வருமானத்தில் 60% பணத்தை வரியாகப் பிடுங்கும் அருபா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: வருடக் கடைசியில் எல்லாருக்கும் காத்திருக்கும் சற்றே ஜீரணிக்க முடியாத விஷயம்தான் வருமான வரி. வருமானம் உயர்ந்தால் வரியும் உயரும் என்பது நாமெல்லோரும் அறிந்த உண்மைதான். ஆனால் வருடம் முழுவதும் நாயாய் பேயாய் அலைந்து சம்பாதித்த காசுக்கு அரசாங்கம் வரியக்குடுனு கேக்குரப்போ கொஞ்சம் கடுப்பாதான் இருக்கு. அதுவும் இன்றைக்குச் சூழலில் ஏறிவரும் விலைவாசி பொறுப்பற்ற நிர்வாகம் ஆகியவை மக்களின் மனதில் பெரும் கவலையை வளர்த்திருப்பது உண்மை.

உங்கள் சூழ்நிலைகள் எப்படி இருப்பினும் நீங்கள் வளர்ந்த நாடுகளில் வசித்தால் உங்களுக்கு விதிக்கப்படும் வரி மிக அதிகமாக இருக்கும். அந்த வகையில் நாம் அதிர்ஷ்டசாலிகள்.

இந்தியா

இந்தியா

இந்தியாவைப் போல் உலக நாடுகளிலும் வருமான வரி விகிதங்களும் ஆண்டுக்கு ஆண்டு உயருவதும் உண்டு. ஆனால் வருமானத்தில் 60 சதவீதம் வரை வரி வசூல் செய்து கல்லா கட்டும் அருபா நாட்டைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா..?

ஆஸ்திரியா முதல் அருபா

ஆஸ்திரியா முதல் அருபா

2015ஆம் ஆண்டின் நிலவரத்தின் படி உலக நாடுகளில் அதிகம் வருமான வரி வசூல் செய்த நாடுகளைப் பார்த்தால் உங்களுக்கு இந்தியா சொர்க்கமாகத் தெரியும்.

ஆஸ்திரியா

ஆஸ்திரியா

முழுவதும் நிலப்பகுதியால் சூழப்பட்ட ஒரு குடியரசு நாடு ஆஸ்திரியா. இங்கு மக்கள் தொகை வெறும் 10 லட்சம் மட்டுமே. ஐரோப்பாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள இது, மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீட்டில் உலகில் ஒரு செழுமையான நாடு.

ஆஸ்திரிய நாட்டில் ஒரு தனிநபரின் வருமானம் 74,442 அமெரிக்க டாலருக்கும் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அவருக்கும் 50 சதவீத வருமான வரியை விதிக்கப்படுகிறது. இந்த நாட்டின் சமூகப்பாதுகாப்பு வரியும் மிக அதிக அளவாக 18 சதவிகிதமும், போனஸ் தொகைகளில் 6 சதவிகித வரியும் முதலீட்டு ஆதாய வரியாக 25 சதவிகிதமும் வசூலிக்கப்படுகின்றது.

அது என்ன 74,442 அமெரிக்க டாலர். அட நம்ம ஊர்ல இருப்பதைப் போன்ற 2.5 லட்சம், 5 லட்சம் வரி அடுக்குகள்.

 

பெல்ஜியம்
 

பெல்ஜியம்

பெல்ஜியம் ஒரு அரசப் பரம்பரை ஆட்சி கொண்ட ஐரோப்பிய நாடு. இங்கு 46,900 டாலர் அளவில் வருமானம் பெறுவர் மீது 50 சதவிகித வரி விதிக்கப்படுகிறது. இது மிகவும் வளர்ச்சியடைந்த நாடுகளுள் ஒன்று.

சமூகப் பாதுகாப்புச் சுமை காரணமாக இங்கு அதிக அளவில் வரி விதிக்கப்படுகிறது. இது தவிர 11 சதவிகித உள்ளாட்சி வரியும், 33 சதவிகித முதலீட்டு ஆதாய வரியும் விதிக்கப்படுகிறது.

 

நெதர்லாந்து

நெதர்லாந்து

ஐரோப்பாவின் வடமேற்குப் பகுதியிலுள்ள 12 பிரதேசங்களையும் கரீபியன் தீவில் உள்ள மூன்று தீவுகளையும் உள்ளடக்கியது இந்த நெதர்லாந்து. இதற்கு அதிகம் அறியப்படாத ஹாலந்து என்கிற மற்றொரு பெயரும் உண்டு.

இங்கு அதிகப்படியாக 52 சதவீத வருமான வரி விதிக்கப்படுகிறது. இந்த அளவு இதற்கு முந்தைய ஆண்டுகளை விட இருமடங்காகும். இது தவிர நில மாற்று வரி 6 சதவிகிதமும் நாட்டின் பரம்பரை உரிமை வரியாக (இன்ஹெரிடன்ஸ் டாக்ஸ்) 40 சதவிகிதமும் வசூலிக்கப்படுகின்றன.

 

டென்மார்க்

டென்மார்க்

டென்மார்க் ஒரு தனி அந்தஸ்துள்ள நாடு. இது வட ஐரோப்பாவில் அமைந்துள்ளது. இங்கு ஒருவர் 76,000 டாலர் வருமானம் பெறுவோர் செலுத்த வேண்டிய வரி 55-56 சதவிகிதம்.

அன்பளிப்பு மீதான செலவு, ஆன்லைனில் வாங்குதல் மற்றும் கல்விச் செலவுகள் அரசின் தரப்பில் அதிகரிக்கப்பட்டுள்ளன. முதலீட்டு ஆதாயங்களின் மீது 42 சதவிகித வரியும் பங்கு ஆதாயங்களின் மீது 28 சதவிகித வரியும் இந்த நாடு விதிக்கிறது.

 

சுவீடன்

சுவீடன்

ஸ்காண்டிநேவிய நாடான சுவீடன் ஐரோப்பாவின் வடக்கில் அமைந்துள்ளது. ரிபப்ளிகன் இன்ஸ்டிடியூட்டின் தகவல்கள் படி சுவீடன் உலகின் இரண்டாவது புகழ்மிக்க நாடாக விளங்குகிறது.

இந்த நாடு கல்வியை இலவசமாகத் தருவதுடன், மருத்துவ உதவி மற்றும் மானிய விலையில் போக்குவரத்து வசதிகளையும் வழங்குகிறது. அரசினால் கடைப்பிடிக்கப்படும் கடுமையான வரிவிதிப்பு முறைகள் மூலம் இதுபோன்ற நலத் திட்டங்கள் சாத்தியமாகின்றன.

இந்த நாட்டில் 81,000 டாலர்கள் அல்லது அதற்கு மேலான வருமானம் பெறுவோருக்கு 56.6% சதவிகித வரி விதிக்கப்படுகிறது.

 

அயர்லாந்து

அயர்லாந்து

அயர்லாந்து அதிகம் வரிவிதிக்கும் நாடுகளில் ஒன்று. 40,696 டாலர்கள் அல்லது அதற்கும் மேலான வருமானம் பெறுபவர்களிடம் சுமார் 48 சதவிகித வரியைச் செலுத்த வேண்டும்.

சராசரி 40% வரி விகிதத்தைக் கொண்ட வட ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும்போது இந்த நாட்டின் கொள்கைகள் அதிக வரியைக் கொண்டதாக உள்ளது. சமூகப் பாதுகாப்பு வரி 4%, முதலீட்டு ஆதாய வரி, அன்பளிப்பு வரி ஆகியவை 25% முதல் 30% வரை போன்ற இன்ன பிற வரிகளும் இங்கு உண்டு.

 

பின்லாந்து

பின்லாந்து

பின்லாந்து மற்றுமொரு அதிகம் வரி விதிக்கக்கூடிய நாடு. ஆண்டு வருமானம் 91,000 டாலர்களுக்கு மேல் இருந்தால் 49.2% வரி நீங்கள் செலுத்தவேண்டிவரும். 2014 ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி இந்த நாடு பணக்காரர்களிடம் அதிக வட்டியை வசூலித்துள்ளது.

முதலீட்டு ஆதாய வரி 28%, உள்ளூர் வரிகள் 21% ஏன் சர்சுகள் கூட 1% முதல் 2% வரியைச் செலுத்துகின்றன (நிதியமைச்சர் காதுல யாரும் போட்டுறாதீங்க அப்புறம் கோயிலுங்க வரி கட்டவேண்டுமென்று சொன்னாலும் சொல்லுவாரு).

 

யூ.கே. (இங்கிலாந்து)

யூ.கே. (இங்கிலாந்து)

யுகே-யில் 2,34,484 டாலர் அல்லது அதற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் 45% வரி செலுத்த வேண்டும். சமூகப் பாதுகாப்பு வரியாக 14 சதவிகிதமும், முதலீட்டு ஆதாய வரியாக 28 சதவிகிதமும் கட்ட வேண்டும்.

இந்த நாடு ஒரு நல்ல வளர்ச்சியடைந்த செல்வவளம் மிக்க நாடு என்பதால் மக்களுக்குப் பல்வேறு பொருளாதார மற்றும் நிதியாதாரங்களை அரசு செய்து தருகிறது.

 

ஜப்பான்

ஜப்பான்

ஜப்பான் தெற்காசியாவிலுள்ள ஒரு தீவு நாடு. சூரியன் உதிக்கும் நாடு என்றும் அதற்குப் பெயர் உண்டு. இங்கு 2,28,880 அமெரிக்க டாலர் அல்லது அதற்கு அதிகம் வருமானம் பெறுவோரிடம் 50% வரி விதிக்கப்படுகிறது (அடேங்கப்பா பாவம் ஜப்பானியர்கள்).

இந்த வரி மற்ற எந்த ஆசிய நாட்டுடனும் ஒப்பிடுகையில் சராசரியை விட அதிகம். வரிவிதிப்பு இரண்டு முறைகளில் செய்யப்படுகிறது. 40 சதவிகிதம் வருவாயிலும் 10 சதவிகிதம் சொத்து வரியாகவும் வசூலிக்கப்படுகிறது.

 

அருபா

அருபா

அருபா நமது பட்டியலில் முதலிடம் வகிக்கிறது. கரீபியன் தீவுகளில் உள்ள சொக்கவைக்கும் 33 கிலோமீட்டர் மட்டுமே பரப்பளவுள்ள ஒரு சிறிய தீவு.

நெதர்லாந்தின் மன்னராட்சிக்குட்பட்ட நான்கு நாடுகளில் இதுவும் ஒன்று. இம்மகளை டட்சுகள் என்றழைக்கின்றனர். 1,71,149 அமெரிக்க டாலர் மற்றும் அதற்கதிகம் வருமானம் உள்ளவர்கள் 58.95% வரி செலுத்த வேண்டும்.

திருமணமாகாதவர்கள் 58.95% வரியும் திருமணமானவர்கள் குறைந்தது 55.85% வரியும் செலுத்துகிறார்கள். முதலீட்டு ஆதாய வரி இங்கு 25 சதவிகிதமாகும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

60 percent income tax levied on aruba citizens

Paying tax has always been hectic for many of us. Whatsoever the circumstances maybe, high tax are always applied if you are living in a developed country.
Please Wait while comments are loading...
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more