குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.1,100 ஆக உயர்த்தி அமேசான் அதிரடி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமேசான் நிறுவனம் செவ்வாய்க்கிழமை தங்களது ஊழியர்களின் ஒரு நாள் குறைந்தபட்ச ஊதியத்தினை அடுத்த மாதம் முதல் 15 டாலராக உயர்த்தி அறிவித்துள்ளது. அமேசானில் ஊழியர்களுக்குக் குறைந்த அளவிலான சம்பளம் மட்டுமே அளிக்கப்படுகிறது என்று குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து அமேசான் இந்த முடிவினை எடுத்துள்ளது.

 

இதனால் அமேசான் நிறுவனத்தின் அமெரிக்க ஊழியர்களுக்கு வருகின்ற நவம்பர் 1-ம் தேதி முதல் குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்கு 1100 ரூபாய்ச் சம்பளமாகக் கிடைக்கும்.

 ஊழியர்கள் எண்ணிக்கை

ஊழியர்கள் எண்ணிக்கை

உலகின் இரண்டாம் மிகப் பெரிய மதிப்பு வாய்ந்த நிறுவனமான அமேசான் எடுத்துள்ள இந்த முடிவினால் 3,50,000 ஊழியர்கள் பயனடைய உள்ளார்கள்.

போட்டி நிறுவனங்கள்

போட்டி நிறுவனங்கள்

அமேசான் நிறுவனம் தங்களது போட்டி நிறுவனங்களான வால்மார்ட் மற்றும் டார்கெட் கார்ப் நிறுவனங்களை விட 3 டாலர் அதிக ஊதியத்தினை அளிக்க உடிவு செய்துள்ளது. இதனால் வால்மார்ட் மற்றும் டார்கெட் கார்ப் நிறுவனங்களும் விரைவில் தங்களது ஊழ்யியர்களின் சம்பளத்தினை உயர்த்தவும் வாய்ப்புகள் உள்ளது.

 ஏன்?
 

ஏன்?

அமெரிக்காவில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை தற்போது 20 வருடம் இல்லாத அளவிற்குக் குறைந்துள்ள நிலையில் அமேசான் நிறுவனம் ஊழியர்களுக்கு இந்த உதிய உயர்வினை அளித்துள்ளது அவர்களைத் தக்கவைத்துக்கொள்ளவே என்றும் கூறப்படுகிறது.

அமேசானின் போட்டி நிறுவனங்கள் பலவும் தற்போது புதியதாக ஊழியர்களைப் பணிக்கு எடுக்கும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளன. இதனால் எங்கு ஊழியர்களை வெளியேறினால் புதிய ஆட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுமோ என்றும் அமேசான் இந்த இந்த முடிவினை எடுத்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

அமேசான் ஃபுல்ஃபில்மெண்ட் செண்ட்டர்

அமேசான் ஃபுல்ஃபில்மெண்ட் செண்ட்டர்

அமேசானின் ஃபுல்ஃபில்மெண்ட் செண்ட்டர்களில் உள்ள ஊழியர்களுக்குப் பல நன்மைகள் மறுக்கப்படுவதாகவும் அவர்களைக் கழிவறைக்குச் சென்று வரவும் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் அதனால் பாட்டல்களில் சிறு நீர் கழிப்பதாகவும் இதனால் அவர்கள் மன வருத்தம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

 யாருக்கெல்லாம் இந்த ஊதிய உயர்வு?

யாருக்கெல்லாம் இந்த ஊதிய உயர்வு?

முழு நேரம், பகுதி நேரம், தற்காலிகம் மற்றும் சீசனல் ஊழியர்கள் என அனைவருக்கும் இந்த ஊதிய உயர்வு நவம்பர் 1 முதல் இருக்கும் என்றும் அமேசான் தெரிவித்துள்ளது.

 இந்திய ஊழியர்கள்

இந்திய ஊழியர்கள்

இந்த ஊதிய அமெரிக்கர்களுக்கு மட்டும் தான் என்றும் பிற நாடுகளின் ஊழியர்களுக்கு இந்த ஊதிய உயர்வு நன்மை கிடைக்குமா என்பது சந்தேகமே என்றும் கூறுகின்றனர்.

அமேசான்

அமேசான்

ஆப்பிள் நிறுவனத்திற்கு அடுத்து உலகின் 1 டிரில்லியன் டாலர் சந்தை முதலீட்டினை பெற்ற இரண்டாம் மிகப் பெரிய நிறுவனம் என்ற பெயரினை அமேசான் பெற்றுள்ளது.

ஜெப் பிசோஸ்

ஜெப் பிசோஸ்

அமேசான் நிறுவனரான ஜெப் பிசோஸ் பில்கேட்ஸை பின்னுக்குத் தள்ளி உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர் என்ற பெயரினையும் பெற்றுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amazon.com raises minimum wage to $15 per hour for US employees. What About India?

Amazon.com raises minimum wage to $15 per hour for US employees. What About India?
Story first published: Wednesday, October 3, 2018, 17:46 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X