ஆப்பிள் நிறுவனத்தில் வேலை வேண்டுமா.. இந்தக் கேள்விக்கு எல்லாம் பதில் தெரிய வேண்டும்..!

Posted By:
Subscribe to GoodReturns Tamil
ஆப்பிள் நிறுவனத்தில் வேலை செய்வது மிகவும் சவாலான மற்றும் அற்புதமான இடங்களில் ஒன்றாக அறியப்படுகிறது, எனவே அங்கு வேலைக் கிடைப்பது எளிதில்லை. கூகுள் மற்றும் பிற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களைப் போல, ஆப்பிள் உங்களுடைய கடந்தகால அனுபவத்தின் அடிப்படையிலான தொழில்நுட்ப கேள்விகளையும், சில குழப்பமான புதிர்களையும் கேட்கிறது.

கிளாஸ்டோர் வெளியிட்ட சில அண்மை பதிவுகளைப் பார்க்கும்போது ஒரு சில தந்திரமான மூலைக்கு வேலைக் கொடுக்கும் இண்டர்வியூ கேள்விகளைக் காண நேர்ந்தது. சில தந்திரமான கணித புதிர்களைத் தீர்க்கத்தேவையிருந்தது, மற்ற சில மிகவும் தெளிவற்று குழப்பும் விதத்தில் இருந்தன.

பணியிடம்: மென்பொருள் பொறியாளர்

கேள்வி: நீங்கள் 2 முட்டைகளை வைத்திருந்தால், முட்டைகள் உடையாத அளவு அவற்றை எந்த மாடியில் இருந்து கீழே போடலாம் எனக் கண்டுபிடிக்க விரும்பினால், அதை எப்படிச் செய்வீர்கள்? அதற்கு உகந்த தீர்வு என்ன?

பணியிடம்: அட்-ஹோம் அட்வைசர்

கேள்வி: ஒரு மோடம் / திசைவி மற்றும் அதன் செயல்பாடுகளை என்னவென்று 8 வயது குழந்தைக்கு விளக்கவும்?

பணியிடம்: உலகளாவிய விநியோக மேலாளர்

கேள்வி: ஒவ்வொரு நாளும் எத்தனை குழந்தைகள் பிறக்கிறார்கள்?

பணியிடம்: மென்பொருள் பொறியாளர்

கேள்வி: 100 நாணயங்கள் ஒரு மேஜையில் மீது இருக்கின்றன, ஒன்று தலை பக்கம் மேல்நோக்கி இருக்கும் அல்லது பூ பக்கம் . 1௦ நாணயங்கள் தலைகள் மேல்நோக்கியும் , 90 பூ மேல்நோக்கியும் உள்ளன. நீங்கள் எந்தப் பக்கம் மேல் நோக்கி உள்ளது என உணர, பார்க்க அல்லது வேறு வழியில் கண்டுபிடிக்க முடியாது. நாணயங்களை இரண்டு குவியல்களாகப் பிரித்து, ஒன்றில் தலைகள் மேல் நோக்கியும் இன்னொரு குவியலில் அதே அளவு நாணயங்கள் பூ மேல்நோக்கியும் இருக்குமாறு அடுக்கவும்.

பணியிடம்: மென்பொருள் கியூஏ பொறியாளர்

கேள்வி: மூன்று பெட்டிகள் உள்ளன, ஒன்றில் ஆப்பிள் மட்டுமே, அடுத்ததில் ஆரஞ்சு மட்டுமே மற்றும் இன்னொன்று ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு இரண்டையும் கொண்டுள்ளது. பெட்டிகள் தவறாகப் பெயரிடப்பட்டுள்ளன, லேபிள்களின் பெட்டியின் அசல் உள்ளடக்கங்களை அடையாளப்படுத்தவில்லை. ஒரு பெட்டியைத் மட்டும் திறந்து, பெட்டியைப் பார்க்காமல், நீங்கள் ஒரு பழத்தை எடுத்துக்கொள்கிறீர்கள். பழத்தை எடுக்கிறீர்கள், பழத்தைப் பார்த்த உடன் பெட்டிகள் அனைத்தையும் சரியாக எப்படி லேபிள் செய்ய முடியும்?

பணியிடம்: உலகளாவிய விநியோக மேலாளர்

கேள்வி: இந்தப் பேனாவின் செலவை எப்படிப் பிரித்துக் கூற முடியும்?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

6 trickiest questions Apple asks in job interviews

6 trickiest questions Apple asks in job interviews
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns