நீங்கள் 3,000 பேரும் வீட்டுக்கு போகலாம்.. எக்ஸ்பீடியா அதிரடி நடவடிக்கை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன்: நீங்கள் ஒரு பயண விரும்பியாக இருந்தால் நிச்சயம் எக்ஸ்பீடியா நிறுவனத்தினை பற்றி அறிந்திருக்க முடியும்.

ஏனெனில் உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே உலகம் முழுவதிலும் எங்கு தங்கலாம், எந்த ஹோட்டலில் உண்ணலாம், எந்த காரில் போகலாம். இதற்கு எவ்வளவு செலவாகும்.

விமான டிக்கெட் முதல் கொண்டு, நீங்கள் தங்கும் அறை வரை அனைத்தையும் ஏற்படுத்தி கொடுக்கும் ஒரு ஆன்லைன் விருந்தோம்பல் நிறுவனம் தான் எக்ஸ்பீடியா.

ஊழியர்கள் பணி நீக்கம்

ஊழியர்கள் பணி நீக்கம்

அமெரிக்காவினை தலைமையிடமாகக் கொண்ட நிறுவனம் உலகம் முழுவதிலும் தனது ஆதிக்கத்தினை பரப்பியுள்ளது என்றால் அது பொய்யில்லை. இப்படி ஒரு உலகளாவிய நிறுவனம் தனது நிறுவனத்தினை மறுசீரமைக்கும் பொருட்டு, தனது மொத்த பணியாளர் விகிதத்தில் 12% பேரை, அதாவது 3,000 பேரை பணி நீக்கம் செய்யப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.

நிறுவனம் மோசமான பயணத்தை மேற்கொள்கிறது

நிறுவனம் மோசமான பயணத்தை மேற்கொள்கிறது

கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்த நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியும் மற்றும் தலைமை நிதி அதிகாரியும் பணி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், தற்போது இந்த நிறுவனத்தினை நெறிப்படுத்தும் விதமாக இந்த பணி நீக்கம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து கடந்த திங்கட்கிழமையன்று ஊழியர்களுக்கு அனுப்பட்ட மின்னஞ்சலில் எக்ஸ்பீடியா குழுமம் மிக மோசமான பயணத்தை தொடர்ந்து கண்டு வருகிறது. அதிலும் அதன் நான்காவது காலாண்டு அறிக்கையை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

பணி நீக்கம் குறித்த அறிவிப்பு இல்லை

பணி நீக்கம் குறித்த அறிவிப்பு இல்லை

மேலும் எக்ஸ்பீடியா வருடாந்திர செலவில் 300 மில்லியன் டாலர் முதல் 500 மில்லியன் டாலர் வரை சேமிக்க இலக்காகக் கொண்டுள்ளது என்று முன்னர் கூறியிருந்தது. ஆனால் இவ்வாறு பணி நீக்கம் குறித்தான அறிவிப்புகள் எதுவும் முன்னரே வெளியாகவில்லை. எனினும் தற்போது செய்யப்படவுள்ள இந்த பணி நீக்கமானது உலகம் முழுவதும் செய்யப்படுவதாகவும் அறிவித்துள்ளது.

கவனம் செலுத்துவோம்

கவனம் செலுத்துவோம்

மேலும் இந்த நிறுவனம் பணி நீக்கம் தவிர பல ஒப்பந்ததாரர்களின் பயன்பாட்டையும் இந்த நிறுவனம் குறைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் எங்கள் வணிகத்தை செயல்திறனில் உயர்த்துவது, வணிக செயல்பாடுகளை மேம்படுத்துவது உள்ளிட்டவற்றில் தொடர்ந்து எங்கள் கவனத்தை செலுத்துவோம் என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலத்தில் இந்த நிறுவனத்தில் 25,400 ஊழியர்கள் உள்ள நிலையில், இவர்களில் 12% பேர் பணி நீக்கம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

America Travel giant Expedia may layoff 3,000 jobs

Online travel giant Expedia will cut 3,000 jobs in worldwide after the disappointing performance in 2019.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X