மோடிஜி உங்களுக்குத் தான் இந்த செக்கு வெச்சிருக்கேன், இப்படிக்கு ட்ரம்ப்...! என்ன மோடிஜி ரெடியா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இப்ப சவுதியும், ரஷ்யாவும் 2016-ல போட்ட OPEC ஒப்பந்தத்த மீறி, தங்களோட முழு அளவுல எண்ணெய் உற்பத்திய செய்யப் போறாங்க. இது தான் செய்தி. இந்த செய்திக்கு பின்னாடிஒரு நாட்டோட பொருளாதாரத்தையே அழிக்க அமெரிக்கா திட்டம் போட்டிருக்கு. ட்ரம்போட இந்த பின் வேலைங்க இந்தியாவுக்கு கட்டம் கட்டுறது தெளிவாக் காட்டுது.

இன்ட்ரோ

இன்ட்ரோ

இந்தப் பிரச்னையை முழுமையாகப் புரிந்து கொள்ள கொஞ்சம் பழைய கதைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் அமெரிக்காவின் அழுக்குகள் நமக்குத் தெளிவாகத் தெரிய வரும். ரொம்ப பின்னாடி போக வேண்டாம். 2014-ம் ஆண்டு. ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 100 டாலருக்கு மேல் விற்றுக் கொண்டிருந்த நேரம்.

 கொஞ்சம் கணக்கு

கொஞ்சம் கணக்கு

உதாரணமாக: 2013-ல மொத்த உலகத்துக்கும் 100 லிட்டர் கச்சா எண்ணெய் தேவை. 2013 வரை மொத்த உலகில் 95 லிட்டர் கச்சா எண்ணெய் தான் உற்பத்தி செய்யப் பட்டு வந்தது. ஆக ஒரு எண்ணெய் வள நாட்டுடன் இந்தியா போன்ற எண்ணெய் இறக்குமதி நாடுங்க போய் கச்சா எண்ணெய் கேட்டா "தம்பி ஒரு பேரல் 100 டாலர் வேணும்னா வாங்கு இல்லன்னா கெளம்பு" என்பது தான் நிலை. காரணம் மொத்த தேவையை விட இருக்கும் பொருள் குறைவு. இதனால் போட்டி போட்டுக் கொண்டு விலை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து விற்றுக் கொண்டு இருந்தார்கள் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள். எண்ணெய் இறக்குமதி நாடுகள் விலை அதிகரித்த போதும் மற்ற நாடுகளை கச்சா எண்ணெய்யை வாங்கிக் கொண்டு தான் இருந்தது. வேற வழி. சுருக்கமாக எண்ணெய்யை உற்பத்தி செய்த நாடு விலையை நிர்ணயித்தது.

பிரச்னை ஆரம்பம்

பிரச்னை ஆரம்பம்

2013-ம் ஆண்டு வரை எந்த நாட்டாலும், எந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியும் தங்கள் உற்பத்தியைப் பெரிய அளவில் பெருக்கி, மொத்த உலக கச்சா எண்ணெய் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை. திடீரென 2014-ல் பல புதிய கச்சா எண்ணெய்யை பூமியில் உறிஞ்சும் புதிய தொழில் நுட்பங்கள் சந்தைக்கு வருகின்றன. அவைகளைப் பயன்படுத்தி எல்லா எண்ணெய் வள நாடுகளும் வழக்கத்தை விட அதிக அளவில் கச்சா எண்ணெய்யை உறிஞ்சி எடுத்து விற்கத் தொடங்கியது. 2014 முடிவில் உலக கச்சா எண்ணெய்த் தேவை 100 லிட்டர் தான். ஆனால் உலக எண்ணெய் வள நாடுகளின் மொத்த உற்பத்தி 120 லிட்டர். கவனிக்கவும் "தேவையை விட உற்பத்தி அதிகம்"

விலைப் பிரச்னை

விலைப் பிரச்னை

இந்த கூடுதல் 25 லிட்டர் கச்சா எண்ணெய் தான், ஏற்கனவே விற்றுக் கொண்டிருந்த 95 லிட்டர் கச்சா எண்ணெய்க்கான விலையை கவிழ்கத் தொடங்கியது. கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் "சார் ஒரு பேரலுக்கு 80 டாலர் தான் தர முடியும். நீங்க தர்றீங்களா இல்லையா...?" என்று வாங்கும் நாடுகள் வாய் திறந்து பேரம் பேசத் தொடங்கின. காரணம் இவனிடம் இல்லை என்றால் இன்னொருத்தனிடம் எண்ணெய் இருக்கு, அவர்களிடம் பேரம் பேசிப் பார்க்கலாம். சுருக்கமாக எண்ணெய்யை வாங்கும் நாடுகள் இந்த நேரத்தில் விலையை நிர்ணயிக்கத் தொடங்கினார்கள். இதனால் சர்வதேச அளவில் எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 120 டாலரில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து பேரல் ஒன்றுக்கு வெறும் 25 டாலருக்கு கச்சா எண்ணெய் விற்பனை ஆகத் தொடங்கியது.

அதீத நஷ்டம்

அதீத நஷ்டம்

இந்த நேரத்தில் தான் எண்ணெய் வள நாடுகளுக்கு வெறும் 1 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் விற்று வந்த காசு இப்போது 5 லட்சம் பேரல் விற்றால் தான் கிடைக்கும் என்றால் அரசை எப்படி நடத்துவது. அரசுக்கான வருவாய் எங்கிருந்து வரும். OPEC நாடுகள் அதிர்ந்து போயின.

OPEC நாடுகள்

OPEC நாடுகள்

Algeria, Angola, Ecuador, Equatorial Guinea, Gabon, Iran, Iraq, Kuwait, Libya, Nigeria, Qatar, the Republic of the Congo, Saudi Arabia, United Arab Emirates, Venezuela. இந்த 15 நாடுகள் தான் OPEC நாடுகள்.

OPEC அல்லாத நாடுகள்

OPEC அல்லாத நாடுகள்

Azerbaijan, Bahrain, Brunei, Kazakhstan, Malaysia, Mexico, Oman, Russia, South Sudan, Sudan. இந்த 10 நாடுகள் தான் OPEC-ல் உறுப்பினர் அல்லாத எண்ணெய் உற்பத்தி நாடுகள்.

 OPEC ஒப்பந்தம்

OPEC ஒப்பந்தம்

2016 முடிவில் அனைத்து OPEC உறுப்பினர் மற்றும் உறுப்பினர் அல்லாத நாடுகளும் சேர்ந்து கச்சா எண்ணெய் விலை சரிவை தடுக்க ஒரு முடிவு எடுத்தார்கள். இனி உலகிலேயே மொத்தமாக 2,06,64,000 பேரல்கள் தான் நாள் ஒன்றுக்கு உற்பத்தி செய்ய வேண்டும் என்று தங்களுக்குள் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். இதில் அதிக அளவில் தங்கள் உற்பத்தியை விட்டுக் கொடுத்த நாடுகள் சவுதியும், ரஷ்யாவும் தான். சவுதி இந்த ஒப்பந்தப் படி நாள் ஒன்றுக்கு சுமார் 12 லட்சம் பேரல்களையும் ரஷ்யா நாள் ஒன்றுக்கு சுமார் 3 லட்சம் பேரல்களையும் குறைத்து உற்பத்தி செய்ய ஒப்புக் கொண்டார்கள். இப்படி அனைத்து OPEC உறுப்பினர் மற்றும் உறுப்பினர் அல்லாத நாடுகளும் தங்கள் சக்திக்கு தகுந்தாற் போல உற்பத்தியை குறைத்துக் கொண்டார்கள். இந்த 2016 OPEC ஒப்ப்ந்தப்படி எந்த ஒரு நாடும் குறிப்பிட்டிருக்கும் அளவை விட கூடுதலாக கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்யக் கூடாது. அப்படிச் செய்ய வேண்டும் என்றால் OPEC-ன் நாடுகளின் அனுமதி பெற வேண்டும்.

ஈரான் எண்ணெய் உற்பத்தி

ஈரான் எண்ணெய் உற்பத்தி

ஈரானின் எண்ணெய் உற்பத்தி நாள் ஒன்றுக்கு 38 லட்சம் பேரல்கள். OPEC வலைதள தகவல் படி உலகின் டாப் 10 கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்களில் ஈரானும் ஒன்று. உலகின் மொத்த கச்சா எண்ணெய் தேவையில் ஐந்து சதவிகிதத்துக்கு மேல் ஈரான் தான் உற்பத்தி செய்கிறது. இப்படிப்பட்ட ஒரு நாட்டின் மீது தான் அமெரிக்கா சர்வதேச தீவிரவாத பிரச்னைக்காக பொருளாதாரத் தடை விதித்து இருக்கிறது. இந்த பொருளாதாரத் தடையின் படி எந்த நாடும் ஈரான் உடன் வர்த்தகம் செய்யக் கூடாது. மீறினால் அவர்கள் மீதும் பொருளாதாரத் தடை பாயும். இதை இந்தியா மீறியது.

ஈரான் எதிரிக்கு அமெரிக்க சதி

ஈரான் எதிரிக்கு அமெரிக்க சதி

ஈரானிடம் தொடர்ந்து எண்ணெய் வாங்கும் இந்தியா இந்த முறையும் எண்ணெய்க்கான ஆர்டர்களை ஈரானுக்கு கொடுத்துவிட்டது. இப்போது தான் அமெரிக்கா முழித்துக் கொண்டது. "ஆஹா, ஈரான் கிட்ட வர்த்தகம் வெச்சுக்காதன்னு சொன்னோம், ஆனா ஈரானை முழுசா முடக்க மறந்துடோமே... சரி இப்ப முடக்குவோம்" என்று யோசித்தது. இப்ப என்ன பிரச்னை, நாள் ஒன்றுக்கு ஈரானில் இருந்து வரும் 38 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் வரவில்லை. அந்த வரத்தை நேர் செய்துவிட்டால் பிரச்னை முடிந்தது. சரி, இது தான் திட்டம். தன் அடிபொடி சவுதியை அழைத்தது. தம்பி உன் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். சவுதிக்கு தேவையான நவீன எண்ணெய் உற்பத்தி உபகரணங்கள், இயந்திரங்கள், பொறியாளர்களை அமெரிக்கா சப்ளை செய்யும். அதோடு தன் எதிரி ரஷ்யாவிடமும் சவுதி அரசு பேசி கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.

இந்திய பாதிப்பு

இந்திய பாதிப்பு

சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானைக் கூப்பிட்டு அமெரிக்கா பேசிய உடனேயே பத்திரிகையாளர்களிடம், சவுதி எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க இருக்கும் செய்திகளை சல்மானை உறுதி செய்தார். சவுதி இளவரசர் ரஷ்யாவிடமும் பேசி, சம்மதிக்க வைத்துவிட்டார். இப்போது முறையாக சந்தைக்கு தேவையான 38 லட்சம் பேரலையும் சவுதியும், ரஷ்யாவும் உற்பத்தி செய்து கொடுக்கும். அமெரிக்காவின் இந்த ராஜ தந்திர பின் வேலைகள் காரணமாக விரைவில் ஈரானின் தினசரி வரத்தான நாள் ஒன்றுக்கு 38 லட்சம் பேரல் வந்து சேரும். இனி எந்த நாடும், சந்தையில் போதிய எண்ணெய் வரத்து இல்லை அதனால் தான் ஈரானிடம் வாங்கினேன் என்று சப்பைக் கட்டு கட்ட முடியாது. குறிப்பாக நம் இந்தியா.

ஈரான் எதிர்ப்பு

ஈரான் எதிர்ப்பு

ஈரான் எண்ணெய் வளத் துறை அமைச்சர் Bijan Zangeneh சவுதிக்கு எழுதி இருக்கும் கடிதத்தில் "சவுதி அரசாங்கம், OPEC ஒப்பந்தத்தை மீறி, தங்களுடைய எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க இருக்கிறது. இதற்கு அனைத்து OPEC நாடுகளின் ஒப்புதல் இல்லாமல் செய்வது தவறு. இந்த செயலால் ஈரான் பொருளாதாரம் பாதிக்கப்படும்"-ன்னு தெளிவா சொல்லி இருக்கார். இதைக் கடிதம் என்று சொல்வதை விட கதறல் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த பாயிண்ட் பொதும் டா

இந்த பாயிண்ட் பொதும் டா

இனி இந்தியா, ஈரான் உடன் கச்சா எண்ணெய் பிசினஸில் ஈடுபட்டால் அல்ல பேசினாலே நேரடியாக தடை விதிக்கலாம், கேட்டால் "மோடிஜி, நீங்க தான் சவுதி கிட்ட எண்ணெய் வாங்குறீங்கள்ள, அவன் தான உங்களுக்கு அதிகமா சப்ளை பண்றா? ஏன் அவன் கிட்ட வாங்காம, ஈரான் கிட்டயே வாங்குற, அப்ப நீ ஐக்கிய நாடுகளோட தீவிரவாதத்துக்கு எதிரான போர்ல தீவிரவாதிகளுக்கு சப்போர்ட் பண்ற (அமெரிக்காவ மதிக்கல)" என்று சொல்லி சர்வதேச அளவுல ஒரு பிம்பத்த இந்தியாவுக்கு எதிரா உண்டு பண்ணி அமெரிக்காவே நம்ம மேல ஒரு வலுவான சர்வதேச பொருளாதாரத் தடை விதிக்க வழி வகுத்துக்குச்சு. இது தான் அமெரிக்காவோட முழு ப்ளான். இந்த இடத்துல தான் நம்ம இந்தியா தடுமாறுது.

உலக நடிப்புடா சாமி

உலக நடிப்புடா சாமி

"உலக மக்களுக்கு கச்சா எண்ணெய் இன்றி அமையாதது. அதை சரியான விலையில் கிடைக்கச் செய்றது, சாதாரண மக்களோட பொருளாதாரப் பிரச்னைகளை தீர்க்கும். விலை வாசியைக் கட்டுக்குள்ள வெச்சிருக்கும் அதுக்காகத் தான் அமெரிக்கா தனக்கு சம்பந்தம் இல்லாத OPEC நாடுகள் பிரச்னையில் தலையிடுது"ன்னு சொல்லி கைதட்டல் வேற வாங்கிடுவார் இந்த டிரம்ப். அதாவது உலக நன்மை தாங்க எனக்கு முக்கியம்-ன்னு ஒரு நல்லவன் வேஷம் அழகாக சர்வதேச அரங்கில் திரையிடப்படும்.

அமெரிக்கப் பொறி

அமெரிக்கப் பொறி

இந்த ஈரான காலி பண்ணிடலாம்-ன்னு பொருளாதாரத் தடை போட்டோம். சுண்டக்கா இந்தியா மாதிரியான நாடுங்க ஈரான் கிட்ட கச்சா எண்ணெய் வாங்கியே நம்ம பொருளாதாரத் தடைக்கு மரியாத இல்லாம பண்ணிடுவாய்ங்க. ஆக ஈரானோட பெரிய வருவாய் எண்ணெய். அத காலி பண்றதுக்கு எண்ணெய் உற்பத்திய அதிகரிக்க சவுதியையும், நம்ம எதிரி ரஷ்யாவும் ஓகே சொல்லியாச்சு. அப்புறம் என்ன... இனி ஈரான் காரணுங்களுக்கு காசு கிடைக்காது... டாலர் கையில கிடையாது.. அவங்க எண்ணெய்யை யார் கிட்டயும் விக்க முடியாம... காசு இல்லாம கஷ்டப் படுவாங்க. நாம விதிச்ச பொருளாதாரத் தடையும் இப்ப தான் சூடு புடிக்கும். இத தான் நான் எதிர்பார்த்தேந்ன்னு ட்ரம்பும் சந்தோஷமா வெள்ளை மாளிகையில டீ குடிச்சிக்கிட்டே சிரிப்பாரு.

நம் இந்தியாவின் நிலை

நம் இந்தியாவின் நிலை

ஒரு சர்வதேச அரசியல் களத்துல தெரிந்தோ தெரியாமலோ ஈரானோடு இந்தியாவும் கை கோர்த்துட்டோம். விதியின் விளையாட்டால ரஷ்யாவும் தன் நாட்டோட பொருளாதாரத்தை நிலைப் படுத்த, அமெரிக்காவுக்கு ஓகே சொல்லி எண்ணெய் உற்பத்திய அதிகப்படுத்த இருக்கு. இப்படி எல்லாமே நமக்கு எதிரா இருக்கு...! என்னப் பண்ணப் போறீங்க மோடிஜி...? இப்ப என்ன பண்ணப் போறீங்க...?

ஒரு போரின் வெற்றியை நிச்சயிப்பது வீரர்கள் அல்ல... தலைவர்கள் மோடிஜி. உங்கள் முடிவுக்குக் காத்திருக்கிறோம்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

america is planning to announce sanction on india by covering oil production

america is planning to announce sanction on india by covering oil production
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X