130 வருட நிறுவனம் மூன்றாக உடைகிறது: ஜெனரல் எலக்ட்ரிக்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்கா மட்டும் அல்லாமல் மொத்த உலகையும் தனது கண்டுபிடிப்புகளாலும், தயாரிப்புகளாலும் மக்களை வியப்பில் கட்டிப்போட்டு இருந்த ஜெனரல் எலக்ட்ரிக் கடந்த சில வருடங்களாக மிகவும் குறைந்த அளவிலான லாபத்தை மட்டுமே அடைந்து வருகிறது.

 

இந்நிலையில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், நிர்வாகத்தை மேம்படுத்தவும் ஜெனரல் எலக்ட்ரிக் 3 பிரிவுகளாக உடைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

பிட்காயின், எதிரியம் புதிய உச்சம்.. 3 டிரில்லியன் டாலரை தொட்ட கிரிப்டோ சந்தை..!

 தாமஸ் ஆல்வா எடிசன்

தாமஸ் ஆல்வா எடிசன்

1889ல் தாமஸ் ஆல்வா எடிசன் தனது வர்த்தகக் கனவுகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக எடிசன் லேம்ப் கம்பெனி உருவாக்கினார், அதன் பின்பு பல நிறுவன கைப்பற்றல், சேவை விரிவாக்கம், நிர்வாக மாற்றம், நிதியியலில் பிரச்சனை பலவற்றைச் சந்தித்து 130 வருடங்களாக இயங்கி வருகிறது.

 ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம்

ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம்

ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் அமெரிக்காவின் பாஸ்டன் நகரை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் பல நாடுகளில் வர்த்தகம், ஆராய்ச்சி கூடம் எனப் பிரம்மாண்டமாக இயங்கி வருகிறது. இந்தியாவில் ஜெனரல் எலக்ட்ரிக் 19,000க்கும் அதிகமான ஊழியர்கள், 15 உற்பத்தி தளங்கள், 5 டெக்னாலஜி சென்டர், மற்றும் 3500க்கும் அதிகமான பேடென்டட் என விரிவடைந்துள்ளது

 பல துறை வர்த்தகம்
 

பல துறை வர்த்தகம்

ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் ஏவியேஷன், பவர், புதுப்பிக்கத்தக்க எனர்ஜி, டிஜிட்டல், ஆயுத உற்பத்தி, லோகோமோட்டிவ், வென்சர் கேப்பிடல் மற்றும் பைனான்ஸ் ஆகிய துறையில் இயங்கி வந்தது. ஆனால் பல காரணங்களுக்காகப் பல துறையில் வெளியேறிவிட்டது ஜெனரல் எலக்ட்ரிக். தற்போது ஜெனரல் எலக்ட்ரிக் 4 முக்கியப் பிரிவில் அதிகப்படியான கவனத்தைச் செலுத்தி கடந்த சில வருடங்களாக இயங்கி வருகிறது.

 3 பிரிவுகளாக உடைப்பு

3 பிரிவுகளாக உடைப்பு

இந்நிலையில் ஜெனரல் எலக்ட்ரிக் உயர்மட்ட நிர்வாகம் ஏவியேஷன், ஹெல்த்கேர் மற்றும் எனர்ஜி (புதுப்பிக்கத்தக்க எனர்ஜி மற்றும் டிஜிட்டல்) என மூன்று பிரிவுகளாகத் தனித்தனியாக உடைக்கப்பட்டுத் தனி நிறுவனமாக இயக்க முடிவு செய்துள்ளது. இதில் முதலாவதாக 2023ல் ஹெல்த்கேர் பிரிவைத் தனியாகப் பிரிக்கவும், அதன் பின்பு 2024ல் எனர்ஜி வர்த்தகத்தைத் தனியாகப் பிரிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

 ஹெல்த்கேர் பிரிவு

ஹெல்த்கேர் பிரிவு

இதில் ஹெல்த்கேர் பிரிவு மிகவும் முக்கியமான வர்த்தகமாக உள்ளது, இந்நிறுவனம் தான் பல்வேறு மருத்துவ ஆய்வு கருவிகள், இயந்திரங்களைத் தயாரித்து வருகிறது, குறிப்பாக எக்ஸ்ரே, டிஜிட்டல் மேமோகிராபி மற்றும் நியூக்ளியர் இமேஜிங் கருவிகளில் ஜெனரல் எலக்ட்ரிக் முன்னோடியாக உள்ளது.

 பல நன்மைகள்

பல நன்மைகள்

உலகின் மிகப்பெரிய நிறுவனமாக இருக்கும் ஜெனரல் எலக்ட்ரிக் மூன்றாக இடையும் போதும் அதிகப்படியான கவனத்தைச் செலுத்த முடியும், மூலதனத்தைச் சிறப்பான முறையில் நிர்வகிக்கப்படும், நீண்ட காலத் திட்டத்தை எளிதாக வகுக்க முடியும், வாடிக்கையாளர் சேவையைப் பெரிய அளவில் மேம்படுத்த முடியும்.

 லாரன்ஸ் கல்ப் ஜூனியர்

லாரன்ஸ் கல்ப் ஜூனியர்

அனைத்தையும் தாண்டி முதலீட்டாளர்கள் மற்றும் ஊழியர்களுக்குப் பெரும் நம்பிக்கையை அளிக்க முடியும் என ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்தின் சேர்மன் மற்றும் சிஇஓ-வான

லாரன்ஸ் கல்ப் ஜூனியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 3 நிறுவனம் 3 தலைவர்

3 நிறுவனம் 3 தலைவர்

ஜெனரல் எலக்ட்ரிக் 3 நிறுவனமாக உடைந்த பின்பு ஏவியேஷன் பிரிவுக்கு ஜான் ஸ்லேட்டரி சிஇஓ-வாகவும், ஹெல்த் கேர் பிரிவுக்கு

பீட்டர் அர்டுயினி சிஇஓ-வாகவும், எனர்ஜி பிரிவுக்கு ஸ்காட் ஸ்ட்ராசிக் சிஇஓ-வாகவும் விளங்க உள்ளனர். இதுமட்டும் அல்லாமல் லாரன்ஸ் கல்ப் ஜூனியர் முக்கியப் பதவிகளில் தொடர்வார் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

 அதிக லாபம் ஏவியேஷன்

அதிக லாபம் ஏவியேஷன்

ஜெனரல் எலக்ட்ரிக் குழுமத்தில் அதிகம் லாபம் கொடுக்கும் பிரிவு என்றால் அது ஏவியேஷன் பிரிவு தான். ஜெனரல் எலக்ட்ரிக் ஏவியேஷன் பிரிவு வர்த்தக, ராணுவ மற்றும் எக்ஸ்கியூடிவ் விமானங்களுக்கு ஜெட் இன்ஜின், ஏரோஸ்பேஸ் சிஸ்டம்ஸ், உதிரிபாகங்கள் மற்றும் மெயின்டனன்ஸ் சேவை அளிக்கிறது.

 2 பில்லியன் டாலர் செலவு

2 பில்லியன் டாலர் செலவு

ஜெனரல் எலக்ட்ரிக் குழுமம் ஒரே நேரத்தில் 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டால் 2 பில்லியன் டாலருக்கும் அதிகமாகச் செலவு ஏற்படும் காரணத்தால், செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காக 2023ல் ஹெல்த்கேர், 2024தில் எனர்ஜி என அடுத்தடுத்த வருடம் பிரிக்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

130 years old General Electric split into 3 public companies

130 years old General Electric split into 3 public companies
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X