அலிபாபா 3 வருட ரகசியத் திட்டம்.. அதிர்ந்துபோன சீன டெக்ஸ்டைல் துறை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீனாவின் முன்னணி ஈகாமர்ஸ் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனமான அலிபாபா, பல ஆண்டுக் கடுமையான முயற்சியின் மூலம் ஒட்டுமொத்த சீன ரீடைல் சந்தையையும் (Brick And Mortar கடைகள் உட்பட) மார்டன் டெக்னாலஜி-ஐ பயன்படுத்தி டிஜிட்டல் வர்த்தகச் சந்தைக்குள் கொண்டு வந்துள்ள நிலையில் தற்போது சீனாவின் உற்பத்தி நிறுவனங்களைக் குறிவைத்துப் புதிதாக ஒரு ரகசியத் திட்டத்தைத் தீட்டியுள்ளது.

 

இந்தியாவைப் போலவே சீனாவும் அதிக மக்கள் தொகை, பொருளாதாரத்தில் அதிகப்படியான ஏற்ற தாழ்வு இருக்கும் ஒரு சவாலான சந்தை. இத்தகைய சந்தையில் அலிபாபாவின் டிஜிட்டல் புரட்சி உண்மையில் வியப்பு தக்கது. ஆர்டர் முதல் பேமெண்ட், டெலிவரி வரையில் அனைத்தும் டிஜிட்டல் சேவைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சீனா ஏற்கனவே வலிமையாக இருக்கும் உற்பத்தித் துறையில் தொழில்நுட்ப உதவிக் கொண்டு புரட்சி செய்யும் மாபெரும் திட்டத்தை ரகசியமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது அலிபாபா.

13 வருட சிறப்பான வளர்ச்சியில் இந்திய உற்பத்தி குறியீடு..!13 வருட சிறப்பான வளர்ச்சியில் இந்திய உற்பத்தி குறியீடு..!

ஸ்மார்ட் பேக்டரி

ஸ்மார்ட் பேக்டரி

2018ஆம் ஆண்டு அலிபாபா குழுமத்தின் தலைவர் ஜாக் மா உருவாக்கி 5 புதிய இலக்குகளில் ஒன்று தான் இந்த ஸ்மார்ட் பேக்டரி. சீனா உற்பத்தி துறையில் சிறந்து விளங்கினாலும், உற்பத்தி நிறுவனங்களின் திறன் மற்றும் நுகர்வோரின் தேவையைக் குறைந்த காலகட்டத்தில் பூர்த்தி செய்ய வேண்டும் எனத் திட்டமிட்ட ஜாக் மா Xunxi என்ற புதிய நிறுவனத்தைத் துவங்கினார்.

Xunxi நிறுவனம்

Xunxi நிறுவனம்

சீனாவில் தொழில்நுட்ப உதவிகள் இல்லாமல் இயங்கும் நிறுவனங்களைத் தேர்வு செய்து தனது வாடிக்கையாளர் தரவுகள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முதல் ஸ்மார்ட் பேக்ட்ரி-ஐ உருவாக்கி உற்பத்தியில் மாபெரும் வெற்றி கண்டுள்ளது அலிபாபா.

டெக்ஸ்டைல் துறை
 

டெக்ஸ்டைல் துறை

ஜாக் மா-வின் 'New Manufacturing' கொள்கையின் கீழ் உருவாக்கப்பட்ட Xunxi நிறுவனம் தனது புதிய திட்டத்தைப் பரிசோதனை செய்ய முதன் முதலாகத் தேர்வு செய்யப்பட்ட துறை டெக்ஸ்டைல். சீனாவின் டெக்ஸ்டைல் வர்த்தகச் சந்தையில் மதிப்பு சுமார் 328 பில்லியன் டாலர்.

எனவே சீனாவின் டெக்ஸ்டைல் துறையின் வர்த்தகம் மற்றும் உற்பத்தியை அடுத்த 5 வருடத்தில் 3 மடங்கு அதிகரிக்கத் திட்டமிட்டு Xunxi இத்துறையைத் தேர்வு செய்துள்ளது

 

அலிபாபா

அலிபாபா

சீனாவில் 4ல் ஒரு ஆடை அலிபாபா ஈகாமர்ஸ் தளத்தின் வாயிலாக விற்பனை செய்யப்படும் காரணத்தால், மக்கள் எந்த ஆடை, எந்த டிசைன், எந்த நிறம் அதிகம் விரும்புகிறார்கள் என்பது போன்ற தரவுகள் கடல் அளவில் வைத்துள்ளது.

இந்தத் தரவுகளைப் பயன்படுத்தித் தற்போது அலிபாபா உள்ளூர் ஆடை தயாரிப்பாளர்களுக்கு டிசைன் மற்றும் உற்பத்தியில் உதவி செய்கிறது.

 

தொழில்நுட்ப பயன்பாடு

தொழில்நுட்ப பயன்பாடு

இதுமட்டும் அல்லாமல் ஆடை உற்பத்தியாளர்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கத் தனிப்பட்ட தளத்தை உருவாக்கியுள்ளது, இதனால் மூலப்பொருட்கள் விரைவாகக் கிடைப்பது மட்டுமல்லாமல் விலை குறைவாகவும் கிடைக்கும்.

மேலும் அலிபாபாவின் செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோ கைகளைப் பயன்படுத்தி உற்பத்தி அளவீட்டைப் பெருமளவில் அதிகரிக்கும் Xunxi factory prototype உருவாக்கியுள்ளது.

 

டிஜிட்டல் பரிசோதனை

டிஜிட்டல் பரிசோதனை

அலிபாபா இத்துறையில் இறங்கிய பின்பு ஆடையில் செய்யப்படும் டிசைன், நிறம் போன்ற அனைத்தையும் கம்பியூட்டரிலேயே பல விதிமானப் பரிசோதனை செய்து உற்பத்தி துவங்குவதற்கு முன்பாகவே 90 சதவீத வெற்றியை அடைகிறது.

செயற்கை நுண்ணறிவு திறன்

செயற்கை நுண்ணறிவு திறன்

இது மட்டும் அல்லாமல் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட கட்டிங் இயந்திரம், இண்டநெட் இணைப்பு கொண்ட தையல் இயந்திரம் எனப் பல விதமான புதுமைகளை அலிபாபா கொண்டு வந்துள்ளது. மேலும் டிசைன், அளவீடுகள் அனைத்தும் டிஜிட்டலில் பதிவு செய்யப்படுவதால் தொழிற்சாலையில் ஊழியர்கள் எண்ணிக்கையும், நிர்வாகப் பணிகள் செய்ய ஆட்களின் தேவையும் அதிகளவில் குறைகிறது.

இவை அனைத்திற்கும் மேலாக மொத்த உற்பத்தி பணிகளையும், லேப்டாப் அல்லது மொபைலில் கண்காணித்துக்கொள்ள முடியும்.

 

2 வாரம்

2 வாரம்

பொதுவாகச் சீன தொழிற்சாலையில் ஆடைகளுக்கான ஆர்டர் கொடுக்கப்பட்டால் டெலிவரி செய்யக் குறைந்தது 90 நாட்கள் வரை கால அவகாசம் தேவைப்படும். ஆனால் Xunxi factory prototype பயன்படுத்தி அதன் டேட்டா மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால் குறித்த டிசைனில், குறித்த தரத்தில் ஆடைகளை வெறும் 2 வார காலத்தில் டெலிவரி செய்ய முடியும் என அலிபாபாவின் Xunxi நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் ஆர்டர் பெற்ற சில நாட்களிலேயே டெக்ஸ்டைல் நிறுவனங்களால் பொருட்களை டெலிவரி செய்ய முடியும்.

 

4வது தொழிற்துறை புரட்சி

4வது தொழிற்துறை புரட்சி

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 4வது தொழிற்துறை புரட்சி செய்யும் உலகின் டாப் 10 நிறுவனங்கள் பட்டியில் சீனாவின் Xunxi நிறுவனமும் ஒன்று.

மேலும் இந்தச் சேவை அனைத்தும் சீன டெக்ஸ்டைல நிறுவனங்கள் அலிபாபாவின் Taobao மற்றும் Tmall ஈகாமர்ஸ் தளத்தில் பெற முடியும், இதற்காக எந்த அலுவலகத்திற்கும் சென்று ஆலோசனை செய்ய வேண்டியது அவசியம் இல்லை.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Alibaba revolutionary Secret plan: Textile industry on shock

Alibaba revolutionary Secret plan: Textile industry on shock
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X