பேஸ்புக் முதல் பென்ஸ் வரை.. திகைப்பூட்டும் டீல்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வர்த்தக சந்தையில் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் (M&A's) கார்ப்பரேட் உலகின் மிகப்பெரிய பகுதியாகும்.

 

சில ஒப்பந்தங்கள் வீழ்ச்சியடைந்தாலும் பெரும்பாலும் டீல்கள் பல்வேறு துறைகளில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இறுதியாக உலகப் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

இந்த பட்டியலில் நாம் 5 மிகப்பெரிய நிறுவனங்களின் ஒன்றிணைப்பு மற்றும் கையகப்படுத்தலை பற்றி ஆராயவிருக்கிறோம்.

1. ஃபேஸ்புக் நிறுவனம் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்ஆப்பை கையகப்படுத்தியது.

1. ஃபேஸ்புக் நிறுவனம் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்ஆப்பை கையகப்படுத்தியது.

வருடம்: 2012 மற்றும் 2014

கையகப்படுத்தியதற்கான விலை : 1 பில்லியன் அமெரிக்க டாலர் மற்றும்

19 பில்லியன் அமெரிக்க டாலர்.

தொழில்துறை: இணையம்.

2012 ல் சக்தி வாய்ந்த சமூக ஊடகமான ஃபேஸ்புக், மொபைல் ஃபோட்டோ பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராமை 1 பில்லியன் அமெரிக்க டாலருக்கு கையகப்படுத்தியுள்ளது. இந்த கையகப்படுத்தல் நிகழ்ந்த அந்த நேரத்தில், அளவு மற்றும் செலவில் அது ஃபேஸ்புக்கின் மிகப்பெரிய கையகப்படுத்துதலாக இருந்தது. மேலும் இந்த சாதனையைப் படைத்த ஃபேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜூக்கர் பெர்க், "இது போன்ற ஒன்றை இனி எப்பொழுதும் செய்ய நாங்கள் திட்டமிட மாட்டோம்" என்று கூறினார்.

ஆனால் இரண்டு வருடங்களிலேயே உடனடி குறுஞ்செய்தி சேவை நிறுவனமான வாட்ஸ் ஆப்பை 19 பில்லியன் அமெரிக்க டாலருக்கு கையகப்படுத்திக் கொண்டு ஃபேஸ்புக் நிறுவனம் மொபைல் உலகையே திகைக்க வைத்தது. இந்த கொள்முதலைத் தொடர்ந்து ஃபேஸ்புக் உரிமையாளரின் கீழ் இயங்கிய வாட்ஸ்ஆப்பில் பயனாளர்களின் தரவுகள் மறைமுகமாக அந்தரங்க அத்து மீறல்கள் நடைபெறுவதாக வாட்ஸ் ஆப் பயன்படுத்துபவர்கள் சர்ச்சைகளை எழுப்பினர்.

2. ஆப்பிள் நெக்ஸ்ட்டை கையகப்படுத்தியது.
 

2. ஆப்பிள் நெக்ஸ்ட்டை கையகப்படுத்தியது.

வருடம்: 1996

கையகப்படுத்தியதற்கான விலை : 429 மில்லியன் அமெரிக்க டாலர்.

தொழில்துறை: கணினி வன்பொருள் மற்றும் மென்பொருள்.

1996 - இல் ஆப்பிள், கணினி நிறுவனமான நெக்ஸ்டை 429 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது. 1985 இல் ஆப்பிள் நிறுவனத்திலிருந்து வெளியேற்றபட்ட பிறகு ஸ்டீவ் ஜாப்ஸால் நெக்ஸ்ட் நிறுவனம் நிறுவப்பட்டது. ஆனால் ஆப்பிள் நிறுவனமே மீண்டும் அதை கையகப்படுத்திக் கொண்டதால் ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத்திற்கு தலைமை நிர்வாக அதிகாரியாக திரும்பி வந்தார்.

திரும்பி வந்தவுடன் ஸ்டீம் ஜாப்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்களை மறுசீரமைத்தார். மேலும் ஆப்பிளின் புதிய ஆபரேட்டிங் சிஸ்டமான Mac OS X - ன் வளர்ச்சியை மேற்பார்வையிட்டார்.

3. டேய்ம்லர் கிரிஸ்லரை கையகப்படுத்தியது.

3. டேய்ம்லர் கிரிஸ்லரை கையகப்படுத்தியது.

வருடம்: 1998

கையகப்படுத்தியதற்கான விலை : 37 பில்லியன் அமெரிக்க டாலர்.

தொழில்துறை: ஆட்டோ மொபைல்ஸ்.

1998 - இல் ஜெர்மனி ஆட்டோ மொபைல் குழுமமான டேய்ம்லர் பென்ஸ், கிரிஸ்லர் நிறுவனத்துடன் 37 பில்லியன் அமெரிக்க டாலருக்கு ஒன்றிணைக்கப்பட்டது. அந்த நேரத்தில் வரலாற்றிலேயே ஒரு அமெரிக்க நிறுவனத்தை எந்த ஒரு வெளிநாட்டு நிறுவனமும் இவ்வளவு விலை கொடுத்து வாங்காத அளவிற்கு இது மிகப்பெரிய கையகப்படுத்துதலாகும்.

இதன் விளைவாக, டேய்ம்லர் கிரிஸ்லர் ஏ ஜி யின் உருவானது, கிரிஸ்லரை கையகப்படுத்திக் கொள்ள செய்யப்பட்ட விற்பனை கிரிஸ்லர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரகத்திற்கு எதிரடையாக செய்யப்பட்டு கையகப்படுத்தப்பட்டதாக கருதப்பட்டு முதலீட்டாளர்களின் சார்பாக குழு நடவடிக்கை எடுக்கப்பட்டு உரிமைக்கோரும் வழக்கு தொடரப்பட்டு நிறுவனத்தின் நற்பெயருக்கு கெடுதல் ஏற்படுத்தப்பட்டது.

ஒருங்கிணைக்கப்பட்ட பிறகு கிரிஸ்லர் மோசமான செயல்திறன் காரணமாக 2006 மற்றும் 2007 களில் 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் நஷ்டத்தை அடைந்துள்ளதாக அறிக்கைக் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு கிரிஸ்லர் நிறுவனம் செர்பரஸ் என்னும் பங்கு சந்தை மூலதன நிர்வாக நிறுவனத்திற்கு 7.4 பில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்கப்பட்டது.

 4. பைஃபைஜர் வார்னர் லேம்பர்ட்டை கையகப்படுத்தியது.

4. பைஃபைஜர் வார்னர் லேம்பர்ட்டை கையகப்படுத்தியது.

வருடம்: 2000

கையகப்படுத்தியதற்கான விலை : 110 பில்லியன் அமெரிக்க டாலர்.

தொழில்துறை: மருந்தாக்கவியல்

2000 மாவது வருடம் பிப்ரவரி மாதத்தில், அமெரிக்க மருந்தாக்கவியல் மாபெரும் நிறுவனமான பைஃபைஜர் சக அமெரிக்க அடிப்படை மருந்தாக்கவியல் நிறுவனமான வார்னர் - லேம்பர்ட்டை கையகப்படுத்திக் கொள்வதற்கு 110 அமெரிக்க டாலர்களைச் செலுத்தியது. அந்த விற்பனை, 90 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பங்குகளாகவும், 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ரொக்கப் பணமாகவும் செலுத்தப்பட்டது. அதன் விளைவாக பைஃபைஜர் உலகின் இரண்டாவது மிகப் பெரிய மருந்து நிறுவனமாக ஆனது.

5. ஏஓஎல் நிறுவனம் டைம் வார்னர் நிறுவனத்தைக் கையகப்படுத்தியது.

5. ஏஓஎல் நிறுவனம் டைம் வார்னர் நிறுவனத்தைக் கையகப்படுத்தியது.

வருடம்: 2000

கையகப்படுத்தியதற்கான விலை : 164 பில்லியன் அமெரிக்க டாலர்.

தொழில்துறை: ஊடகம்

2000 மாவது வருடத்தில் அமெரிக்க இணைய நிறுவனம் (AOL) ஒரு டிஜிட்டல் ஆற்றல் மையத்தை உருவாக்குவதற்காக திகைப்பூட்டும் தொகையான 164 பில்லியன் அமெரிக்க டாலருக்கு ஊடக நிறுனமான டைம் வார்னரை ஏலத்தில் எடுத்து கையகப்படுத்துதலை நிறைவு செய்தது. இந்த நடவடிக்கை டைம் வார்னரின் தலைவர் ஜெஃப் பெவ்கெஸ் ஆல் இழைக்கப்பட்ட "கார்ப்பரேட் வரலாற்றின் மிகப் பெரிய தவறு" என்று அழைக்கப்படுகிறது.

இது டாட் காம் பபுள் நிகழ்வின் போது ஏற்பட்ட ஒத்த நிகழ்வாகவும் கருதப்படுகிறது, மேலும் இதன் விளைவாக 2002 ஆம் ஆண்டு ஏஓஎல் டைம் வார்னர் 99 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்டத்தை சந்தித்ததாக அறிக்கைகள் கூறுகின்றன. - இது அந்த நேரத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு நிறுவனத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாக கூறப்படுகிறது.

மேலும், இரண்டு வருடங்களுக்கும் குறைவான காலத்தில், அந்த நிறுவனத்தின் மதிப்பு சுமார் 200 பில்லியன் டாலர் வரை வீழ்ச்சியடைந்தது மேலும் இதன் உடனடி விளைவாக ஏஓஎல் 2009 ஆம் ஆண்டில் ஒரு தற்சார்பு நிறுவனமாக உருவானது.

காம் காஸ்ட் மற்றும் டைம் வார்னெர்

காம் காஸ்ட் மற்றும் டைம் வார்னெர்

இந்த ஆண்டின் தொடக்கத்தில், நுகர்வோர் குழுக்கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான வணிகத்திற்கு நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்படும் அமெரிக்க அதிகார மையங்களிடமிருந்தும் தீப்பொறி போன்ற விமர்சனங்கள் வந்த பிறகு, அமெரிக்காவின் மாபெரும் கேபிள் நிறுவனமான காம்காஸ்ட் நிறுவனம் டைம் வார்னர் கேபிள் நிறுவனத்துடன் ஒரு மறைமுகமான இணைப்பிற்கு அழைப்பு விடுத்தது.

இந்த 45 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஒருங்கிணைப்பானது (Merger) அமெரிக்காவின் இரண்டு மாபெரும் கேபிள் நிறுவனங்களை ஒன்றிணைத்ததோடு, அமெரிக்க இணைய சந்தையின் 57% பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களை வைத்துள்ள மாபெரும் நிறுவனமாக தற்போது விளங்குகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 Shocking Mergers and Acquisitions by Major Companies

5 Shocking Mergers and Acquisitions by Major Companies
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X