5.5 மில்லியன் டாலர் மோசடி.. அமெரிக்காவில் அடுத்தடுத்து சிக்கிய இந்தியர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்காவில் பல இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் இரண்டு வெவ்வேறு திட்டங்களில் இன்சைடர் டிரேடிங் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

 

இந்த மோசடியில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் இந்தியர்களாக இருப்பது மட்டும் அல்லாமல் இவர்கள் சுமார் 5 மில்லியன் டாலர்களுக்கு மேல் சட்டவிரோத லாபம் ஈட்டியுள்ளனர்.

அமெரிக்காவின் பங்குச்சந்தை வர்த்தக அமைப்பான SEC தற்போது இவர்கள் மீது வழக்குத் தொடுத்து விசாரணை செய்து வருகிறது.

வருமான வரி தாக்கல் தேதி நீட்டிப்பா? திடீரென டுவிட்டரில் டிரெண்ட் ஆன ஹேஷ்டேக்! வருமான வரி தாக்கல் தேதி நீட்டிப்பா? திடீரென டுவிட்டரில் டிரெண்ட் ஆன ஹேஷ்டேக்!

இன்சைடர் டிரேடிங் என்றால் என்ன..?

இன்சைடர் டிரேடிங் என்றால் என்ன..?

இன்சைடர் டிரேடிங் என்பது பொதுவாகப் பங்கு சந்தை சார்ந்த வர்த்தகத்தில் நடக்கக் கூடிய ஒன்று. A என்ற நிறுவனத்தை B நிறுவனமோ அல்லது முதலீட்டாளர்கள் வாங்கும் போது, A, B மற்றும் A-B மத்தியில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருக்கும் வங்கி அல்லது முதலீட்டு நிறுவனங்களின் ஊழியர்கள் இந்தக் கைப்பற்றல் குறித்த முடிவுகள் பொதுச் சந்தைக்கு அதிகாரப்பூர்வமாக வருவதற்கு முன்பாகவே கசிய விட்டு, லாபம் அடையும் நிறுவனங்களின் பங்குகளை மறைமுகமாக வாங்குவதன் மூலம் அதிகப்படியான லாபம் அடைய முடியும்.

இதில், இந்தக் கைப்பற்றல் குறித்த ரகசிய விபரத்தைக் கசியவிட்டதும், அதன் மூலம் முதலீடு செய்து லாபம் பார்ப்பதும் தான் இன்சைடர் டிரேடிங். இதில் பல வகை உள்ளது.

லுமென்டம் ஹோல்டிங்ஸ்

லுமென்டம் ஹோல்டிங்ஸ்

லுமென்டம் ஹோல்டிங்ஸ் (Lumentum Holdings) முன்னாள் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி அமித் பரத்வாஜ் (49), மற்றும் அவரது நண்பர்கள் திரன்குமார் படேல் (50), ஸ்ரீனிவாச கக்கேரா (47), அப்பாஸ் சயீதி (47), மற்றும் ரமேஷ் சித்தோர் (45), ஆகியோர் மீது திங்கள்கிழமை பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையமான SEC இன்சைடர் டிரேடிங் செய்தாகக் குற்றம் சாட்டியுள்ளது.

4 இந்தியர்கள்
 

4 இந்தியர்கள்

கலிஃபோர்னியாவில் வசிக்கும் இவர்கள், லுமென்டம் ஹோல்டிங்ஸ் நிறுவனம் கைப்பற்றிய இரண்டு நிறுவனங்களின் போது இன்சைடர் டிரேடிங் தகவல் மூலம் பெற்று லுமென்டம் ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு முன்னதாகத் தகவல் பெற்று சுமார் 5.2 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் சட்டவிரோத லாபம் ஈட்டியதாக SEC குற்றம் சாட்டுகிறது.

நியூயார்க் இந்தியர்கள்

நியூயார்க் இந்தியர்கள்

இதேபோல் மற்றொரு வழக்கில், முதலீட்டு வங்கியாளர் பிரிஜேஷ் கோயல் (37) மற்றும் அவரது நண்பர் அக்‌ஷய் நிரஞ்சன் (33) ஆகியோர் நியூயார்க்-கை சேர்ந்தவர்கள். இதில் ஒரு அக்‌ஷய் நிரஞ்சன் பெரிய நிதி நிறுவனத்தில் அந்நியச் செலாவணி வர்த்தகராக இருந்தவர்கள் உள் வர்த்தகம் செய்ததாக SEC குற்றம் சாட்டியுள்ளது.

275,000 டாலர் மோசடி

275,000 டாலர் மோசடி

அக்‌ஷய் நிரஞ்சன் மற்றும் பிரிஜேஷ் கோயல் ஆகியோர் பிஸ்னஸ் ஸ்கூலில் பிடித்துக்கொண்டு இருந்த போது நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். 2017 இல் நான்கு நிறுவன கையகப்படுத்தல் அறிவிப்புகளுக்கு முன்னதாக, சட்டவிரோதமாக வர்த்தகம் செய்து 275,000 அமெரிக்க டாலர்களுக்கு மேல் சம்பாதித்ததாக இவ்விருவர் மீது SEC குற்றம் சாட்டியுள்ளது.

மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் வழக்கு

மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் வழக்கு

இதில் அக்‌ஷய் நிரஞ்சன் டார்கெட் நிறுவனங்களின் கால் ஆப்ஷன்ஸ் வாங்கிய பின்னர் பிரிஜேஷ் கோயலிழ் பங்குக்கு 85,000 அமெரிக்க டாலர்களை வாங்கியது தெரிய வந்துள்ளது. இவ்விரு வழக்கும் மன்ஹாட்டன் பெரடரல் மாவட்ட நீதிமன்றத்தில் SEC தொடுத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

6 Indian-origin persons Made USD 5.5 million in illicit profits; charged in two insider trading cases in USA

6 Indian-origin persons Made USD 5.5 million in illicit profits; charged in two insider trading cases in USA 5.5 மில்லியன் டாலர் மோசடி.. அமெரிக்காவில் அடுத்தடுத்து சிக்கிய இந்தியர்கள்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X