15 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்பு! உலக சாதனை படைத்த அமேசானின் ஜெஃப் பிசாஸ்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா மட்டுமல்ல, உலகில் எல்லா நாட்டு மக்களுக்குமே, பில்லியனர்கள் மீது ஒரு கண் இருந்து கொண்டே தான் இருக்கிறது.

உலகில் பல ஆண்டுகளாக, பில்லியனர்கள் பட்டியலில் பில் கேட்ஸ் ராஜாவாக வலம் வந்து கொண்டு இருந்தார். 1999-ம் ஆண்டு வாக்கிலேயே, பிக் கேட்ஸின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலரைத் தொட்டுவிட்டது.

ஆனால் பில் கேட்ஸையும் ஓவர் டேக் செய்து அமேசானின் ஜெஃப் பிசாஸ் வந்தார். கடந்த சில வருடங்களாகத் தான், அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பிசாஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.

உலக சாதனை

உலக சாதனை

இதுவரை யாரும் தொடாத ஒரு புதிய இமாலய உயரத்தைத் தொட்டு இருக்கிறார் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பிசாஸ். அப்படி என்ன உயரத்தைத் தொட்டு விட்டார்? ஜெஃப் பிசாஸ், பில் கேட்ஸை விட எத்தனை பில்லியன் டாலர் அதிகம் சொத்து வைத்திருக்கிறார். வாருங்கள் பார்ப்போம்.

15 லட்சம் கோடி ரூபாய்

15 லட்சம் கோடி ரூபாய்

இதுவரை உலகில் யாருடைய சொத்து மதிப்பும் 200 பில்லியன் டாலரைக் கடந்தது இல்லையாம். உலக வரலாற்றில் முதல் முறையாக, அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பிசாஸின் சொத்து மதிப்பு 200 பில்லியன் டாலரைக் கடந்து இருக்கிறது. நேற்றைய கணக்குப் படி ஜெஃப் பிசாஸின் சொத்து மதிப்பு 202 பில்லியன் டாலர் என்கிறது ப்ளூம்பெர்க். இந்திய மதிப்பில் சுமாராக 15 லட்சம் கோடி ரூபாய் (20,200 கோடி டாலர் * 74.36 = 15.02 லட்சம் கோடி ரூபாய்).

எப்படி சாத்தியமானது
 

எப்படி சாத்தியமானது

அமேசான் நிறுவனத்தின் ஒட்டு மொத்த பங்குகளில் 11.1 % பங்குகளை, ஜெஃப் பிசாஸ் தன் வசம் வைத்திருக்கிறார். கடந்த மார்ச் 2020-ல் ஒரு சின்ன சுணக்கம் கண்டு 1,626 டாலரைத் தொட்டது அமேசான் பங்கு விலை. அதன் பின் தொடர்ந்து விலை ஏற்றம் தான். நேற்று அமேசான் நிறுவன பங்குகளின் விலை தன் வாழ் நாள் உச்சமான 3,451 டாலரைத் தொட்டது. எனவே ஜெஃப் பிசாஸின் சொத்து மதிப்பும் 202 பில்லியன் டாலரைத் தொட்டு இருக்கிறது.

ஒரே நாளில் 5.3 பில்லியன் டாலர்

ஒரே நாளில் 5.3 பில்லியன் டாலர்

நேற்று ஒரே நாளில் அமேசான் பங்கு விலை உயர்வால், ஜெஃப் பிசாஸின் சொத்து மதிப்பு 5.2 பில்லியன் டாலர் அதிகரித்து இருக்கிறதாம். இந்த 2020-ம் ஆண்டில் மட்டும், அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசாஸின் சொத்து மதிப்பு 87.1 பில்லியன் டாலர் அதிகரித்து இருப்பதாக, ப்ளூம்பெர்க் சொல்கிறது.

இரண்டாவது இடத்தில் பில் கேட்ஸ்

இரண்டாவது இடத்தில் பில் கேட்ஸ்

202 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்தில் இருக்கும் ஜெஃப் பிசாஸைத் தொடர்ந்து, 124 பில்லியன் டாலருடன் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். ஜெஃப் பிசாஸுக்கும், பில் கேட்ஸுக்கும் இருக்கும் வித்தியாசமே 78 பில்லியன் டாலர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

மற்ற பில்லியனர்கள்

மற்ற பில்லியனர்கள்

அவரைத் தொடர்ந்து ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கர்பெர்க் 115 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்திலும், யாருமே அதிகம் எதிர்பார்க்காத, டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் 101 பில்லியன் டாலருடன் நான்காவது இடத்தில் இருக்கிறார். 86.6 பில்லியன் டாலருடன் பெர்னார்ட் அர்னால்ட் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Amazon founder jeff bezos net worth crossed Rs 15 lakh crore in INR

The amazon e-commerce company founder jeff bezos net worth crossed Rs 15 lakh crore due to amazon share price touched a new high.
Story first published: Thursday, August 27, 2020, 15:44 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X