1 தரம், 2 தரம், 3 தரம்.. அமேசான் நிறுவனத்தின் புதிய சேவை!!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சியாட்டில்: ஆன்லைன் சில்லறை விற்பனையில் முன்னோடியாக திகழும் அமேசான் நிறுவனம், மேலும் ஒரு புதிய சேவையை தனது விற்பனை தளத்தில் அறிமுகம் செய்துள்ளது. இந்நிறுவனம் 1999ஆம் ஆண்டு அறிமுகம் செய்த ஏல விற்பனையை சில மாதங்களிலேயே முடக்கியது. இத்திட்டத்தை தற்போது தூசு தட்டி மீண்டும் துவக்கியுள்ளது அமேசான்.

 

இச்சேவையில் சுமார் 15,000 பொருட்களை விற்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதில் பல நுண்கலை பொருட்கள் மற்றும் அறிய வகையான நாணயங்கள் என பல பொருட்களை விற்க மூன்றாம் தரப்பு விற்பனையாளர் ஆர்வம் காட்டியுள்ளனர் என்று அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

1999ஆம் ஆண்டு முயற்சி

1999ஆம் ஆண்டு முயற்சி

அமேசான் நிறுவனம் இது போன்ற ஆன்லைன் ஏல விற்பனை தளத்தை 1999ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது, ஆனால் இத்திட்டம் ஈபே நிறுவனத்துடன் போட்டி கொடுக்க முடியாமல் முடங்கி போனது.

விற்பனையாளர்கள்

விற்பனையாளர்கள்

மேலும் அமேசான் நிறுவனத்தில் 40 சதவீத விற்பனையாளர், தங்களின் வர்த்தகத்தில் சிறப்பான லாபத்தை பெற்று வருவதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேரம் பேசும் வசதி

பேரம் பேசும் வசதி

மேலும் அமேசான் மார்கெட்பிளேஸ் பிரிவின் தலைவர் பீட்டர் கூறுகையில்," பொதுவாக அனைத்து விற்பனையாளர்களும் பேரம் பேசும் வசதி கொண்ட தளத்தை நாடுகின்றனர், இதன் மூலம் அவர்கள் தங்களின் வர்த்தகத்தை பெருக்க முடியும் என தெரிவிக்கின்றனர்" என அவர் கூறினார்.

மேக் ஏன் ஆஃபர்
 

மேக் ஏன் ஆஃபர்

இந்த ஏல விற்பனை திட்டத்தின் பெயர் மேக் ஏன் ஆஃபர், இந்த ஏலத்தில் அளிக்கப்படும் விலையை ஒரு விற்பனையாளர் 72 மணிநேரத்தில் நிரகாரிக்கவும், ஏற்றுக்கொள்ள முடியும், அதேபோல் வாடிக்கையாளர் 72 மணிநேரத்தில் விலை அறிவிப்பை நீக்கவும், மாற்றவும் முடியும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

விரிவாக்கம்

விரிவாக்கம்

மேலும் இத்திட்டத்தை 2015ஆம் ஆண்டிற்கு பின் விரிவாக்கம் செய்யவும் அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amazon adds bidding option to site for fine art, collectibles

Amazon.com Inc added a new feature to its website on Tuesday that allows customers to bid for lower prices on more than 150,000 items, including fine art and rare coins, sold by third-party vendors.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X