5 லட்சம் இலவச விமான டிக்கெட்.. ஹாங்காங் கொடுத்த அட்டகாசமான வாய்ப்பு.. எதற்காக தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெளி நாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஹாங்காங் ஏர்லைன்ஸ் 5 லட்சம் விமான டிக்கெட்டுகளை இலவசமாக அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

 

சீனாவின் அருகே அமைந்திருக்கும் தீவு நாடான ஹாங்காங்கில், பல கண்ணை கவரும் சுற்றுலா தலங்கள் உள்ளன.

இயற்கையுடன் ஒன்றிய அதன் பிரம்மாண்ட அழகை ரசிக்கவும், அதன் சுற்றுலா வணிகத்தினை மேம்படுத்தவும் ஹாங்காங் அரசு, ஒரு பிரம்மாண்ட திட்டத்தினை கையில் எடுத்துள்ளது.

இந்தியாவில் ஐபிஓ வெளியிட திட்டமிடும் ஹாங்காங் நிறுவனம்.. மோடி அரசு அனுமதி அளிக்குமா..?! இந்தியாவில் ஐபிஓ வெளியிட திட்டமிடும் ஹாங்காங் நிறுவனம்.. மோடி அரசு அனுமதி அளிக்குமா..?!

பிரபல சுற்றுலா தலம்

பிரபல சுற்றுலா தலம்

மிக பிரபலமான பல சுற்றுலா தலங்களை ஹாங்காங் கொண்டிருந்தாலும், கொரோனாவுக்கு பிறகு அங்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையானது கணிசமாக குறைந்துள்ளது. கொரோனா காலத்தில் விமான போக்குவரத்தானது முற்றிலும் முடங்கிய நிலையில், இதன் சுற்றுலா வணிகமும் முற்றிலும் முடங்கியது.

முக்கிய வருவாய் ஆதாரம்

முக்கிய வருவாய் ஆதாரம்

இதன் முக்கிய வருவாய் ஆதாரங்களில் ஒன்றாக இருந்த சுற்றுலா துறை, இதனால் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதற்கிடையில் தான் சுற்றுலா துறையை மீட்க ஹாங்காங் இப்படி ஒரு திட்டத்தினை திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இத்துறை சார்ந்தவர்களும் பெரியளவில் பாதிக்கப்பட்டனர் எனலாம்.

அரசு ஒப்புதல்
 

அரசு ஒப்புதல்

இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்றானது பெரியளவில் குறைந்துள்ள நிலையில், கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் தான் குறைந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்த நடவடிக்கை குறித்து கடந்த அக்டோபர் மாதமே அறிவிப்பானது வெளியான நிலையில், தற்போது ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை

நடவடிக்கை

 இது குறித்து ஹாங்காங்கின் உயர் மட்ட அதிகாரிகள் தரப்பில் தற்போது ஹாங்காங்கில் கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. ஆக சுற்றுலா பயணிகளை கவர 5 லட்சம் டிக்கெட்டுகள் இலவசமாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் ஹாங்காங் ஏர்லைன்ஸ் சார்பில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்ரது.

விரைவில் அப்டேட்

விரைவில் அப்டேட்

எனினும் இந்த இலவச டிக்கெட்டுகள் எப்போது? இது யாருக்கெல்லாம் வழங்கப்படும்., இதற்கான நிபந்தனைகள் என்ன? என்பது குறித்தான பல விவரங்கள் வெளியாகவில்லை. விரைவில் இது குறித்தான அப்டேகள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்பபடுகிறது.

ஹாங்காங்

ஹாங்காங்

சுமார் 70 லட்சத்திற்கும் மேலான மக்கள் தொகை கொண்ட நாடான ஹாங்காங், ஒரு தன்னாட்சி நாடாக சீனாவில் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது. சீனாவில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், ஹாங்காங்கிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது சீனா வெளி நாட்டவர்களுக்கு தளர்வு அளித்துள்ள நிலையில், ஹாங்காங்கிலும் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்தும்

பொருளாதார வளர்ச்சியினை மேம்படுத்தும்

இது ஹாங்காங்கின் சுற்றுலா துறையை மட்டும் அல்ல, அந்த தீவு நாட்டின் பொருளாதாரம், வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும். இது மக்கள் கையில் பணப்புழக்கத்தினை அதிகரிக்கும். இது அதன் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும். எப்படியிருப்பினும் ஹாங்காங்கின் இந்த அறிவிப்பானது செயல்பாட்டில் எப்படி சாத்தியம் என்பது பெரும் கேள்வியாகவும் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 lakh free flight tickets! hong kong want to boost up tourism

5 lakh free flight tickets! hong kong want to boost up tourism
Story first published: Friday, February 3, 2023, 14:50 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X