கொரோனாவால் 20 லட்சம் அமெரிக்கர்கள் மரணமடையலாம்! 1,300 புள்ளிகள் சரிந்த டவ் ஜோன்ஸ்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகில் கொரோனா பயம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த பயத்தை கட்டுப்படுத்துவதே, நாட்டுத் தலைவர்களின் தலையாய கடமையாகத் தெரிகிறது.

உலக அளவில் கொரோனா சுமார் 2 லட்சம் பேருக்கு மேல் பாதித்து இருக்கிறது. சுமார் 8,270 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அரசு கொரோனாவுக்கு எந்த சரியான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் சுமார் 20 லட்சம் அமெரிக்கர்கள் மரணமடையலாம் எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

கணிப்பு

கணிப்பு

இம்பீரியல் காலேஜ் லண்டன் ஆராய்ச்சியாளர்கள் ஒரு கணிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள். அவர்கள் கணக்குப் படி அமெரிக்கா கொரோனாவுக்கு சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால், சுமார் 80 % அமெரிக்கர்களுக்கு கொரோனா தொற்று வரலாம். அதோடு சுமார் 2.2 லட்சம் அமெரிக்கர்கள் உயிரிழக்கலாம் எனச் சொல்லி இருக்கிறார்கள்.

கட்டுப்படுத்தல்

கட்டுப்படுத்தல்

அமெரிக்கா இந்த கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து, சமூக தொடர்புகளைக் குறைத்தால் சுமார் 2 லட்சம் பேர் வரை அமெரிக்கர்கள் உயிரிழக்கலாம் எனச் சொல்கிறார்கள். இதுவரை கொரோனாவுக்கு 100 அமெரிக்கர்கள் பலியாகி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு நடவடிக்கை

பாதுகாப்பு நடவடிக்கை

சமூக தொடர்பு (Social Contact), கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனியாக வைத்து பார்த்துக் கொள்வது, அவர்களின் குடும்ப உறுப்பினர்களை தனியாக வைத்துப் பராமரிப்பது போன்றவைகள் தான் கொரோனாவைக் கட்டுப்படுத்தக் கூடிய ஒரே வழியாக இருக்கும். இந்த வழிமுறையை அடுத்த 18 மாதங்களுக்காவது குறைந்தபட்சம் செய்ய வேண்டும் என்கிறார்கள்.

மாற்று மருந்து

மாற்று மருந்து

சமீபத்தில் கொரோனா வைரஸுக்கு mRNA 1273 என்கிற மருந்து பரிசோதனை செய்வதாகச் செய்திகள் வெளியாயின. ஆனால் அந்த சோதனை வெற்றிய அடைந்ததா இல்லையா என்பது பற்றியச் செய்திகள் இதுவரை வெளியானதாகத் தெரியவில்லை. எனவே ஒரு மாற்று மருந்து பரவலாக கிடைக்கும் வரை, சமூக தொடர்புகளை கூடுமான வரை கட்டுப்படுத்துவது தான் ஒரே வழி எனச் சொல்கிறது லண்டனின் இம்பீரியல் காலேஜ் ஆராய்ச்சிகள்.

பங்குச் சந்தை

பங்குச் சந்தை

இந்த பதட்டத்தில் பங்குச் சந்தைகள் எல்லாம் பயங்கரமாக சரிந்து கொண்டு இருக்கின்றன. நேற்று ஒரே நாளில் அமெரிக்காவின் டவ் ஜோன்ஸ் 1,338 புள்ளிகள் சரிந்து, 19,898 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. இந்த 19,898 புள்ளிகள் எல்லாம், கடந்த பிப்ரவரி 2017-ல் வர்த்தகமாகிக் கொண்டு இருந்த லெவல்களாம். அந்த் அளவுக்கு அமெரிக்க பங்குச் சந்தைகள் மிகப் பெரிய சரிவைக் கண்டு இருப்பதாக்ச் சொல்கிறார்கள் பங்குச் சந்தை வல்லுநர்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

2 million Americans could die of coronavirus dow jones down 6 percent

Imperial college of London said that if the USA dint do the necessary steps to control coronavirus 2 million american may die. The american share market dowjones fall around 1338 points and closed 19,898 at Feb 2017 levels.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X