உலகின் இந்த நகரங்களில் வீட்டு விலை ரொம்ப அதிகமுங்க..!

By Srinivasan P M
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இங்கிலாந்தில் நிதி நெருக்கடிகள் தொடங்கியவுடன் சொத்துக்கள் சந்தை மிகவும் பரபரப்பாகக் காணப்படுகின்றன. குறிப்பாக விண்ணை முட்டும் வீட்டு விலைகள் அதுவும் லண்டனில் சொல்லவும் முடியாத அளவிற்கு ஒரு சராசரியான வீட்டின் மதிப்பு 550,000 பவுண்டுகள் அல்லது 727,584 அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் உள்ளன. இது இந்திய ரூபாயின் மதிப்பில் சுமார் ஐந்து கோடி.

 
உலகின் இந்த நகரங்களில் வீட்டு விலை ரொம்ப அதிகமுங்க..!

எனினும் உலகின் மற்ற நகரங்களை ஒப்பிடுகையில் லண்டன் நகர விலை உயர்வு ஆமை வேகம் தான். உலக அளவிலான நிலம் மற்றும் வீட்டு தரகர்கள் மற்றும் வல்லுநர்களான நைட் பிராங்க் நிறுவனம் வெளியிட்டுள்ள உலக நகரங்கள் ஆய்வறிக்கையில் உலகின் பல்வேறு முன்னணி நகரங்களில் சொத்து விலை நிலவரங்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையின் படி, நைட் பிராங்க் பல்வேறு நகரங்களில் முக்கிய பகுதிகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களை அலசி ஆராய்ந்து பொதுவாக ஒரு சாதாரண வீட்டின் விலை எவ்வாறு உலக அளவில் உயர்ந்து வருகிறது என்பதைத் தெரிவிக்கிறது. இந்த நிறுவனம் தந்துள்ள முதல் பத்து நகரங்கள் கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைந்தது 15 சதவிகித விலை உயர்வைக் கண்டதோடு, அதிகபட்சமாக முதல் இடத்தில் இருக்கும் நகரம் ஒரே வருடத்தில் 60% விலை உயர்வைக் கண்டுள்ளது.

கடந்த வருடம் சராசரி வீடுகளின் விலைகளை உயர்வை அதிகம் கண்ட நகரங்களைப் பற்றி பார்க்கலாம் வாங்க.

10. லக்னோ

10. லக்னோ

லக்னோ, இந்தியா - 16.1%. வட இந்தியாவின் உத்திர பிரதேசத்தில் அமைந்துள்ள இந்த நகரம் ஹோண்டா கார் நிறுவனத்தின் முதலீடுகளை அதிகம் பெற்றதோடு அண்மையில் ஒரு புதிய தொழிற்சாலையையும் துவக்கியுள்ளது. முதலீடுகள் உயர்ந்ததால் வீட்டு விலைகளும் உயர்ந்துள்ளன.

9. இஸ்மிர்

9. இஸ்மிர்

இஸ்மிர், துருக்கி - 16.7%. துருக்கியின் மேற்குக் கரையோரம் அமைந்துள்ள இஸ்மிர் அண்மையில் பல்வேறு முதலீடுகளையும் அடிப்படைக்குக் கட்டமைப்புகளையும் பெற்று அதன் விளைவாக வீடுகள் மற்றும் சொத்துக்கள் மதிப்பும் உயர்ந்துள்ளது. அது மட்டுமின்றி இஸ்மிர் நகரம் ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தைக் கொண்டுள்ளது. இது துருக்கியில் சற்று அரிதான ஒன்று.

8. ஆக்லாந்து
 

8. ஆக்லாந்து

ஆக்லாந்து, நியூசிலாந்து - 16.9%. சீனர்கள் பெருமளவு நியூசிலாந்து சந்தைகளில் முதலீடு செய்வதால் இங்கு வீடுகளின் விலை அண்மையில் உயர்ந்து வருகிறது. வீடுகள் பற்றாக்குறையும் இதற்கு ஒரு காரணமாகி சொல்லப்படுகிறது

7. வான்கூவர்

7. வான்கூவர்

வான்கூவர், கனடா - 17.3%. தூரக் கிழக்கு நாடுகளின் முதலீடுகளின் துணையுடன் வான்கூவர் நகர வீட்டு விலைகள் உயர்ந்தவண்ணம் உள்ளன. இதனால் பெருமளவு வீடுகள் காலியாக இருப்பதும் நிலைமையை மோசமடையச் செய்துள்ளது.

6. ஸ்டாக்ஹோம்

6. ஸ்டாக்ஹோம்

ஸ்டாக்ஹோம், சுவீடன் - 17.4%. உலகின் வீட்டு வசதிச் சந்தையில் ஸ்டாக்ஹோம் மற்றுமொரு பிரபலமான நகரம். சுவீடனின் இந்த வளர்ச்சிக்கு அங்கு நிலவும் குறைந்த வட்டி விகிதங்கள் மற்றும் வீட்டுத் தேவைக்கும் அவற்றைப் பூர்த்தி செய்யத் தேவையாக உள்ள வீடுகளுக்கும் உள்ள ஏற்றத் தாழ்வு ஆகியவை காரணமாக உள்ளன.

5. பெய்ஜிங்

5. பெய்ஜிங்

பெய்ஜிங், சீனா - 17.6%. சீனாவின் தலைநகரம் அதன் பொருளாதார வளர்ச்சி மையம் என்பதோடு சீனாவின் வளர்ச்சி தொடர்வதால் வீட்டு விலைகளும் உயரவே வாய்ப்புள்ளன.

4. நான்ஜிங்

4. நான்ஜிங்

நான்ஜிங், சீனா- 17.8%. சுமார் 80 லட்சம் மற்றும் அதற்கும் மேலும் பெருகிவரும் மக்கள் தொகையுடைய இந்த நகரம் உலகின் மிகப்பெரிய கடல்சாரா துறைமுகமாகச் சீனாவின் மையப்பகுதியிலிருந்து சரக்குகளை ஒருங்கிணைக்கும் மையமாகத் திகழ்கிறது.

மிக்க குறைந்த வட்டியில் கிடைக்கும் கடன் சொத்து முதலீடுகளை ஈர்ப்பதால் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்த நகரத்தில் விலைகள் 3.4% வரை உயர்ந்துள்ளன.

3. இஸ்தான்புல்

3. இஸ்தான்புல்

இஸ்தான்புல், துருக்கி - 19.6%. துருக்கியின் உள்நாட்டு நெருக்கடி நிலவரங்களை அப்பாற்பட்டு, அரபு முதலீட்டாளர்கள் இங்கு முதலீடுகளைக் குவித்த வண்ணம் இருப்பதால் வீட்டு விலைகள் இங்கு விண்ணை முட்டுகின்றன.

2. சாங்காய்

2. சாங்காய்

சாங்காய், சீனா - 30.5%. சீனாவின் நிதி மையமான இந்த நகரம் உலகின் மிகவும் அதிகமான வீட்டு விலைகளைக் கொண்டதாக உள்ளது. நகரப் பெருக்கத்தின் மத்தியில் ஒரு இடத்தை தங்களுக்கெனப் பெற ஒவ்வொருவரும் முயலுவதால் விலைகள் தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளன.

1. ஷென்ஷன்

1. ஷென்ஷன்

ஷென்ஷன் (Shenzhen ), சீனா - 62.5%. ஹாங் காங் நீர்ப்பரப்பில் எதிர்த் திசையில் அமைந்துள்ள இந்த நகரம் தொழில் நுட்ப உதிரிப்பாகங்கள் மற்றும் கருவிகளின் உற்பத்திமையமாக அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. சீனாவின் "சிலிகான் வேலி"-யாக இது கருதப்படுவதால் இங்கு வீட்டுத் தேவை அதிகமாகவும் உலகில் எந்த ஒரு நகரத்திலும் இல்லாத அளவிற்கு விலை உயர்வும் இங்குக் காணப்படுகிறது.

சூப்பர் ஐடியா..!

10 வருடத்தில் ரூ.17 லட்சம் சேமிக்க சூப்பர் ஐடியா..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

10 Global cities where house price are very high

0 Global cities where house price are very high
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X