மும்பை பங்குச் சந்தையை ஒரம்கட்டும் சர்வதேச சந்தைகள்..!

By Batri Krishnan
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: நவீன பொருளாதார உலகில், ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை அளவிடும் ஒரு அளவுகோலாக பங்குச் சந்தைகள் விளங்குகின்றது.

உலகளவில் பங்குச் சந்தைகளில் முதலீட்டாளர்கள் நாள்தோறும் பல ஆயிரம் கோடிகள் மதிப்புள்ள பங்குகளை வாங்கி விற்று வருகின்றார்கள்.

மக்களின் இந்த முதலீட்டு ஆர்வம் பப்புவா நியூ கினியில் ஆரம்பித்து பாற்படோஸ் வரை தொடர்கின்றது. ஒவ்வொரு நாளும் பங்குச் சந்தையில் புழங்கும் பணம் எவ்வளவு என உங்களுக்குத் தெரியுமா?

ஒவ்வொரு நாளும் 70 ட்ரில்லியன் டாலர்கள்

ஒவ்வொரு நாளும் 70 ட்ரில்லியன் டாலர்கள்

ஒரு நிமிடம் உங்களை நீங்களே கிள்ளிப் பார்த்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் சுமார் 70 ட்ரில்லியன் டாலர்கள் (52.5 டிரில்லியன் பவுண்ட்கள்) பங்குச் சந்தையில் வர்த்தகம் ஆகின்றது.

உலகில் பல்வேறு பங்குச் சந்தைகள் இருந்தாலும், ஒரு சில சந்தைகளில் மட்டுமே பெரும் அளவிலான வர்த்தகம் நடக்கின்றன. பிற சந்தைகளின் நிலவரம் சொல்லிக் கொள்ளும் படி இல்லை.

 

உலக கூட்டமைப்பின் தகவல்கள்

உலக கூட்டமைப்பின் தகவல்கள்

நாம் உங்களுக்காக உலகின் மிகவும் மதிப்புமிக்க பரிமாற்றங்கள் செய்து வரும் ஆறு பெரிய பங்குச் சந்தைகளை பட்டியலிட முயற்சி செய்துள்ளோம்.

இந்த ஆறு பங்குச் சந்தைகளும் பங்குச் சந்தைகளுக்கான உலக கூட்டமைப்பின் தகவல்கள் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது. இங்கு தொகுக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் ஜூலை 2016 க்குப் பின் தொகுக்கப்பட்டது.

 

1 டிரில்லியன் டாலர்கள் மூலதனம்

1 டிரில்லியன் டாலர்கள் மூலதனம்

மேலும் இங்குப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட அனைத்துச் சந்தைகளும் சுமார் 1 டிரில்லியன் டாலர்களை மூலதனமாகக் கொண்டிருக்கின்றன. .

நீங்கள் அனைவரும் எதிர்பார்த்தது போல் மிகவும் மதிப்புமிக்க சந்தைகளாக அறியப்பட்ட நியூயார்க் பங்குச் சந்தை, நாஸ்டாக், லண்டன் பங்குச் சந்தை போன்றவை இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அதைத்தவிரச் சீனாவில் உள்ள பல சந்தைகள் மற்றும் பிற சந்தைகளும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

 

நியூயார்க் பங்குச் சந்தை - 18.8 டிரில்லியன் டாலர்கள்

நியூயார்க் பங்குச் சந்தை - 18.8 டிரில்லியன் டாலர்கள்

நியுயார்க் பங்குச் சந்தை, பூமியில் உள்ள மிகவும் மதிப்பு வாய்ந்த சந்தையாக உள்ளது. அதை விட இதனின் மிக முக்கிய சிறப்பானது இதனுடைய மதிப்பு இதற்கு அடுத்தல் இடத்தில் உள்ள நாஸ்டாக் சந்தையை விட சுமார் மூன்று மடங்கு அதிகமாகும்.

இந்தச் சந்தையில் உலகின் மதிப்பு மிக்க நிறுவனங்களான ஆப்பிள், பேஸ்புக், மற்றும் கூகுள் போன்றவை பட்டியலிடப்பட்டுள்ளன.

 

நாஸ்டாக் - 7.5 டிரில்லியன் டாலர்கள்

நாஸ்டாக் - 7.5 டிரில்லியன் டாலர்கள்

இரண்டாவது இடத்தில் இருந்தாலும் அதில் நீண்ட தூரத்தில் நாஸ்டாக் சந்தை உள்ளது.

தேசிய கூட்டமைப்பு செக்யூரிட்டிஸ் டீலர்கள் தானியாக்க விலைக் குறிப்புகளுக்கான குறியீடே நாஸ்டாக் ஆகும். இது நியூயார்க்கில் இருந்து செயல்படுகின்றது.

இந்தச் சந்தையில் குறியீடான நாஸ்டாக் 100ல் ஈபே, கிராஃப்ட், மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற பல்வேறு முக்கிய நிறுவனங்கள் அடங்கியுள்ளன.

 

ஜப்பான் செலாவணி குழுமம் - 4.9 டிரில்லியன் டாலர்கள்

ஜப்பான் செலாவணி குழுமம் - 4.9 டிரில்லியன் டாலர்கள்

அமெரிக்காவிற்கு வெளியே உள்ள உலகின் மிகப்பெரிய பங்குச் சந்தை, ஜப்பான் செலாவணி குழுமம் ஆகும். இதுவே ஜப்பான் நாட்டின் உலக புகழ்பெற்ற நிக்கேய் 225 குறியீட்டைக் கட்டுப்படுத்துகின்றது. நிக்கேய் 225 ஆசியா முழுமைக்குமான பங்கு குறியீடாகப் பார்க்கப்படுகின்றது.

நிகான், ஒலிம்பஸ், மற்றும் கோனிகா போன்ற உலகின் தலைசிறந்த நுகர்வோர் பொருட்கள் நிறுவனங்கள் இந்தச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன.

 

ஷாங்காய் பங்குச் சந்தை - $ 3.9 டிரில்லியன்.

ஷாங்காய் பங்குச் சந்தை - $ 3.9 டிரில்லியன்.

சீனாவின் மிகப் பெரிய பங்குச் சந்தையான இது, சீனாவின் நிதி மையம் என அறியப்படும் ஷாங்காய் நகரில் உள்ளது. இந்தச் சந்தையில் ஸின்க்தாவோ பிரிவரிஸ், ஏர் சைனா மற்றும் சினோபெக் போன்ற மிகப் பிரபலமான நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

லண்டன் பங்குச் சந்தை - 3.6 டிரில்லியன் டாலர்கள்

லண்டன் பங்குச் சந்தை - 3.6 டிரில்லியன் டாலர்கள்

ஐரோப்பாவில் உள்ள மிகவும் பிரபலமான சந்தையாக அறியப்படும் இந்த லண்டன் பங்குச் சந்தை, நகரின் மையத்தில் அமைந்துள்ளது.

இந்தச் சந்தையில் மிகவும் சிறிய மற்றும் பிரபலமான புளூ சிப் எப்டிஎஸ்இ 100, எப்டிஎஸ் 250, மற்றும் மிட் கேப் பங்கு குறியீடான எய்ம் போன்றவை உள்ளன.

 

யூரோநெக்ஸ்டின் - 3.4 டிரில்லியன் டாலர்கள்

யூரோநெக்ஸ்டின் - 3.4 டிரில்லியன் டாலர்கள்

யூரோநெக்ஸ்டின் குழு, ஆம்ஸ்டர்டாம் தலைமையிடமாக கொண்டு இயங்குகின்றது. இதன் ஆளுமையின் கீழ், ஐரோப்பாவின் பல மிக முக்கிய தேசிய குறியீடுகள் உள்ளன.
இதன் கீழ் பிரான்சின் சிஏசி 40, பெல்ஜியம் நாட்டின் பெல் 20, பிஎஸ்ஐ 20, மற்றும் போர்த்துக்கல்லின் புளூ சிப் ஆகியவை உள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

6 most valuable stock exchanges in the world

Stock markets globally are worth more than $70 trillion (£52.5 trillion), with investors buying and selling enormous values of shares every day in locations from Papua New Guinea all the way to Barbados. Some markets, however, are worth an awful lot more than others.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X