சண்டையில் உருவான மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியம்..!

அண்ணன் தம்பி சண்டையில் உருவான அடிடாஸ், புமா..!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரே ஊரில் துவங்கிய இரண்டு உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களின் சண்டை உலக வரலாற்றில் யாரும் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்துள்ளது.

 

இந்த இரு நிறுவனங்களின் போட்டி எந்த அளவிற்கு உள்ளது என்றால், அடுத்த நிறுவனத்தின் தொழிலாளர்களிடம் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது, அந்த நிறுவனத்தில் இருப்பவரும் இந்த நிறுவனத்தில் இருப்பவரும் திருமணம் முடிக்கக்கூடாது எனக் கடுமையான விதிமுறைகளை இந்நிறுவன ஊழியர்கள் மத்தியில் விதிக்கப்பட்டது. இது இந்த ஊரில் மட்டும் அல்லாமல் உலகளவில் அவர்களுக்கு அவமானங்களைத் தேடித்தந்த நேரம் அது.

இச்சண்டை இரண்டு ஷூ தயாரிக்கும் நிறுவனங்களையும் கடந்து, பாசமிகு இரு சகோதரர்களிடையே நடந்தது என்பது தான் காலத்தின் கொடுமை.

அடிடாஸ் மற்றும் புமா

அடிடாஸ் மற்றும் புமா

இன்று உலகப் பரிபலமான பிராண்டாக விளங்கும் அடிடாஸ் மற்றும் புமா நிறுவனங்களின் உரிமையாளர்களான அடொல்ப் டாஸ்லர் மற்றும் ருடால்ப்ய டாஸ்லர் இரண்டு வயது வித்தியாசத்தில் பிறந்த இந்தச் சகோதரர்கள் 20ஆம் நூற்றாண்டில் முதல் உலகப் போர் முடிந்த பிறகு ஷூ தயாரிப்பில் களம் இறங்கினர்.

டாஸ்லர் ப்ரதர்ஸ் ஷூ பேக்டரி

டாஸ்லர் ப்ரதர்ஸ் ஷூ பேக்டரி

இரு சகோதரர்களும் டாஸ்லர் ப்ரதர்ஸ் என்ற ஒரு ஷூ நிறுவனத்தை ஜெர்மன் நகரில் ஹெர்சொசினாச் (Herzogenaurach) என்ற ஊரில் துவங்கினர். தொடக்கக் காலத்தில் வெற்றிகரமானதாக இயங்கிய நிறுவனம் 1936ல் நடந்த பெர்லின் ஒலிம்பிக் போட்டிகளின் போது மிகப்பெரிய பிரிவினை சந்திக்கத் தொடங்கியது.

நாஸி தலைவன் ஹிட்லர்
 

நாஸி தலைவன் ஹிட்லர்

அடொல்ப் அந்த ஒலிம்ப்க் போட்டியில் நாஸி பிரிவினருக்கு ஆதரவான ஒரு சாதாரணப் பார்வையாளராக இல்லாமல் எல்லோரும் விரும்பத்தக்க ஒரு விளையாட்டு வீரனை மாற்ற விரும்பினார். அதனால் அவர் ஜெஸ்ஸி ஒவென்ஸ்-ஐ தேர்ந்தெடுத்தார்.

ஏற்கனவே ஜெஸ்ஸி ஒவென்ஸ் நான்கு தங்க பதக்கங்ளை வென்றதே இதற்கு முக்கியக் காரணம். ஆனால் ஒவென்ஸ் ஹிட்லரின் எதிர்ப்பை மீறி பதக்கங்களை வென்றிருந்தார். ஆனால் அடொல்ப் அதைப் பற்றிக் கருத்தில் கொள்ளாமல் தன்னுடைய கம்பெனி ஷூவை அவர் அணிய வேண்டும் என விரும்பினார்.

 

கசப்பான சூழ்நிலை

கசப்பான சூழ்நிலை

பெர்லின் ஒலிம்பிக் மூலம் கிடைத்த ஆதரவின் மூலம் அவர்களின் வருவாய் சீராக முன்னேறியது. எனினும், இரு சகோததர்களிடையே மனக்கசப்பும் இருந்துகொண்டே தான் இருந்தது. இதன் காரணமாக வியாபார யுக்தியிலும் பல மாற்றங்கள் நிலவியது, இருவரின் குடும்பமும் இதனை உணர்ந்தது. இந்தக் கருத்து வேறுபாடுகளின் காரணமாக வியாபார குழுமத்தினிடையே பல்வேறு கசப்பான சூழ்நிலைகள் உருவானது.

இரண்டாம் உலகப் போர்

இரண்டாம் உலகப் போர்

இரண்டாம் உலகப் போரின் போது அதி மற்றும் அவரது மனைவி என இருவரும் வெடிகுண்டுகளில் இருந்து தப்பிக்கப் பதுங்கு குழியில் மறைந்து கொண்டனர். உடனே ருடி மற்றும் அவரது மனைவியும் அடியைப் பின் தொடர்ந்தனர். ஒரே பதுங்கு குழியில் சகோதரர்கள் மறைந்து கொண்டிருக்க, தாக்க வரும் போர் விமானங்களை அடி கெட்ட வார்த்தைகளில் வசைபாடுகிறார்.

அடி திட்டுவதும், ருடி அங்கு வந்த நேரமும் ஒற்றுப்போகத் தன் சகோதரர் தன்னைத் திட்டுவதாக ருடி கருதுகிறார். பின் தன் சகோதரரைப் பழிவாங்க நினைக்கிறார். கசப்பான அந்தப் பதுங்கு குழி சம்பவத்திற்குப் பிறகு ருடி இறுதி வரை தன் முடிவில் உறுதியாகவே இருந்தார்.

 

கைது

கைது

பின் ருடி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுகிறார். முன்னதாக அரங்கேறிய கசப்பான சம்பவமும், கைது செய்யப்படுவதும் ருடிக்கு மேலும் கோபத்தை அதிகரிக்கிறது. இதைத் தொடர்ந்து வெளியான தகவல்களில் பாவ் முகாமில் இருக்க, வெளியே இருந்த அடி அமெரிக்க ராணுவ வீரர்களுக்குத் தனது நிறுவனத்தின் ஷூக்களை விற்பனை செய்கிறார். இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த நேரம் இரு சகோதரர்களின் உறவுகளும் முடிவுக்கு வந்ததது.

அடிடாஸ் மற்றும் புமாவின் துவக்கம்

அடிடாஸ் மற்றும் புமாவின் துவக்கம்

பின் நிறுவனம் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. ருடி நதிக்கு அக்கரையில், தனது புதிய நிறுவனத்தைத் துவங்கினார். முதலில் ருடா எனப் பெயரிட்டிருந்தாலும், பின் அந்தப் பெயரை மாற்றிப் புமா எனப் பெயரிட்டார். அடி தனது நிறுவனத்திற்கு அடிடாஸ் எனப் பெயரிட்டார்.

விதிமுறைகள்

விதிமுறைகள்

அடிடாஸ் மற்றும் புமா நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் ஒருவருக்கொருவர் எந்த வித தகவல் பரிமாற்றமும் செய்து கொள்ளக் கூடாது. இது மேலும் பெருகி நகரம் முழுவதும் பரவியது இதன் மூலம் நகரில் மக்கள் ஒருவருக்கொருவர் பழகலாம் என்பதையே அவர்களுடைய காலணிகளை வைத்து முடிவு செய்தனர்.

அடிடாஸ்-இன் வெற்றி

அடிடாஸ்-இன் வெற்றி

1950களில் அடிடாஸ், குளோபல் ஸ்பொர்ட்டிங் கூட்ஸ் கம்பெனின் மூலம் பெருமளவு வளர்ச்சியடைந்தது இது சரியான நேரத்தில் கிடைத்த தகுதியான வெற்றி என்று பலராலும் பெருமைப்படுப்பட்டது.

புமா ஒரு பெரிய தோல்வியைத் தழுவியது அதற்குக் காரணம் ருடி-க்கும் ஜெர்மன் கால்பந்து அணியின் கோச்க்கும் இருந்த பகையானது அடி இன் வெற்றிக்குப் பெருமளவு வழிவகுத்து அடிடாஸ்-ஐ உலகத்தர வியாபாரமாக உயர்த்தியது.

 

Gucci நிறுவனம்

Gucci நிறுவனம்

இந்நிலையில் புமா சந்தையில் வெற்றி பெற சில ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆனாலும் இந்த வெற்றி மிகப்பெரிதாக ஒன்றுமில்லை. மேலும் குச்சி (Gucci)நிறுவனம் புமாவை வாங்கிய ஓரே காரணத்தினால் தான் இன்றுவரை புமா சந்தையில் நிலைத்திருக்கிறது.

பகைமை

பகைமை

இரு சகோதரர்களிடையே நடந்த இந்தப் பகையின் காரணமாகவே இவர்களுடைய நிறுவனம் இந்த அளவு வளர்ச்சியை அடைய முடிந்ததது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

1980 மற்றும் 1990 ஆண்டுகளில் வணிக நிறுவனமான அடிடாஸ் மற்றும் புமா நிறுவனங்களை உலகம் முழுவதும் வர்த்தகம் செய்தது.

 

மறைவு

மறைவு

இந்தச் சகோதரர்களிடையே இருந்த பகையும் அவர்கள் உருவாக்கிய சமூகப் பிரச்சனைகளும் முடிவுக்குக் கொண்டுவரப்படாமல் இருந்த நிலையிலேயே 1970 களில் 4 ஆண்டுகளில் இடைவெளியில் அடிடாஸ் மற்றும் புமா நிறுவனர்கள் இறந்துவிட்டனர். அவர்களை அவர்கள் வாழ்ந்த இடத்திலேயே எதிர் எதிரே அடக்கம் செய்துவிட்டனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Adidas vs. Puma – The Family Business Feud That Fueled an Industry

Adidas vs. Puma – The Family Business Feud That Fueled an Industry
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X