ஆட்டம் காணும் வல்லரசு நாடு.. வேலைவாய்ப்பு அதிகரிப்பு தான்.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவின் தாக்கம் இன்று உலகம் முழுக்க பல நாடுகளில் இருந்து வரும் நிலையில், அமெரிக்காவில் கொஞ்சம் அதிகமாகவே ஆட்டம் காட்டியுள்ளது எனலாம்.

 

எதற்காகவும் அஞ்சாமல் நெஞ்சை நிமிர்த்தி நிற்கும் அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்பிற்கு, கொரோனாவினால் அடுத்தடுத்த பல பிரச்சனைகளை கொடுத்து வருகிறது என்றே கூறலாம்.

வல்லரசு நாடு என்று கூறப்படும் அமெரிக்காவின் பொருளாதாரத்திலேயே பதம் பார்த்துள்ளது இந்த கொரோனா. அதோடு அமெரிக்காவின் அடிப்படை தூண்டுகோல்களாக இருக்கும் அமெரிக்கர்களின் வேலையை பறித்துக் கொண்டது. இதனால் அங்கு வரலாறு காணாத அளவு வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளது.

விசா நடவடிக்கை

விசா நடவடிக்கை

இதனை நிரூபிக்கும் விதமாக அமெரிக்காவின் வேலையின்மை நலனுக்காக விண்ணபிக்கும் மக்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிகரித்தது. அதோடு அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். ஆக இந்தாண்டு இறுதி வரையில் புதிய விசாக்கள் கிடையாது என் அதிரடியான நடவடிக்களை எடுத்து வருகிறார் அதிபர் டிரம்ப்.

அமெரிக்கர்களுக்கு வாய்ப்பு

அமெரிக்கர்களுக்கு வாய்ப்பு

ஆக டிரம்பின் இந்த அதிரடியான நடவடிக்கை சற்று கைகொடுக்க ஆரம்பித்துள்ளது என்றே கூறலாம். ஏனெனில் அங்கு மற்ற நாட்டினருக்கு கொடுக்கப்படும் வேலைவாய்ப்புகள், தற்போது அமெரிக்கர்களுக்கே கிடைத்து வருகிறது. அதிலும் சம்பளம் அதிகமாக இருந்தாலும் கூட, வேறு வழியில்லாமல் அமெரிக்கர்களை பணி அமர்த்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன ஐடி நிறுவனங்கள்.

வழக்கம்போல செயல்பாடு
 

வழக்கம்போல செயல்பாடு

இந்த நிலையில் அமெரிக்கா பொருளாதாரம் கடந்த ஜுன் மாதத்தில் 4.8 மில்லியன் வேலைகளை உருவாக்கியுள்ளதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளது. இது அமெரிக்காவில் லாக்டவுனில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள உணவகங்கள், பார்கள் என பலவும் மீண்டும் வழக்கம் போல செயல்பட ஆரம்பித்துள்ளன.

அதிகரிக்கும் பணி நீக்கம்

அதிகரிக்கும் பணி நீக்கம்

இதனால் அங்கு மீண்டும் பணிக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. எனினும் அதே நேரம் பணி நீக்கமும் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ஏனெனில் கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் அதிகரித்து வரும் நிலையில், வேலையிழப்புகள் இன்னும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

வீட்டிற்கே திருப்பி அனுப்புகின்றன

வீட்டிற்கே திருப்பி அனுப்புகின்றன

மார்ச் நடுப்பகுதியில் கொரோனாவின் காரணமாக வணிகங்கள் மூடப்பட்ட நிலையில், மீண்டும் வணிகங்களை தொடங்கியபோது அது இன்னும் கொரோனா பரவ காரணமாக அமைந்தது. குறிப்பாக மக்கள் தொகை அதிகமுள்ள கலிபோர்னியா, புளோரிடா மற்றும் டெக்சாஸ் மாகாணங்கள் உட்பட பல மாநிலங்களில் மீண்டும் வணிகங்களை இடை நிறுத்தி வருகின்றனவாம். சில பகுதிகளில் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரியும் படி, சிலர் வீட்டிற்கே திருப்பி அனுப்பியும் வருகின்றனவாம்.

பணியமர்த்தல் அதிகரிப்பு

பணியமர்த்தல் அதிகரிப்பு

இருப்பினும் பிப்ரவரியில் தொடங்கிய மந்த நிலை சற்று ஆறுதல் தரும் விதமாக, பணியமர்த்தல் சற்று அதிகரித்துள்ளது. இதோடு நுகர்வோரின் செலவினங்களும் அதிகரித்துள்ளது. இது குறித்து அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கி தலைவர் ஜெரோம் பவல் இந்த வாரம் சற்று நிலைமை மாற்றம் கண்டுள்ளதாக ஒப்புக் கொண்டுள்ளார்.

எச்சரிக்கும் ஃபெடரல் வங்கி தலைவர்

எச்சரிக்கும் ஃபெடரல் வங்கி தலைவர்

மேலும் பொருளாதாரம் ஒரு முக்கிய கட்டத்திற்குள் நுழைந்திருப்பதாகவும், சொல்லப்போனால் எதிர்பார்த்ததை விட மிக விரைவாக செயல்பட ஆரம்பித்துள்ளது என்றும் பவல் கூறியுள்ளார். ஆனால் வைரஸின் தாக்கமும் அதிகரித்து வருவதால், எங்களது வெற்றி அதனை சார்ந்துள்ளது என்றும் எச்சரித்துள்ளார்.

விவசாயம் அல்லாத ஊதியம் அதிகரிப்பு

விவசாயம் அல்லாத ஊதியம் அதிகரிப்பு

1939லிருந்து அரசாங்கம் பதிவுகளை சேமிக்கத் தொடங்கியதிலிருந்து, கடந்த ஜூன் மாதத்தில் தான் விவசாயம் அல்லாத ஊதிய உயர்வானது ஜூன் மாதத்தில் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இது கடந்த மே மாதத்தில் 2,699 மில்லியனாக இருந்த நிலையில், ஜூன் மாதத்தில் வரலாறு காணாத அளவு 20,787 ஆக உயர்ந்துள்ளது. ஆக இதிலிருந்து மக்கள் கிடைத்த வேலைகளை செய்வதை அறிய முடிகிறது.

சராசரி சம்பளம் குறைவு

சராசரி சம்பளம் குறைவு

கடந்த மாதம் வேலையில்லாதோர் எண்ணிக்கை 11.1% ஆக குறைந்துள்ளது. இது கடந்த மே மாதத்தில் 13.3% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. எனினும் குறைந்த ஊதியம் பெறும் பணியமர்த்தல் மற்றும் ஓய்வு, விருந்தோம்பல் துறையால் தான் உயர்ந்துள்ளது கவனிக்கதக்கது. இது சுமார் 2.1 மில்லியன் வேலைகளை சேர்த்தது. இது சம்பள பட்டியலில் கிடைத்த லாபங்களை ஐந்தில் இரண்டு பங்கினைக் கொண்டுள்ளது. எனினும் இது ஊழியர்களின் சராசரி சம்பளத்தினை 1.2% குறைத்தது.

சம்பள குறைப்பு

சம்பள குறைப்பு

சில நிறுவனங்கள் சம்பளத்தினையுக் குறைத்து, வேலை செய்யும் நேரங்களையும் குறைத்துள்ளன. எனினும் சில்லறை துறை, கல்வி மற்றும் சுகாதாரம் மற்றும் உற்பத்தி, கட்டுமானம் மற்றும் தொழில் முறை, வணிக சேவைகள் துறைகள் உள்ளிட்ட துறைகளில் வலுவான வேலை வாய்ப்பு கிடைத்தது. உள்ளூர் அரசாங்கங்கள் ஆசிரியர்களையும், துணை ஊழியர்களையும் பணியமர்த்தியதால் வேலைவாய்ப்பு சற்று குறைந்தது.

அதிக பணி நீக்கம்

அதிக பணி நீக்கம்

அதோடு மாநில அரசுகள் பல கொரோனா எனும் தொற்று நோயால் வருவாய் வீழ்ச்சியினை கண்டன. இதனால் ஜூன் மாதத்தில் அதிக ஊழியர்களையும் பணி நீக்கம் செய்தன. கொரோனா வைரஸின் பரவலை குறைப்பதற்காக உணவகங்கள், ஜிம்கள், பர்கள் மற்றும் பல அலுவலகங்கள் மூடப்பட்ட நிலையில் பலர் வேலையிழந்தனர். ஆனால் தற்போது மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் புதியதாக மீண்டும் பணியமர்த்தி வருவதால், வேலைவாய்ப்பு அதிகரித்து வருகிறது.

செலவினங்களை குறைக்க திட்டம்

செலவினங்களை குறைக்க திட்டம்

ஏற்கனவே வணிகங்கள் மூடப்பட்ட நிலையில் நிறுவனங்கள் மற்றும் பல அமைப்புகள் வறண்டு போயுள்ளன. போதிய வருமானம் இல்லாமல் கடன் களை கூட கட்ட முடியாமல் தவித்து வருகின்றன. ஆக தற்போது புதிய பணியமர்த்தல் என்பது சில இருந்தாலும், பெரும்பாலான நிறுவனங்கள் செலவினங்களை குறைக்க புதிய பணி நீக்கங்களுக்கும் வழிவகுத்துள்ளது. ஆக இது புதிய வேலையின்மை நலனுக்காக விண்ணப்பங்கள் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளனவாம்.

இந்தியாவின் நிலை

இந்தியாவின் நிலை

ஆக இதன் மூலம் மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய, கிடைத்த வேலைகளை செய்து வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது. ஓரு வல்லரசு நாடான அமெரிக்காவிலேயே இந்த நிலை எனில், இந்தியா என்ன செய்யும்.. நினைத்தாலே கொஞ்சம் கவலையாகத் தான் இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

America adds 4.8 million jobs but layoffs remain high amid coronavirus

America added 4.8 million jobs in june month. But at this same time lay off also remain increased.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X