300% வரியை உயர்த்திய சவுதி அரேபியா! மறு பக்கம் IMF ரெசசன் எச்சரிக்கை! பணக்கார சவுதிக்கே இந்த நிலையா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த நாட்டுக்கு எல்லாம் பசி, பட்டினி, பஞ்சம் எல்லாம் வருமா..? என நினைத்துக் கூடப் பார்க்காத சவுதி அரேபியா எல்லாம், இப்போது கொரோனாவால் நடுத் தெருவுக்கு வந்திருக்கிறது.

நடுத் தெருவுக்கு வந்திருக்கிறது என்று சொல்வது சரி தானா..? என்று கேட்டால் ஆம் சரி தான். அதற்கான காரணங்களில் இருந்தே தொடங்குவோம்.

முதலில் சவுதி அரேபியாவில் என்ன பிரச்சனை எனப் பார்ப்போம்.

கச்சா எண்ணெய்
 

கச்சா எண்ணெய்

உலக அளவில் அதிகம் கச்சா எண்ணெய் வைத்திருக்கும் நாடுகள் பட்டியலில் முன் வரிசையில் சவுதி அரேபியாவும் ஒன்று. இன்று உலகில் கச்சா எண்ணெய் சப்ளையிலும் சவுதி டாப் 5 நாடுகளில் ஒன்று. சுருக்கமாக, கச்சா எண்ணெய் ராஜாக்களில் இந்த சவுதி அரேபியாவும் ஒன்று. கச்சா எண்ணெய் விலை, இந்த ராஜாவையும் கண்ணீர் விட வைத்திருக்கிறது.

கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

கடந்த ஜனவரி 2020-ல் இருந்தே கச்சா எண்ணெய் விலை சர சரவென சரிந்து கொண்டு இருக்கிறது. கடந்த ஜனவரி 2020-ல் சுமாராக 65 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருந்த பிரண்ட் கச்சா எண்ணெய் விலை, இன்று சுமாராக 30 டாலருக்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

வருவாய் டவுன்

வருவாய் டவுன்

இப்படி கச்சா எண்ணெய் விலை பாலைவனம் போல வறண்டு இருப்பதால் எண்ணெய் வழியாக, சவுதி அரேபியாவுக்கு வரும் வருவாயும், கடந்த ஆண்டை விட 24 % சரிந்து இருக்கிறதாம். கொரோனா லாக் டவுனால் எண்ணெய் அல்லாத வருவாய்களும் சுமார் 17 % சரிந்து இருக்கிறதாம்.

விளைவுகள்
 

விளைவுகள்

இப்படி அரசுக்கு வர வேண்டிய வருவாய் எல்லாம் சரிந்து இருப்பதால், தன் பட்ஜெட் தேவைகளைப் பூர்த்தி செய்ய, சவுதி அரேபிய அரசு, தன் அந்நிய செலாவணி கையிருப்பை வைத்து சமாளித்துக் கொண்டு இருக்கிறதாம். இப்படி, கடந்த மார்ச் 2020-ல் மட்டும், அந்நிய செலாவணி கையிருப்பில் இருந்து, சுமார் 27 பில்லியன் டாலர் (100 பில்லியன் ரியால்) செலவழித்து இருக்கிறார்களாம்.

Forex வீழ்ச்சி

Forex வீழ்ச்சி

மேலே சொன்னது போல அந்நிய செலாவணி கையிருப்பில் இருந்து தன் பட்ஜெட் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளத் தொடங்கி இருப்பதால், கடந்த 2011-ம் ஆண்டுக்குப் பின் வரலாறு காணாத அளவுக்கு, 464 பில்லியன் டாலராக, சவுதி அரசின் அந்நிய செலாவணி கையிருப்பு சரிந்து இருப்பதாக ப்ளூம்பெர்க் செய்திகள் சொல்கின்றன.

2021 முடிவில்

2021 முடிவில்

இப்படியே அந்நிய செலாவணியில் இருந்து பணத்தை எடுத்து செலவழித்துக் கொண்டே இருந்தால், 2021-ம் ஆண்டு முடிவில், சவுதி அரேபியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 375 பில்லியன் டாலருக்கு சரிந்து விடும் எனவும் மூடிஸ் ரேட்டிங் ஏஜென்ஸி கணித்து இருக்கிறது.

வரி

வரி

இப்படி, சேர்த்து வைத்து இருக்கும் அந்நிய செலாவணிகளை எல்லாம் செலவழிக்காமல் இருக்க, தன் நாட்டின் வாட் வரியை 5 சதவிகிதத்தில் இருந்து தடலாடியாக 300 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது. இனி வரும் ஜூலையில் இருந்து சவுதியில் 15 % வாட் வரி வசுலிக்கப்படுமாம்.

செலவு குறைப்பு

செலவு குறைப்பு

ஒரு பக்கம் வருவாயை அதிகரிப்பது போலவே, செலவையும் குறைத்தால் தானே வண்டியை ஓட்ட முடியும்..? எனவே சவுதி தன் நாட்டு மக்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு முதல் வழங்கி வந்த cost-of-living allowance-ஐ ஜூன் முதல் நிறுத்த இருக்கிறார்களாம். இதனால் அரசுக்கு சுமார் 13.5 பில்லியன் டாலர் ஒரு ஆண்டுக்கு மிச்சப்படுத்த முடியுமாம்.

ரெசசன்

ரெசசன்

இதை எல்லாம் விட இன்னொரு கொடுமையான விஷயம் என்ன என்றால், சர்வதேச பன்னாட்டு நிதியம் (IMF), கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் வளைகுடா அரபு நாடுகள் எல்லாம், இந்த ஆண்டிலேயே ரெசசனை சந்திக்கும் எனவும் கணித்து, எச்சரித்து இருக்கிறார்கள்.

ஏழைகள்

ஏழைகள்

இப்படி செலவுகளை எல்லாம் குறைத்துக் கொண்டிருக்க, சவுதியில் வாழும் ஏழை மக்கள் பாதிக்கபப்டாமல் இருக்க 0.5 பில்லியன் டாலர் (2.18 பில்லியன் ரியால்) பணத்தை, 1.2 கோடி ஏழை மக்களின் கணக்குகளில் டெபாசிட் செய்து இருப்பதாக சவுதி அரேபிய அரசாங்கமே சொல்லி இருக்கிறது.

சவுதிக்கே அடியா

சவுதிக்கே அடியா

கச்சா எண்ணெய் தேவை சரிவு, போதாக்குறைக்கும் விற்பனை ஆகும் கொஞ்ச நஞ்ச கச்சா எண்ணெய் விலையும் தரை தட்டி இருப்பது,

கொரோனாவால் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பொருளாதார நடவடிக்கைகள் நடக்காமல் இருப்பது,

அதோடு கொரோனாவுக்காக சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையில் செலவழிக்க வேண்டிய கட்டாயம்...

என பல காரணங்கள் ஒன்று சேர்ந்து பணக்கார சவுதி அரேபிய நாட்டையே, வாட் வரியை அதிகரிக்க வைத்திருக்கிறது என்றால் பிரச்சனை புரியும் என நினைக்கிறேன்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

300 percent VAT increased in Saudi Arabia to manage their budget

The Saudi Arabia government has increased the Value Added Tax 300 percent. This rise will be amended from July 2020. Saudi has increased the tax to manage their budget amidst oil price and demand collapse.
Story first published: Monday, May 11, 2020, 19:30 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X