இந்திய ஐடி நிறுவனங்களைக் குறிவைக்கும் அமெரிக்கா.. ஹெச்-1பி விசாவிற்கு $2,000 கூடுதல் கட்டணம்..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன்: அமெரிக்காவில் 9/11 ஹெல்த்கேர் திட்டத்திற்கு நிதி சேர்க்கும் விதமாக அமெரிக்க அரசு அளிக்கப்பட்டுள்ள ஹெச்-1பி மற்றும் எல்-1 விசாவிற்குக் கூடுதலாக 2,000 டாலர் கட்டணத்தை வசூல் செய்ய அமெரிக்க முடிவு செய்துள்ளது.

 

இந்த 2,000 டாலர் கூடுதல் கட்டணம் வசூல் அனைத்தும் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு மட்டும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது தான் இதன் சோகம்.. எப்படி..?

இந்திய நிறுவனங்கள் பாவம்..

இந்திய நிறுவனங்கள் பாவம்..

ஒரு நிறுவனத்தின் பணியாளர்கள் எண்ணிக்கையில் 50 சதவீதம் மற்றும் அதற்கு அதிகமான ஊழியர்களுக்கு ஹெச்-பி மற்றும் எல்-1 விசா வழங்கப்பட்டு இருந்தால் மட்டுமே இந்த 2000 டாலர் கூடுதல் கட்டணம் பொருந்தும் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

இப்புதிய கட்டண விதிப்பு 95 சதவீதம் இந்திய ஐடி நிறுவனங்களைப் பாதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

என்ன செய்யப்போகிறது..?

என்ன செய்யப்போகிறது..?

2,000 டாலர் கட்டண விதிப்பால் இந்திய ஐடி நிறுவனங்கள் பல ஆயிரக்கணக்கில் ஹெச்-1பி விசாக்களை ரத்துச் செய்ய உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் அமெரிக்கக் கிளைகளில் பணிபுரியும் பல இந்தியர்கள் தாயகம் திரும்பும் நிலையும் உருவாகும் என ஐடி ஊழியர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.

அமெரிக்கச் சந்தை
 

அமெரிக்கச் சந்தை

அமெரிக்கச் சந்தையில் இருக்கும் பன்னாட்டு நிறுவனங்களில் இந்திய ஐடி நிறுவன ஊழியர்களின் எண்ணிக்கை தான் அதிகம், இதனால் அமெரிக்கக் குடிமக்கள் சரியான வேலைவாய்ப்புக் கிடைக்காமல் தடுமாறி வருகின்றனர். இத்தகைய நிலையைச் சரி செய்யவே அமெரிக்க அரசு ஹெச்-1பி விசா வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகளை வழங்கி வருகிறது.

நாஸ்காம்

நாஸ்காம்

இந்திய நிறுவனங்கள் அமெரிக்கச் சந்தையில் இயங்குவதற்காக விசா கட்டணமாக வருடத்திற்கு 70-80 மில்லியன் டாலர் வரை அளிக்கிறது.

ஜேம்ஸ் சடோர்கா திட்டம்

ஜேம்ஸ் சடோர்கா திட்டம்

9/11 இரட்டைக் கோபுரம் விபத்தில் பாதிப்படைந்தவர்களுக்காவும், அவர்களுக்கான சிகிச்சை அளிக்கவும் ஜேம்ஸ் சடோர்கா 9/11 சுகாதாரம் மற்றும் இழப்பீடு என்ற திட்டம் உருவாக்கப்பட்டது.

இத்திட்டத்திற்குக் கூடுதல் நிதி சேர்க்க அவசியம் உள்ளதால், தற்போது நாட்டின் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் ஹெச்-1பி விசா மூலம் நிதி சேர்ப்பது சிறந்த முடிவாக இருக்கும் என அமெரிக்க நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

ஊதிய அடிப்படையில் விசா

ஊதிய அடிப்படையில் விசா

சில நாட்களுக்கு முன் அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட மனுவின் படி அமெரிக்க அளிக்கும் 85,000 விசாக்களில் முதல் 15,000 விசாக்களை அதிகச் சம்பளம் வாங்குவோருக்கு மட்டும் அளிக்க வேண்டும் எனவும், மீதமுள்ள 70,000 விசாக்களையும் அதிக ஊதிய அடிப்படையில் வழங்க வேண்டும் எனச் செனேட்டார்கள் தங்களது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

செக்..

செக்..

இத்தகைய முறையின் மூலம் அதிகச் சம்பளம் வாங்குவோருக்கு எளிதாக அமெரிக்க ஹெச்-1பி விசா கிடைப்பது மட்டும் அல்லாமல், அவுட்சோர்சிங் நிறுவனங்களால் குறைவான சம்பளம் பெறும் ஊழியர்களை, அமெரிக்க நிறுவனங்களில் நியமிக்க முடியாது.

மேலும் அமெரிக்கா வரும் பிற நாட்டவர்களுக்கு அமெரிக்கக் குடிமக்களுக்கு இணையான சம்பளத்தைப் பெறுவார்கள் எனவும் இந்த மனு விவரிக்கிறது.

 

 

குடவோலை முறை

குடவோலை முறை

ஒவ்வொரு வருடமும் அமெரிக்க அரசு பொதுப்பிரிவில் 65,000 ஹெச்-1பி விசாக்கள் வழங்கி வருகிறது. கடந்த இந்த 65,000 விசாக்கள் பெற சுமார் 1,75,000 விண்ணப்பங்கள் பிறப்பிக்கப்பட்டது.

ஹெச்-1பி விசா வழங்குவதில் போட்டி அதிகரித்துள்ளதால் அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பு விசா வழங்குவதில் குடவோலை முறையைப் பயன்படுத்தியது. அட அதுதாங்க குழுக்கள் முறை.

இதனால் 3 ஒருவருக்குத் தான் ஹெச்-1பி விசா வழங்கப்பட உள்ளது.

 

 

சரி என்ன தான் முடிவு..

சரி என்ன தான் முடிவு..

அமெரிக்க அரசு அறிவித்துள்ள தொடர் கட்டுப்பாடுகளால் இந்திய ஐடி நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை இந்திய அலுவலகங்களிலேயே நியமிக்கும் நிலை உருவாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

A $2,000 H-1B, L-1 fee on Indian IT companies could return in US

A special $2,000 fee could return on H-1B and L-1 visas for Indian IT companies to fund a 9/11 healthcare act in the US with a group of Congressmen quietly mounting fresh efforts to reimpose it.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X