அடி கொடுத்த அமேஸானுக்கே ஆப்பா..? 2 வருடத்தில் கடையை மூடும் Amazon spark!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சான் பிரான்சிஸ்கோ: ஆண்டுக்கு சுமார் 59 பில்லியன் டாலர் வருமானம் சம்பாதிக்கும் Amazon கூட தன்னுடைய சில வியாபாரங்களில் தோற்று ஒதுங்கி இருக்கிறது என்றால் நம்புவீர்களா..? நம்பித் தான் ஆக வேண்டும். உலகின் நம்பர் 1 பணக்காரர் ஜெஃப் பிசாஸ் நம்பர் 1 ஆக இருக்க இந்த Amazon நிறுவனம் தான் முழுமுதற் காரணம். அப்படிப்பட்ட Amazon-யே ஃபேஸ்புக்கிடம் தோற்று தோல்வியை ஒப்புக் கொண்டு போட்டியில் இருந்து விலகி இருக்கிறது என்றால் நம்பித் தான் ஆக வேண்டும்

 

ஃபேஸ்புக் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் செயலிக்கு இணையாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் Amazon நிறுவனம் தொடங்கிய Amazon spark செயலியை இப்போது மூடப் போவதாக அதிகார பூர்வத் செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.

அடி கொடுத்த அமேஸானுக்கே ஆப்பா..? 2 வருடத்தில் கடையை மூடும் Amazon spark!

கடந்த ஜூலை 2017-ல் Amazon spark செயல்பாட்டுக்கு வந்தது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் இன்ஸ்டாகிராமுக்குப் போட்டியாக. இன்ஸ்டாகிராமில் செய்தது போலவே Amazon spark-லும் தங்கள் புகைப்படங்களை போஸ்ட் செய்யலாம். பொருட்கள் வாங்குவது மற்றும் பொருட்கள் பற்றிய கதைகளையும், ஐடியாக்களையும் Amazon ப்ரைம் உறுப்பினர்கள் மட்டும் பகிரலாம் என ஒரு மாதிரியாக செயல்பட்டு வந்தது.

இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் போல, ஒருவர் பகிரும் ஐடியாக்களுக்கு மற்றவர்கள் தங்கள் உணர்வுகளை எமோஜீக்கள் மூலமோ அல்லது வார்த்தைகள் மூலமோ கமெண்ட் போடலாம் என இயங்கி வந்தது. ஆனால், இப்படி ஒரு வலைதளம் இன்ஸ்டாகிராமுக்கு ஒரு சரியான போட்டியாளர் எனச் சொல்ல முடியாது. காரணம் Amazon spark பெரிய அளவில் ஷாப்பிங் மற்றும் விற்பனை சார்ந்த பதிவுகளுக்கே முக்கியத்துவம் கொடுத்தது. இன்ஸ்டாகிராமைப் போல எவரும் எளிதில் உள்ளே வர முடியவில்லை. அதனால் சந்தையில் நிலைத்து நிற்க முடியவில்லை.

இன்ஸ்டாகிராமைப் போல நிறைய பேஷன் சார்ந்த படங்களையும், பயணம் சார்ந்த ஃபோட்டோக்களையும் பெரிய அளவில் பகிர்ந்தது. இருப்பினும் இந்த Amazon spark-ஆல் பல தரப்பட்ட மக்களைச் சென்று சேரவில்லை. எனவே Amazon spark தன் கடையை மூட இருக்கிறதாம்.

 

இதைக் குறித்து Amazon நிறுவனம் எந்த ஒரு செய்தி வெளியீடோ அல்லது பத்திரிகையாளர் சந்திப்போ வைக்கவில்லை. ஆனால் Amazon spark சேவை அமேஸான் வலைதளத்தில் இருந்து நீக்கப்பட்டு விட்டது, அமேஸான் செயலியில் (அப்ளிகேஷன்) இருந்தும் Amazon spark நீக்கப்பட்டுவிட்டதை பல டெக்னாலஜி சார்ந்த வலைதளச் செய்திகள் வெளியிட்டிருக்கின்றன.

பண பலமும், அதிகார பலமும் கொண்ட Amazon-க்கே இந்த நிலை என்றால் சிறு வியாபாரிகளுக்கு..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

amazon closed its Instagram like amazon spark services

amazon closed its Instagram like amazon spark services
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X