ஆசியா வேண்டாம்.. அமெரிக்கா தான் பெட்டர்.. எங்களுக்கு பாதுகாப்பு தான் முக்கியம்.. அமெரிக்கா அதிரடி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகெங்கிலும் கொரோனாவின் தாக்கம் வேகமெடுத்து வரும் நிலையில், அமெரிக்காவில் அதன் கோரத் தாண்டவத்தினை காட்டி வருகிறது.

சொல்லப்போனால் உலகிலேயே அதிகளவு பலி எண்ணிக்கையை கண்டுள்ளது அமெரிக்கா. அங்கு 13 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களை பாதித்துள்ள நிலையில், பலி எண்ணிக்கையும் 78 ஆயிரத்தினை தாண்டியுள்ளது.

ஏற்கனவே அமெரிக்காவின் தொழில் நுட்பங்களை களவாடப்படலாம் என்று, சீனாவின் ஹூவாய் நிறுவனத்தின் பொருட்களை கூட அமெரிக்கா தடை செய்தது. ஆனால் அந்த பிரச்சனையை அதோடு விடவில்லை எனலாம்.

அமெரிக்காவின் உற்பத்தி செய்ய அழுத்தம்

அமெரிக்காவின் உற்பத்தி செய்ய அழுத்தம்

கடந்த மார்ச் மாதத்திலேயே தாய்வான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம் (Taiwan Semiconductor Manufacturing Company) அமெரிக்காவில் தனது உற்பத்தியை நிறுவ இருப்பதாக கூறப்பட்டது. மேலும் இதற்காக திட்டத்தினையும் அமெரிக்காவே கொடுத்ததாகவும் கூறப்பட்டது. கடந்த மார்ச் மாதத்தில் டிரம்ப் நிர்வாகம் நவம்பர் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பு ஒரு முடிவினை எடுக்குமாறும் TSMCக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் கூறப்பட்டு வந்தது.

இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்

இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்

மேலும் இப்படி அமெரிக்காவில் ஒரு புதிய ஆலையை நிறுவுவதன் மூலம் நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். இதனால் அமெரிக்க ஜனாதிபதி பெருமை கொள்ள முடியும் என்றும் கூறப்பட்டது. அமெரிக்க நிர்வாகம் தங்களது பாதுக்காப்பு கருதி சிப்களை அமெரிக்காவிலேயே உற்பத்தி செய்ய விரும்புவதாகவும் கூறப்பட்டது.

இதுதான் கவலையளிக்கிறது

இதுதான் கவலையளிக்கிறது

ஆனால் இன்று வெளியான ஒர் அறிக்கையின் படி, கொரோனா வைரஸ் பரவிய பின்பு, டிரம்ப் நிர்வாகமும் சரி, செமிகண்டக்டர் துறையும் ஆசியாவிலிருந்து தொழில் நுட்பத்தினை வளர்ப்பது குறித்து அக்கறை கொண்டுள்ளதாக தி வால் ஸ்ட்ரீட்டின் ஒர் அறிக்கை கூறுகின்றது. மேலும் டிரம்ப் நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகள் TSMCயில் உள்ள T யை பற்றி கவலைப்படுவதாகவும் கூறப்படுகிறது.

எதற்காக அமெரிக்காவில் நிறுவ வேண்டும்

எதற்காக அமெரிக்காவில் நிறுவ வேண்டும்

TSMC நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளரான ஆப்பிள் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் உள்ளன. அதோடு Qualcomm நிறுவனமும் அதன் சிப்களை உருவாக்குவதில் TSMC சார்ந்துள்ளது. இதன் விளைவாகத் தான் அமெரிக்கா TSMC நிறுவனத்தினை அமெரிக்காவில் நிறுவ ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

இவ்வளவு உற்பத்தி செய்யலாம்?

இவ்வளவு உற்பத்தி செய்யலாம்?

இது குறித்து ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், TSMC அமெரிக்காவின் வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகளுடனும் கலந்துரையாடி வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டில் TSMC 171.3 (edge 5nm chips) மில்லியன் சிப்களை உற்பத்தி செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்டெல்லுக்கு இது ஒரு முக்கிய வாய்ப்பு

இன்டெல்லுக்கு இது ஒரு முக்கிய வாய்ப்பு

இதற்கிடையில் இந்த ஆண்டில் பிற்பகுதியில் வெளியிட விருக்கும் ஆப்பிள் 12 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் 5nm chips மூலம் இயக்கப்படும் முதல் ஸ்மார்ட்போன் என்றும் கூறப்படுகிறது. மேலும் அமெரிக்காவின் இன்டெல் நிறுவனமும் இதனை ஒரு சிறந்த வாய்ப்பாக கருதுகிறது. இது குறித்து இன்டெல் நிறுவனத்தின் கிரெக் ஸ்லெட்டர் இது ஒரு நல்ல வாய்ப்பு என்று நாங்கள் கருதுகிறோம். கடந்த காலங்களில் இருந்ததை விட, தற்போது இன்னும் அதிகமாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.

லிஸ்டில் சாம்சங்கும் உண்டு

லிஸ்டில் சாம்சங்கும் உண்டு

மேலும் TSMCசினைத் தவிர இந்த 5nm chipsகளை உருவாக்கும் மற்றொரு நிறுவனம் சாம்சங் ஆகும். உலகின் இரண்டாவது பெரிய பவுண்டரியை நடத்தி வரும் சாம்சங், ஏற்கனவே டெக்சாஸின் ஆஸ்டினில் ஒரு ஆலையை கொண்டுள்ளது. இந்த நிலையில் தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தப்பட்ட சிப்களை உருவாக்க டிரம்ப் நிர்வாகம் விரும்புவதாகவும் கூறப்படுகிறது.

இன்டெல் மிக ஆர்வம்

இன்டெல் மிக ஆர்வம்

மேற்கண்ட இந்த மூன்று நிறுவனங்களின் இன்டெல் மிக ஆர்வமாக உள்ளதாகவும், இது அமெரிக்காவின் பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு இது குறித்தான கடிதத்தினை அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதில் அமெரிக்காவிற்கும் இன்டெல்லின் சிறந்த நலனுக்கான நாங்கள் செயல்பட விரும்புகிறோம். மேலும் மைரோ எலக்ட்ரானிக்ஸினை வணிக ரீதியாக வழங்குவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.

பாதுகாப்பினை வழங்க முடியும்

பாதுகாப்பினை வழங்க முடியும்

இதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியினை அதிகரிக்க முடியும். அமெரிக்காவின் அரசாங்க பாதுகாப்பினை பூர்த்தி செய்யும் என்றும் இன்டெல் தெரிவித்துள்ளதாம். இந்த நிலையில் அமெரிக்கா விரைவில் இது குறித்தான முடிவினை எடுக்கலாம் என்றும், இது குறித்தான அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்காவுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் டிரம்ப், இதில் எப்படி முடிவுகளை எடுக்கப் போகிறாரோ?

வாய்ப்புகளை பயன்படுத்துமா?

வாய்ப்புகளை பயன்படுத்துமா?

ஆனால் தற்போது அமெரிக்கா உள்ள நிலையில் வேலைவாய்ப்பினை பெருக்கவும், முதலீடுகளை அதிகரிக்கவும் இதுபோன்ற வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் தற்போதுள்ள சவாலை நிவர்த்தி செய்து அமெரிக்கா மேம்பட இன்னும் என்ன செய்யப்போகிறதோ தெரியவில்லை. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

America wants to made in chips in the states instead of asia

Early one report said Trump administration wants to secure the supply chain and more chips made in the US. But today wall street journal says both the Trump administration and the semiconductor industry are getting concerned about sourcing technology from Asia after the coronavirus pandemic.
Story first published: Monday, May 11, 2020, 14:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X