காணமல் போன ஜாக் மா.. மீண்டும் அதே ஜாக் மா- வாக வருவாரா.. சீனாவில் என்ன தான் நடக்கிறது..

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீனாவின் மிகப் பெரிய பிரபலமான அலிபாபா நிறுவனத்தினை நிறுவிய ஜாக் மாவின் நிலை இன்று புரியாத புதிராகவே இருந்து வருகின்றது.

 

அவரை பற்றிய பல செய்திகள் வெளியாகி வரும் நிலையில், உண்மை என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. உண்மையில் ஜாக் மாவுக்கு என்ன தான் ஆனது. சீன அரசால் கைது செய்யப்பட்டுள்ளரா? எங்கே இருக்கிறார் என்ற பல கேள்விகள் உள்ளன.

உலகின் மிக பிரபலமான நிறுவனமான அலிபாவின் நிறுவனர் ஜாக் மாவை கடந்த இரண்டு மாதங்களாக காணவில்லை. இது சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான மத்திய கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கத்துடன் ஏற்பட்ட மோதலுக்கு பிறகு, இரண்டு மாதங்களாக அவரை காணவில்லை என்பது தான் சந்தேகத்திற்கு காரணமாகவும் பார்க்கப்படுகிறது.

ஜாக் மா எங்கே?

ஜாக் மா எங்கே?

உலகளவில் மிக பிரபலமான தொழிலதிபரான ஜாக் மா, அவரது சொத்து இந்திய மதிப்பில் சுமார் நான்கரை லட்சம் கோடி. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஜாக் மாவால் தொடங்கப்பட்ட அலிபாபா நிறுவனம், இன்று சீனாவில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்று. உண்மையில் இந்த நிறுவனம் தான் அவரை உலகிற்கே அறிமுகப்படுத்தியது. அப்படிப்பட்ட ஒரு நிறுவனர், தொழிலதிபர், இரண்டு மாதங்களுக்கும் மேலாக காணவில்லை. அவர் எங்கே என தெரியவில்லை.

பலருக்கும் ரோல் மாடல்

பலருக்கும் ரோல் மாடல்

இன்றைய காலகட்டத்தில் பல இளைஞர்களுக்கும் ரோல் மாடலாக இருக்கும் ஜாக் மாவை இன்று எங்கே என தெரியவில்லை. அலிபாபா நிறுவனம் வாடிக்கையாளர் தரவுகளை நிதி நிறுவனங்களிடம் அளித்து பணம் கொழிக்கும் விவகாரம், சர்ச்சையானதை தொடர்ந்து இந்த நிறுவனத்தின் மீதான நடவடிக்கை எடுக்க தொடங்கியது சீன அரசு.

மூழ்கியுள்ளது
 

மூழ்கியுள்ளது

மேலும், கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களின் தரவுகளை சீன ரிசர்வ் வங்கிக்கு வழங்காமல் இருந்து வருவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. தனது நிறுவனங்களின் வாடிக்கையாளருக்கு தன் சொந்த பணத்தில் இருந்து கடன் வழங்க வேண்டும் என்ற கருத்தையும் கூறி வந்தது. சீனாவின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த ஜாக் மா, உலகம் வேறு நிலையில் முன்னேறிக் கொண்டிருக்கையில் சீன அரசு இன்னும் பழமை வாதத்தில் மூழ்கி இருக்கிறது என்று தனது கருத்தினை கூறினார்.

சீன அரசை கடுமையாக விமர்சனம்

சீன அரசை கடுமையாக விமர்சனம்

அதோடு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசாங்கத்தினுடைய நிதி கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான வங்கிகள் குறித்தும் கடுமையாக பேசினார். மேலும் வணிக கண்டுபிடிப்புகளையும் புதிய முயற்சிகளையும் தடுக்கும் வகையில் இருக்கும் அமைப்பைச் சீர்திருத்த வேண்டும் என்றும் ஜாக் மா கூறியிருந்தார். உலகளாவிய வங்கி விதிமுறைகளை பழமைவாத அமைப்புகளுடன் ஒப்பிட்டார். ஜாக் மாவின் இந்த பேச்சு சீன அரசாங்கத்தை கடும் கோபப்படுத்திற்கு உள்ளாக்கியது.

ஐபிஓவுக்கு தடை

ஐபிஓவுக்கு தடை

இதற்கிடையில் தான் ஜாக் மாவின் மீது சீன அரசின் கவனம் திரும்பியது. சீன அதிபர் ஜின்பிங்கின் நேரடி உத்தரவின் பேரில், அவரது ஆண்ட் குழுமத்தின் 37 பில்லியன் டாலர் பொது பங்கு வெளியீடு நிறுத்தப்பட்டதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கூறியது. இதே ப்ளூம்பெர்க் கூற்றுப்படி, கிறிஸ்துமஸ்துக்கு முந்தைய நாள், தனது அலிபாபா குழும விசாரணையைத் தொடங்குவதற்கு முன்பு, ஜாக் மா சீனாவில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஜாக் மாவை காணவில்லையே

ஜாக் மாவை காணவில்லையே

அதன் பிறகு தான் ஒரு அவசர வேலை காரணமாக ஜாக் மாவால் இந்த ஆண்டின் ஆப்பிரிக்காவின் வணிக ஹீரோக்களின் ஃபைனலின் நடுவர் குழுவின் ஒரு பகுதியாக இருக்க முடியாது என்று அலிபாபா செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ஆனால் தற்போது வரையில் அவரை எந்த செய்தி நிறுவனங்களோ எங்கும் வெளியில் காண முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆக அவர் காணாமல் போனதில் சீன அரசாங்கத்திற்கு ஏதாவது தொடர்பு இருக்குமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

ஒடுங்கி போன ஜாக் மாவின் குரல்

ஒடுங்கி போன ஜாக் மாவின் குரல்

இதனை தொடர்ந்து தான் கடந்த இரண்டு மாதங்களாக ஜாக் மா-வின் குரல் ஒடுங்கியதோடு, அவரையும் பொதுவெளியிலும் காணவில்லை. சில சீன செய்தி நிறுவனங்கள் அவர் அரசின் கண்காணிப்பில் உள்ளதாக செய்தி வெளியிட்டிருக்கின்றன, கம்யூனிச சீனாவில் அரசின் கண்காணிப்பு என்பது வீட்டு காவல், தடுப்பு காவல் அல்லது கைது என்ற பொருளில் பார்க்கப்படுகிறது. ஆக மொத்தத்தில் ஜாக் மா தற்போது வீட்டுக் காவலில் கைதியாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மிகப்பெரிய தவறு

மிகப்பெரிய தவறு

எனினும் ஜாக் மா சீனாவில் என்ன ஆனார் என்பது வெளிச்சத்திற்கு வராத விவகாரமாகவே உள்ளது. இந்த நிலையில் இன்று ஆங்கில தளத்தில் வெளியான செய்தியொன்றில், செய்திகள் கூறுவது போல் அவர் சீன அரசின் கண்கானிப்பில் இருந்தாலும், இது அவர்களுடைய மிக விலையுயர்ந்த தவறாக இருக்கும். அதாவது மிகப்பெரிய தவறாக இருக்கும்.

முதலீடுகளை கட்டுப்படுத்தும்

முதலீடுகளை கட்டுப்படுத்தும்

ஏனெனில் சீன அரசின் இந்த நடவடிக்கையால், சீனாவில் உள்ள தொழில் முனைவோரின் மன உறுதி மோசமாக இருக்கும். இது சீனாவில் அரசியலில் நிச்சயமற்ற தன்மையினை காண்பிக்கும். இது அன்னிய நேரடி முதலீடுகளை கட்டுப்படுத்தும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அலிபாபாவின் உதவி தேவை

அலிபாபாவின் உதவி தேவை

அதோடு ஹூவாய் போன்ற போன்ற மிகப்பெரிய நிறுவனங்களை சீன ராணுவத்துடன் தொடர்புடையதாக, கூறி அமெரிக்கா தடை செய்துள்ளது. இதனால் அமெரிக்காவில் தங்களது வணிகத்தினை மேம்படுத்துவதற்கும், விலையுயர்ந்த தொழில்நுட்பங்களை கொண்டு வருவதற்கும், அலிபாபா போன்ற நிறுவனங்களின் உதவி தேவை. இதனால் தான் சீன அரசாங்கம் அலிபாபாவை கட்டுப்படுத்த விரும்புகிறது என சிலர் நினைக்கிறார்கள்.

பழைய ஜாக் மாவாக வரப்போவதில்லை

பழைய ஜாக் மாவாக வரப்போவதில்லை

இதனால் அலிபாபாவிலிருந்து ஆண்ட் பைனான்ஷியலை பிரிக்க நினைக்கலாம். இந்த நடவடிக்கைக்கு நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்து இருக்கலாம். இதனால் இந்த அதிரடியான நடவடிக்கை வந்திருக்கலாம். ஆனால் இதுவரையில் உண்மை என்ன என்பது தெரியவில்லை. எப்படி இருந்தாலும், ஜாக் மா மீண்டும் பழைய ஜாக் மாவாக திரும்ப வரப்போவதில்லை.

எப்போது வருவார்?

எப்போது வருவார்?

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, வங்கிகளின் மாற்றாக ஆன்லைன் தளங்களை பயன்படுத்திக் கொண்டிருந்த அலிபாபா, டென்சென்ட், பைடு மற்றும் ஜேடி.காம் போன்ற வேட்டையாடுபவர்களிடம் இருந்து, வங்கிகள் தங்கள் பச்சை நிறத்தினை பாதுகாக்க முயற்சித்து வருகின்றன. இந்த பிரச்சனை பல நாடுகளில் நிதித்துறையில் சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளன. இப்படி பல பிரச்சனைகளுக்கும், அரசியல் பிரச்சனைகளுக்கும் மத்தியில், ஜாக் மாவின் வரவை

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Alibaba’s jack ma can never go back to being jack ma again

China news updates.. Alibaba’s jack ma goes missing after controversial speech
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X