ஒரே வருடத்தில் 'ஜப்பான்' குடியுரிமை.. இந்தியர்களுக்கு அடித்தது 'மற்றொரு' ஜாக்பாட்..!

ஒரு வருடத்தில் ஜப்பான் குடியுரிமை.. அமெரிக்கா எதிர்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் ஜப்பான், சீனா..!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக விளங்கும் அமெரிக்காவில், டொனால்டு டிரம்ப் தலைமையிலான ஆட்சி அமைந்த பின்னர் அங்கு வெளிநாட்டவர்களை அந்நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று பல கட்டுப்பாடுகள், உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருவது நாம் தினந்தோறும் பார்த்து வருகிறோம்.

இதனால் அந்நாட்டில் இருக்கும் பல இந்தியா மற்றும் வெளிநாட்டுத் தொழில்நுட்ப வல்லுனர்கள், ஆராய்ச்சியாளர்கள், வர்த்தக தலைவர்கள் என அனைவருமே தாயகத்திற்குத் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா பொருளாதாரத்துடன் போட்டுப்போடும் சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் அமெரிக்கப் பணிகளில் இருந்து வெளியேற்றப்படும் பிற நாட்டவர்களை (திறமையானவர்கள்) தங்களது நாட்டு ஈர்க்கப் பல முக்கிய அறிவிப்புகளை அறிவித்து வருகின்றனர்.

இதில் ஜப்பான் ஒரு படி மேல்...!!!

புதிய விதிகள்..

புதிய விதிகள்..

வெளிநாடுகளில் இருக்கும் திறமையானவர்களை ஜப்பான் நாட்டிற்கு ஈர்க்க, நிரந்தரக் குடியுரிமை வழங்கும் புதிய விதிமுறைகளையும், அதிகளவிலான தளர்வுகளையும் ஜப்பான் நாட்டின் நீதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஒரு வருடத்தில் குடியுரிமை

ஒரு வருடத்தில் குடியுரிமை

ஜப்பான் நாட்டின் நீதி அமைச்சகம் அறிவித்துள்ள புதிய விதிமுறைகள் அனைத்தும் வருகிற மார்ச் மாத இறுதியில் அமலாக்கம் செய்யப்பட உள்ளது.

இப்புதிய விதிமுறைகளில், நிரந்தரக் குடியுரிமைக்காக ஒரு விண்ணப்பம் அனைத்துத் தகுதிகளையும் பெற்றால் ஒரு வருடத்திற்குள் அவருக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கப்படும்.

திகுதிகள் எட்டப்படாதவர்களுக்கு 10 வருடம் ஜப்பான் நாட்டில் வாழ்ந்தாலே போதும் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி நிரந்தரக் குடியுரிமை வழங்கப்படுவதாக இந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

 

மதிப்பெண்கள்

மதிப்பெண்கள்

2012ஆம் ஆண்டு ஜப்பான் மதிப்பெண்கள் வாரியான குடியுரிமை வழங்கும் திட்டத்தை 3 பிரிவுகளாகப் பிரித்தது. இப்பிரிவு அனைத்தும் திறன் அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட்டும் என அறிவித்து இன்று வரை இது நடைமுறையில் உள்ளது.

ஜப்பான் நாட்டில் நிரந்தரக் குடியுரிமைக்காக விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர் போதிய மதிப்பெண்கள் எடுத்தால் 5 வருடத்தில் நிரந்தரக் குடியுரிமை அவர்களுக்கு வழங்கப்படும்.

 

70 மதிப்பெண்கள்

70 மதிப்பெண்கள்

தற்போது ஜப்பான் அறிவித்துள்ள புதிய விதமுறைகளில் 70 மதிப்பெண்கள் எடுத்தில் 3 வருடத்திலும், 80 மதிப்பெண்கள் எடுத்தால் ஓரே வருடத்திலும் நிரந்தரக் குடியுரிமை அளிக்கப்படும் எனக் கால அளவீடுகளை அதிகளவில் குறைத்துள்ளது.

அதிக வாயிப்புகள்

அதிக வாயிப்புகள்

இதேபோல் மதிப்பெண்களை விண்ணப்பதாரர்கள் எளிதாக எடுக்கப் பல தளர்வுகளும் இப்புதிய விதிமுறைகளுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதாவது ஜப்பான் நாட்டில் முதலீடு செய்தாலோ, அல்லது மிகச் சிறந்த கல்லூரிகளில் பட்ட பெற்றவர்களுக்கு அதிகப் பெற முடியும்..

 

பிரிவுகள்..

பிரிவுகள்..

மேலும் மதிப்பெண் பெறும் பிரிவுகளையும் அதிகளவில் பிரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகக் கல்வி, பணியில் சாதனைகள், சம்பளம், வயது, உரிமைகள், நிறுவனத்தில் பதவிகள் மற்றும் சிறப்புச் சாதனைகள் என மதிப்பெண் பட்டியல் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

உதாரணம்

உதாரணம்

புதிய விதிகள் படி, டாக்டர் பட்டம் பெற்றவர்களுக்கு 30 மதிப்பெண்கள், முதுகலைப் பட்டத்திற்கு 20.

அதேபோல் முதலீடு செய்யும் நிறுவனம் 30 மில்லியன் யென்க்கும் அதிக வருடாந்திர வருமானம் பெறுபவர்களுக்கு 50 மதிப்பெண்கள், 25 மில்லியன் யென் வருமானம் பெறுபவர்களுக்கு 40 மதிப்பெண்கள் பெறும் அளவிற்கு வாய்ப்புகள் தற்போது வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

 

என்ஆர்ஐ

என்ஆர்ஐ

தற்போதைய நிலையில் உலக நாடுகளில் முக்கியப் பொருளாதார நாடாக விளங்கும் அமெரிக்காவும் சரி, பிரிட்டனும் சரி தொடர்ந்து குடியுரிமை பரிச்சனைகளை மிக முக்கியமாகப் பார்க்கிறது.

இந்நிலையில் வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்பும் இந்தியர்களுக்குத் தற்போது சீனா மற்றும் ஜப்பான் நாட்டில் மிகப்பெரிய வாய்ப்புகள் குவித்துள்ளது.

அட, சீனா-வை பற்றிச் சொல்லவே இல்லையே..!! தொடர்ந்து படியுங்கள் இணைப்பில்.. !

 

சீனா..

சீனா..

இந்தியர்களை குறிவைக்கும் 'சீனா'.. ஐடி ஊழியர்களுக்கு அடித்தது 'ஜாக்பாட்'..!இந்தியர்களை குறிவைக்கும் 'சீனா'.. ஐடி ஊழியர்களுக்கு அடித்தது 'ஜாக்பாட்'..!

மீம்ஸ்

மீம்ஸ்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Another big opportunity for NRIs and Indian techies: Japan opens door widely

Another big opportunity for NRIs and Indian techies: Japan opens door widely
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X