ரோபோக்கல் ஆக்ரமிப்பு செய்துள்ள உங்களுடைய 15 வேலை வாய்ப்புகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களது வேலை நிரந்தரமானதா..? அப்படி நினைத்துக் கொண்டு இருக்க வேண்டாம். 30 வருடங்களில் பெரும்பாலான துறையில் ரோபோக்கல் தங்களது ஆதிகத்தைச் செலுத்தும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 

எனவே நாங்கள் உங்களுக்காக இங்கு ஏற்கனவே ரோபோக்கல் ஆக்ரமிப்பு செய்துள்ள 15 வேலை வாய்ப்புகளைப் பற்றி பட்டியலிட்டுள்ளோம்.

சமையல் காரர்

சமையல் காரர்

மேலே ரோபோடிக்ஸ் என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம் 100 சதவீதம் திறமை வாய்ந்த ரோபோட் சமையல் இயந்திரத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த ஆடோமேட்டிக் இயந்திரம் சமையலை கற்றுக்கொள்ளவும் செய்யும் என்பது சிறப்பு.

தொழிற்சாலை ஊழியர்

தொழிற்சாலை ஊழியர்

உற்பத்தித் துறைகள் விரைவில் இயந்திர மையமாக மாற்றப்பட வாய்ப்புள்ளது. இந்த வருடத்தின் துவக்கத்தில் ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்களுக்குப் போன்களை அளித்து வரும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் சீனாவில் மட்டும் 60,000 ஊழியர்களை நீக்கி ரோபோட்களை பணியில் அமர்த்தியது.

இதேப் போன்று இந்தியாவிலும் 10,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துவிட்டு ரோபாட்களை பணியில் அமர்த்த இருப்பதாக ரேமண்ட்ஸ் நிறுவனம் அறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அறுவை சிகிச்சை நிபுணர்
 

அறுவை சிகிச்சை நிபுணர்

மருத்துவமனைகளில் உள்ள அறுவை சிகிச்சை கூடங்களில் ஏற்கனவே ரோபோட்கள் நுழையத் துவங்கிவிட்டன.

கால் முட்டி அறுவை சிகிச்சை, முட்டி மாற்றுதல், போன்று பல சிகிச்சைகளை இந்த ரோபக்கல் செய்யத் துவங்கி உள்ளன. இதற்காக 15 மில்லியன் வழிமுறைகளை இந்த ரோபோக்களுக்கு பொருத்தி உள்ளனர்.

சில்லறை விற்பனை கூட்டாளி

சில்லறை விற்பனை கூட்டாளி

பெப்பர் எனப்படு ரோபோ ஆசிரியர்களுக்கு மாற்றாக உருவாக்கப்பட்டது. நெஸ்ட்லே நிறுவனம் பெப்பர் ரோபோவை தனது நிறுவனத்தின் ஸ்டோர்களில் விற்பனையாளரக செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதுவரை பெப்பர் ரோபோ பல நாடுகளில் 1,000 ஸ்டோர்களில் பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு அதிகாரி

பாதுகாப்பு அதிகாரி

பல நிறுவனங்களில் ரோபோடிக் பாதுகாப்பு அதிகாரி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கே5 ரோபோக்கள் தன்னைச் சுற்றி நடக்கும் சந்தேகத்திற்கிடமான நடத்தை நடவடிக்கைகளை கண்காணித்து சம்மந்த பட்டவர்களுக்குத் தகவலை அனுப்பும்.

ஷெப்பர்ட் - ஆட்டிடையன்

ஷெப்பர்ட் - ஆட்டிடையன்

ஆஸ்த்ரேலியாவின் களம் எந்திர அறிவியல் பிரிவு ஆடு, மாடு போன்ற விலங்குகளை கண்காணிக்க கூடிய எந்திரத்தைத் தயாரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

இது விலங்குகளை கண்காணிப்பது, பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்வது, சுகாதாரமாக உள்ளதா என்பதைக் கண்டறிய மற்றும் எவ்வளவு தீவனம் எடுத்துள்ளது, எவ்வளவு மேய்ந்துள்ளது போன்றவற்றைக் கண்காணிக்கும்.

விவசாயி

விவசாயி

ஜப்பானில் உலகின் முதல் ரோபோட் விவசாய நிலம் விரைவில் துவங்கப்பட உள்ளது. இதில் காய்கறிகளை முதலில் உற்பத்தி செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த ரோபோக்கள் தண்ணீர் ஊற்றுதல், அறுவடை செய்தல், செடிகளை பராமரித்தல் போன்றவற்றைச் செய்யக்கூடியவையாக உருவாக்கப்பட்டுள்ளது.

மருந்தாளர்

மருந்தாளர்

பில் கணக்கிடும் சாதனம் பல வருடங்களாகப் பயன்பாட்டில் உள்ளது. அதில் இப்போது புது புது ரோபோட்டிக் தொழில்நுட்ப்பங்களை புகுத்தி மருந்து சீட்டை வைத்து தேவையான மருத்துவ பொருட்களை விநியோகிக்கும் சாதனத்தை உருவாக்கி உள்ளனர்.

மனித மருந்தாளர் தவறான மருந்துகளை அளிப்பதால் ஏற்படக் கூடிய பல மரணங்களை இதன் மூலம் தவிர்க்கலாம் என்று கூறப்படுகிறது.

உணவு விநியோக ஊழியர்

உணவு விநியோக ஊழியர்

ஒரு மாதத்திற்கு முன்பு லண்டினில் உணவு விநியோகம் செய்ய ரோபோ ஒன்று பணியில் அமர்த்தி உள்ளது. ஜிபிஎஸ், கேமரா போன்றவற்றைப் பயன்படுத்தி இயங்கு இந்த ரோபோக்களிடம் இருந்து யாரேனும் திருட முயன்றால் பாதுகாப்பு மையத்திற்கு படத்துடுடன் தகலையும் அனுப்பிவிடும்.

பத்திரிக்கையாளர்

பத்திரிக்கையாளர்

சைன்ஸ் ஃபிக்‌ஷன் போன்ற கட்டுரைகள் எழுதுவது, அறிக்கைகள் எழுதுவது போன்றவற்றிற்காக அமெரிக்க டெக் நிறுவனம் நரேட்டிவ் சையின்ஸ் ஒரு மென்பொருளை உருவாக்கி பயன்பாட்டிற்கும் கொண்டுவந்துள்ளது.

இதனை ஃபோர்ப்ஸ் நிறுவனம் நிதி மற்றும் விளையாட்டு துறை அறிக்கைகளுக்காக பயன்படுத்தி வருகிறது.

இராணுவ வீரர்

இராணுவ வீரர்

ஆயுதங்களுடன் பேரிடக்கூடிய ட்ரான்ஸ் ரோபோக்களை நூற்றுக்கணக்கான இராணுவ வீரர்களுக்குப் பதிலாக அமெரிக்க ராணுவம் பயன்படுத்தி உள்ளது. மேலும் 2030 ஆம் ஆண்டிற்கும் அமெரிக்க ராணுவத்தில் இருந்து கால் பகுதி வீரர்கள் குறைக்கப்படுவர் என்று கூறிவருகிறார்கள்.

வரவேற்பாளர்

வரவேற்பாளர்

மனிதர்களைப் போன்று சிறப்பான வரவேற்பை அளிக்க முடியாது என்றாலும் பல நிறுவனங்கள், தங்கும் விடுதிகளில் முக்கியமாக ஜப்பானின் டோக்கியோவில் உள்ள மிட்சுபுஷி, நாகாசாகியில் உள்ள ஹென் நா ஹோட்டல் போன்றவற்றில் பயன்படுத்தி வருகின்றனர்.

டெலி சேல்ஸ்

டெலி சேல்ஸ்

ரோபோட்களினால் டெலி சேல்ஸ் ஊழியர்கள் பெறும் அளவில் பாதிக்கப்பட்டுளதாக ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் ஆய்வு தெரிவிக்கிறது.

கட்டட தொழிலாளர்

கட்டட தொழிலாளர்

சீனாவில் 3டி பிரண்டார்களை பயன்படுத்திக் குறைவான மனித தொழிலாளர்களுடன் கட்டடம் கட்டும் தொழில்நுட்பத்தை பல நிறுவனங்கள் பயன்படுத்த துவங்கி உள்ளன.

இதனை பயன்படுத்தி 45 நாட்களில் ஒரு வீட்டை கட்டமுடியும். கட்டுமான தொழிலாளர்கள் வெறுமனே வயரிங் மற்றும் பிளம்பிங் போன்றவற்றைச் செய்தால் போதும் மற்றதை ரோபோக்கலே கவனித்துக்கொள்ளும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

21 jobs where robots are already replacing humans

21 jobs where robots are already replacing humans
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X