1BHK வீட்டின் விலையில் ஒரு ஊரையே வாங்கலாம்.. எங்குத் தெரியுமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா தொற்றுக்கு முன்பும் பின்பும் ரியல் எஸ்டேட் துறை மிகப்பெரிய மாற்றத்தை எதிர்கொண்டு உள்ளது.

 

இந்த மாற்றம் இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் இருக்கும் காரணத்தால் பல முக்கியமான பகுதியில் ரியல் எஸ்டேட் விலை சரிந்துள்ளது, சற்றும் எதிர்பார்க்காத பல இடத்தில் வர்த்தகம் அதிகரித்து விலையும் உயர்ந்துள்ளது.

ஆனால் இங்கு 1 BHK வீட்டின் விலையில் ஒட்டுமொத்த கிராமத்தையும் வாங்கும் நிலையில் விலைவாசி மாற்றியுள்ளது.

சிமெண்ட் விலை ஒரு மூட்டைக்கு ரூ.30 உயர்கிறதா? ரியல் எஸ்டேட் துறையினர் அதிர்ச்சி! சிமெண்ட் விலை ஒரு மூட்டைக்கு ரூ.30 உயர்கிறதா? ரியல் எஸ்டேட் துறையினர் அதிர்ச்சி!

ஸ்பெயின்

ஸ்பெயின்

ஸ்பெயின் நாட்டின் வடமேற்கு பகுதியில் மக்களால் கைவிடப்பட்ட ஒரு கிராமம் தான் இந்தச் சால்டோ டி காஸ்ட்ரோ (Salto de Castro), தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இந்தக் கிராமத்தின் உரிமையாளர் நகர்ப்புறத்தில் வசிப்பவர் என்றும் இந்த அழகிய கிராமத்தின் பராம்பரியத்தை பராமரிக்க முடியவில்லை என்றும் அறிவித்துள்ளார்.

சால்டோ டி காஸ்ட்ரோ

சால்டோ டி காஸ்ட்ரோ

44 வீடுகளைக் கொண்ட ஒரு முழு ஸ்பானிஷ் கிராமம் சால்டோ டி காஸ்ட்ரோ வெறும் 2,59,000 டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இதே வேளையில் ஸ்பெயின் நாட்டின் தலைநகரான மாட்ரிட்-ல் 1BHK வீட்டின் விலை 2 கோடி ரூபாய்.

44 வீடுகள்
 

44 வீடுகள்

2 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் சால்டோ டி காஸ்ட்ரோ கிராமத்தில் 44 வீடுகள் மட்டும் அல்லாமல் தலைநகரான மாட்ரிட்-க்கு வெறும் 3 மணிநேரத்தில் செல்ல முடியும். இதோடு சொந்தமாகப் பார், பள்ளி, தேவாலயம், விடுதி, நீச்சல் குளம் மற்றும் விளையாட்டு மைதானங்கள் உள்ளன.

மலையுச்சி

மலையுச்சி

போர்ச்சுகல் எல்லைக்கு அருகில் உள்ள ஜமோரா மாகாணத்தில் அமைந்துள்ள சால்டோ டி காஸ்ட்ரோ, ஆர்ரிப்ஸ் டெல் டியூரோ நேச்சுரல் பார்க்-ஐ காணும் வரையில் இந்தக் கிராமம் மலையுச்சியில் அமைந்துள்ளது.

30 ஆண்டுகள்

30 ஆண்டுகள்

ஸ்பானிஷ் ரியல் எஸ்டேட் வலைத்தளமான Idealista தரவுகள் படி ராணுவ வீரர்கள் பயன்படுத்திய ஒரு பழைய பாராக்ஸும் இந்தக் கிராமத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தக் கிராமத்தில் பல வசதிகள், பிராம்பரியம் நிறைந்து இருந்தாலும் 30 ஆண்டுகளாக இந்தப் பகுதியில் யாரும் வசிக்கவில்லை என்பது கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது.

1950ல் உருவான கிராமம்

1950ல் உருவான கிராமம்

இந்தக் கிராமம் 1950 களில் ஒரு மின் உற்பத்தி நிறுவனத்தால் அருகில் உள்ள அணையில் உள்ள தொழிலாளர்களின் குடும்பங்களுக்குத் தங்குவதற்காகக் கட்டப்பட்டது, ஆனால் 1980 களில் முற்றிலும் கைவிடப்பட்டது. சால்டோ டி காஸ்ட்ரோ கிராமத்தின் தற்போதைய உரிமையாளர் 2000 ஆம் ஆண்டின் துவக்கத்தில் சுற்றுலா தலமாக மாற்றும் நோக்கத்துடன் வாங்கினார்.

5 மில்லியன் யூரோ

5 மில்லியன் யூரோ

இந்தக் கிராமம் இதற்கு முன்பு 5 மில்லியன் யூரோவுக்கு விற்பனை செய்யப்படப் பட்டியலிடப்பட்டது. ஆனால் இந்தக் கிராமத்தை வாங்க யாரும் முன்வராத காரணத்தால் விலை தொடர்ந்து குறைந்து தற்போது வெறும் 2,59,000 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது.

1BHK விலை

1BHK விலை

ஸ்பெயின் தலைநகரான மாட்ரிட்-ல் 1 BHK வீட்டின் விலையில் ஒரு கிராமத்தையே வாங்க முடியும் என்பது சிறப்பான விஷயமாக இருந்தாலும் இந்தக் கிராமத்தை புதுப்பித்துச் சுற்றுலா தலமாக மாற்றுவதற்குத் தேவையான முதலீடு 2 மில்லியன் யூரோ. அல்லது இதை மக்கள் நிரந்தரமாக வாழ் ஏதுவான பகுதியாக மாற்ற கூடுதலான செலவாகும் என்பது தான் பிரச்சனை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

A hilltop village with 44 houses selling at 1BHK price in Spain; Check other amenities

A hilltop village with 44 houses selling at 1BHK price in Spain; Check other amenities
Story first published: Saturday, November 12, 2022, 20:44 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X