நியூயார்க் பங்கு சந்தையில் அலிபாபா!! 40 திருடர்கள் ஆப்சென்ட்..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நியூயார்க்: பல சிக்கல்கள், பிரச்சனைகள் பின்பு ஒருவழியாக சீன சில்லறை வர்த்தக நிறுவனமான அலிபாபா நியூயார்க் பங்கு சந்தையில் வெள்ளிக்கிழமை பட்டியலிடப்பட்டது. வர்த்தக துவக்கத்தின் முதல் நாளே சுமார் 25 பில்லியன் டாலர் வரை நிதியை திரட்டியது.

 

ஆமா, இந்த சீன நிறுவனத்திற்கும் நம்ம ரஜினிக்கும் என்ன சம்மந்தம்???

அலிபாபாவும்.. சூப்பர் ஸ்டாரும்...

அலிபாபாவும்.. சூப்பர் ஸ்டாரும்...

நியூயார்க் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட அலிபாபா நிறுவனத்தின் பங்குகள் துவக்க விலையாக 68 டாலர் என்ற அளவில் "பாபா" என்ற சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பிலும், தயாரிப்பிலும் வெளிவந்த படத்தில் பெயரில் விற்கப்பட்டது.

ஜாக் மா

ஜாக் மா

நியூயார்க் பங்குசந்தை வளாகத்தில் அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா அவர்கள் மணியை அடித்து வர்த்தகத்தை திறந்துவைத்தார்.

பங்கு விற்பனை

பங்கு விற்பனை

68 டாலர் என்ற பதிப்பில் சுமார் 32 கோடி பங்குகள் நேற்றைய வர்த்தக்திற்கு திறந்து விடப்பட்டது, இதில் 4.5 கோடி கூடுதல் பங்குகள் நியூயார்க் பங்கு சந்தை வெளியிட்டது. மேலும் உலகம் முழுவதும் சுமாக் 1700 முதலீட்டாளர்கள் இந்நிறுவன பங்களை வர்த்தகம் செய்தனர்.

25 பில்லியன் டாலர்
 

25 பில்லியன் டாலர்

இந்த வர்த்தகத்தில் அலிபாபா புதிய சாதனையை படைத்துள்ளது, நியூயார்க் பங்குசந்தையில் துவக்க நாளில் 25 பில்லியன் டாலர் நிதியை திரட்டிய சீன நிறுவனம் என்ற பெயரை பெற்றுள்ளது. இதற்கு முன் சீன வங்கி நிறுவனமான அங்பாங்க் நிறுவனத்தின் சாதனையை முறியடித்தது.

யாஹூ

யாஹூ

இந்த விற்பனையில் யாஹூ நிறுவனம் வைத்திருந்த அலிபாபா நிறுவன பங்குகளில் சுமார் 8 பில்லியன் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தது குறிப்பிடதக்கது. இதன் மூலம் தற்போது 27.32 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகள் மட்டுமே யாஹூ வைத்துள்ளது.

அலிபாபாவின் ஆதிக்கம்

அலிபாபாவின் ஆதிக்கம்

அமெரிக்காவில் சில்லறை வர்த்தக துறையில் முன்னணி நிறுவனமாக திகழும் அமேசான் மற்றும் ஈபே நிறுவனத்தின் இணையான வர்த்தகத்தை அலிபாபா துவங்கிய 3 வருடத்தில் பெற்றது. இதனால் தற்போது இந்நிறுவனத்தின் ஆதிக்கம் ஒங்கியுள்ளது.

இந்தியாவில் அலிபாபா

இந்தியாவில் அலிபாபா

அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவில் ஸ்னாப்டீல் நிறுவனத்துடன் இணைந்து தனது வர்த்தகத்தை துவங்க திட்டமிட்டுள்ளது அலிபாபா. இதனால் இந்திய நிறுவனங்களான பிளிப்கார்ட், அமேசான் இந்தியா ஆகிய நிறுவனங்களுக்கும் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Alibaba's record IPO debuts at $92.7

Alibaba made its long-awaited Wall Street debut on Friday, under the symbol “BABA" on the heels of a record stock offering that opens the door to global expansion for the Chinese online retail giant.
Story first published: Saturday, September 20, 2014, 13:10 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X