங்கள்

கடந்த மூன்று மாதங்களாக இந்திய ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தினை குறைத்துள்ள நிலையில், பெரும்பாலான வங்கிகள் எம்சிஎல்ஆர் விகிதத்தினை குறைத்துள்ளன. இந்த நிலையில் வீட்டுக் கடன் எடுக்க திட்டமிட்டு இருந்தீர்கள் என்றால், அது நிச்சயம் இன்னும் உதவும். அனைத்து வங்கிகளும் ஒரே ரெபொ விகிதத்துடன் இணைக்கப்பட்டிருந்தாலும், அந்தந்த வங்கிகளின் EBRs விகிதம் வேறுபடுகின்றன. இதன் காரணமாக வங்கிகளில் வட்டி விகிதம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஆக நீங்கள் சிறந்ததொரு வட்டி விகிதத்தினை பெற விரும்பினால் பல வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்த்து வாங்கலாம்.

எஸ்பிஐ-யில் எவ்வளவு வட்டி

எஸ்பிஐ-யில் எவ்வளவு வட்டி

எஸ்பிஐ-யில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 7.00%ல் இருந்து ஆரம்பிக்கிறது. இது 8.25% வரை வட்டி விகிதம் உள்ளது. ஆனால் உண்மையான வட்டி விகிதமானது உங்களது சுயவிவரத்தின் அடிப்படையில் இருக்கும். மேலும் வீட்டுக் கடனின் அளவை பொறுத்தும் இந்த வட்டி விகிதம் இருக்கும்.

எஸ்பிஐ-யில் செயல்பாட்டு கட்டணம்
 

எஸ்பிஐ-யில் செயல்பாட்டு கட்டணம்

இந்த வீட்டுக்கடனுக்கான செயலாக்க கட்டணம் கடன் தொகையில் 0.40% ஆகும். இதனுடன் ஜிஎஸ்டி தொகையும் அடங்கும். எனினும் சில சமயங்களில் எஸ்பிஐ மற்றும் சில வங்கிகளின் செயலாக்க கட்டணமானது சில சமயங்களில் தள்ளுபடி செய்யப்படுகின்றது. ஆக இந்த சலுகை உங்களுக்கு கிடைக்குமா? என்பதை உங்கள் அருகிலுள்ள கிளைக்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

எவ்வளவு கடனுக்கு எவ்வளவு வட்டி?

எவ்வளவு கடனுக்கு எவ்வளவு வட்டி?

கடன் அளவு 30 லட்சம் ரூபாய் வரையில் உள்ள கடனுக்கு, EBR+35 அடிப்படை புள்ளிகள். ER விகிதம் 7.00% ஆகும்.

கடன் அளவு 30 லட்சம் ரூபாய் முதல் 75 லட்சம் ரூபாய் வரையில் உள்ள கடனுக்கு, EBR+60 அடிப்படை புள்ளிகள். ER விகிதம் 7.25% ஆகும்.

கடன் அளவு 75 லட்சம் ரூபாய்க்கு மேல் முதல் உள்ள கடனுக்கு, EBR+70 அடிப்படை புள்ளிகள். ER விகிதம் 7.35% ஆகும்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வீட்டுக் கடன்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வீட்டுக் கடன்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 6.70%ல் இருந்து ஆரம்பிக்கிறது. இது 7.40% வரை வட்டி விகிதம் உள்ளது. ஆனால் உண்மையான வட்டி விகிதமானது உங்களது சுயவிவரத்தின் அடிப்படையிலும், கிரெடிட் ஸ்கோர் அடிப்படையிலும் இருக்கும். மேலும் வீட்டுக் கடனின் அளவை பொறுத்தும் இந்த வட்டி விகிதம் இருக்கும். இதற்கான செயல்பாட்டு கட்டணம் கடன் அளவில் 0.35% ஆகும். இதனுடன் ஜிஎஸ்டி விகிதமானது குறைந்தபட்சம் 2,500 ரூபாய் முதல் அதிகபட்சம் 15,000 ரூபாய் வரையில் இருக்கலாம்.

பிஎன்பியில் எவ்வளவு கடன்? வட்டி?

பிஎன்பியில் எவ்வளவு கடன்? வட்டி?

Rate of interest (under floating options) present RLLR - 6.65%

சிபில் ஸ்கோர் 750க்கு மேல் உள்ளவர்களுக்கு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 30 லட்சம் ரூபாய் வரையில் பெறும் வீட்டுக் கடனுக்கு RLLR +0.35% (கடன் மதிப்பு LTV 80% வரையில்)

30 லட்சம் ரூபாய் வரையில் பெறும் வீட்டுக் கடனுக்கு RLLR +0.45% (கடன் மதிப்பு LTV 80% - 85% வரையில்)

பிஎன்பியில் எவ்வளவு வட்டி (சிபில் ஸ்கோர் 750-க்கு மேல் உள்ளவர்களுக்கு)

பிஎன்பியில் எவ்வளவு வட்டி (சிபில் ஸ்கோர் 750-க்கு மேல் உள்ளவர்களுக்கு)

Rate of interest (under floating options) present RLLR - 6.65%

சிபில் ஸ்கோர் 750 மேல் உள்ளவர்களுக்கு

30 லட்சம் ரூபாய்க்கு மேல், 75 லட்சம் ரூபாய்க்குள் பெறும் வீட்டுக் கடனுக்கு RLLR +0.50%

75 லட்சம் ரூபாய்க்கு மேல் பெறும் வீட்டுக் கடனுக்கு RLLR +0.50%

பிஎன்பியில் எவ்வளவு வட்டி (சிபில் ஸ்கோர் 700 – 749 இடையில் உள்ளவர்களுக்கு)

பிஎன்பியில் எவ்வளவு வட்டி (சிபில் ஸ்கோர் 700 – 749 இடையில் உள்ளவர்களுக்கு)

Rate of interest (under floating options) present RLLR - 6.65%

சிபில் ஸ்கோர் 700 - 749க்குள் உள்ளவர்களுக்கு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 30 லட்சம் ரூபாய் வரையில் பெறும் வீட்டுக் கடனுக்கு RLLR +0.50% (கடன் மதிப்பு LTV 80% வரையில்)

30 லட்சம் ரூபாய் வரையில் பெறும் வீட்டுக் கடனுக்கு RLLR +0.60% (கடன் மதிப்பு LTV 80% - 85% வரையில்)

பிஎன்பியில் எவ்வளவு வட்டி (சிபில் ஸ்கோர் 700 – 749 இடையில் உள்ளவர்களுக்கு)

பிஎன்பியில் எவ்வளவு வட்டி (சிபில் ஸ்கோர் 700 – 749 இடையில் உள்ளவர்களுக்கு)

Rate of interest (under floating options) present RLLR - 6.65%

சிபில் ஸ்கோர் 700 - 749 உள்ளவர்களுக்கு

30 லட்சம் ரூபாய்க்கு மேல், 75 லட்சம் ரூபாய்க்குள் பெறும் வீட்டுக் கடனுக்கு RLLR +0.50%

75 லட்சம் ரூபாய்க்கு மேல் பெறும் வீட்டுக் கடனுக்கு RLLR +0.50%

பிஎன்பியில் எவ்வளவு வட்டி (சிபில் ஸ்கோர் 700க்கும் கீழ் உள்ளவர்களுக்கு)

பிஎன்பியில் எவ்வளவு வட்டி (சிபில் ஸ்கோர் 700க்கும் கீழ் உள்ளவர்களுக்கு)

Rate of interest (under floating options) present RLLR - 6.65%

சிபில் ஸ்கோர் 700க்கு கீழ் உள்ளவர்களுக்கு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 30 லட்சம் ரூபாய் வரையில் பெறும் வீட்டுக் கடனுக்கு RLLR +0.60% (கடன் மதிப்பு LTV 80% வரையில்)

30 லட்சம் ரூபாய் வரையில் பெறும் வீட்டுக் கடனுக்கு RLLR +0.70% (கடன் மதிப்பு LTV 80% - 85% வரையில்)

இதற்கு எவ்வளவு வட்டி?

இதற்கு எவ்வளவு வட்டி?

Rate of interest (under floating options) present RLLR - 6.65%

சிபில் ஸ்கோர் 700க்கு குறைவாக உள்ளவர்களுக்கு

30 லட்சம் ரூபாய்க்கு மேல், 75 லட்சம் ரூபாய்க்குள் பெறும் வீட்டுக் கடனுக்கு RLLR +0.70%

75 லட்சம் ரூபாய்க்கு மேல் பெறும் வீட்டுக் கடனுக்கு RLLR +0.95%

ஹெச்டிஎஃப்சி வங்கியில் வட்டி விகிதம்?

ஹெச்டிஎஃப்சி வங்கியில் வட்டி விகிதம்?

ஹெச்டிஎஃப்சி வங்கியில் அடமானக் கடனுக்கு 7.50 - 8.50% வட்டி வசூலிக்கப்படுகிறது. ஹெச்டிஎஃப்சி வங்கியில் கடனில் செயல்பாட்டுக் கட்டணம் 0.050% ஆகும். இதற்கு ஜிஎஸ்டி விகிதம் 3,000 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. இந்த வங்கியில் வீட்டுக்கடன் 30 லட்சம் வரையில் குறைந்த வட்டி விகிதமும், 50 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் பெறுபவர்களுக்கு அதிக வட்டி விகிதமும் வசூலிக்கப்படுகிறது.

ஹெச்டிஎஃப்சியில் ரூ.30 லட்சம் வரையிலான வீட்டுக்கடன்

ஹெச்டிஎஃப்சியில் ரூ.30 லட்சம் வரையிலான வீட்டுக்கடன்

பெண்களின் பெயரில் வீட்டுகடன் வாங்கினால், ஹெச்டிஎஃப்சியில் சம்பளதாரர்களுக்கு ரூ.30 லட்சம் வரையிலான கடனுக்கான வட்டி விகிதம் 6.95 - 7.45% வட்டி விகிதமாகும். இதே சொந்த வேலை செய்பவர்களுக்கு வட்டி விகிதம் 6.95 - 7.45% ஆகும்.

இதே மற்றவர்களின் பெயரில் வீட்டுக் கடன் வாங்கும் போது சம்பளதாரர்களுக்கு 7 - 7.50% வட்டியாகும். இதே சுயதொழில் செய்பவர்களுக்கு 7 - 7.50% வட்டியாகும்.

ஹெச்டிஎஃப்சியில் ரூ.30.01 -75 லட்சம் வரையிலான வீட்டுக்கடன்

ஹெச்டிஎஃப்சியில் ரூ.30.01 -75 லட்சம் வரையிலான வீட்டுக்கடன்

பெண்களின் பெயரில் வீட்டுகடன் வாங்கும்போது, ஹெச்டிஎஃப்சியில் சம்பளதாரர்களுக்கு ரூ.30.01 -75 லட்சம் வரையிலான கடனுக்கான வட்டி விகிதம் 7.20 - 7.70% வட்டி விகிதமாகும். இதே சொந்த வேலை செய்பவர்களுக்கும் வட்டி விகிதம் 7.20 - 7.70% ஆகும்.

இதே மற்றவர்களின் பெயரில் வீட்டுக் கடன் வாங்கும் போது சம்பளதாரர்களுக்கு 7.25 - 7.75% வட்டியாகும். இதே சுயதொழில் செய்பவர்களுக்கு 7.25 - 7.75% வட்டியாகும்.

ஹெச்டிஎஃப்சியில் ரூ.75 லட்சத்திற்கு மேல் வீட்டுக்கடன்

ஹெச்டிஎஃப்சியில் ரூ.75 லட்சத்திற்கு மேல் வீட்டுக்கடன்

பெண்களின் பெயரில் வீட்டுகடன் வாங்கும்போது, ஹெச்டிஎஃப்சியில் சம்பளதாரர்களுக்கு ரூ.75 லட்சத்திற்கு மேல் வீட்டுக்கடன் கடனுக்கான வட்டி விகிதம் 7.30 - 7.80% வட்டி விகிதமாகும். இதே சொந்த வேலை செய்பவர்களுக்கும் வட்டி விகிதம் 7.30 - 7.80% ஆகும்.

இதே மற்றவர்களின் பெயரில் வீட்டுக் கடன் வாங்கும் போது சம்பளதாரர்களுக்கு 7.35 - 7.85% வட்டியாகும். இதே சுயதொழில் செய்பவர்களுக்கு 7.35 - 7.85% வட்டியாகும்.

ஐசிஐசிஐ வங்கியில் எவ்வளவு வட்டி?

ஐசிஐசிஐ வங்கியில் எவ்வளவு வட்டி?

ஐசிஐசிஐ வங்கியில் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 7.70% - 8.80% ஆகும். வீட்டுக்கடன் 35 லட்சம் ரூபாய் வரையில் பெறும் கடனுக்கு 7.70% வட்டி விகிதமாகும்.

இதே 35 லட்சம் ரூபாய் முதல் 75 லட்சம் ரூபாய் வரையில் 7.95% வட்டி விகிதமாகும். இதற்கான செயல்பாட்டுக் கட்டணம் 0.5 - 1% ஆகும். இதோடு ஜிஎஸ்டி விகிதம் 1500 ரூபாய் வரையில் இருக்கும்.

பெங்களுரு, டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் செயல்பாட்டுக் கட்டணம் அதிகபட்சமாக 2000 ரூபாய் வரையில் இருக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

You know Sbi, pnb, icici bank and HDFC bank home loan interest rates?

Home loan interest rate.. You know Sbi, pnb, icici bank and HDFC bank home loan interest rates
Story first published: Tuesday, July 21, 2020, 17:32 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X