போனுக்கு சார்ஜர் ஏன் கொடுக்கல.. ஆப்பிள், சாம்சங்கிற்கு அபராதம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆப்பிள், சாம்சங் நிறுவனங்கள் தங்களது புதிய போன் மாடல்களுக்கு சார்ஜர் இல்லாமல் விற்பனை செய்வதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

புதிதாக போன் வாங்கும் போது அதன் பெட்டியில் போன், அதற்கான சார்ஜர், ஹெட்போன் உள்ளிட்டவையுடன் வழங்கப்படும்.

ஆனால் சில சீன நிறுவனங்கள் முதலில் ஹெட் போன் இல்லாமல் போனை விற்க தொடங்கின. அது இப்போது சார்ஜர் வரை தொடர்ந்ததால் ஆப்பிள், சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 பின்லாந்து-க்கு எரிவாயு ஏற்றுமதியை நிறுத்திய ரஷ்யா.. என்ன காரணம்..? பின்லாந்து-க்கு எரிவாயு ஏற்றுமதியை நிறுத்திய ரஷ்யா.. என்ன காரணம்..?

ஐபோன் 12

ஐபோன் 12

முதல் நிறுவனமாக ஆப்பிள் தங்களது ஐபோன் 12 விற்பனையைத் தொடங்கிய போது சார்ஜரை நிறுத்தியது. ஆனால் யூஎஸ்பி கேபிள் வழங்கப்படும். அதை பார்த்த போட்டி நிறுவனமான சாம்சங் USB-C கேபிள்ளை வைத்துவிட்டு சார்ஜர் பிளக்கை நிறுத்தியது.

விளக்கம்

விளக்கம்

சார்ஜர் பிளக் நிறுத்தப்பட்டதற்கு விளக்கம் அளித்த ஆப்பிள் நிறுவனம், இ-வேஸ்ட்டை குறைக்க இது போன்ற முடிவை எடுத்துள்ளோம். போன் வாங்கும் பெரும்பாலோனோர்கள் ஏற்கனவே வீட்டில் பழைய போனின் பிளக்கை வைத்து இருப்பார்கள். எனவே விருப்பம் உள்ளவர்கள் மட்டும் அதை வாங்கிக்கெல்லாம் என தெரிவித்தது.

பிரேசில் நுகர்வோர்

பிரேசில் நுகர்வோர்

ஆனால் பிரேசில் நுகர்வோர் அதை அப்படி ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. பிரேசிலில் உள்ள பல்வேறு நுகர்வோர் உரிமைக் குழுக்கள் -- சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைக்கு சென்றுள்ளன.

அபராதம்

அபராதம்

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சார்ஜர் இல்லாமல் போன் அனுப்பியது தவறானது மற்றும் சட்டவிரோதமானது என கூறி ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் 1,081 டாலர் அபராதமாகச் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.

சேமிப்பு

சேமிப்பு

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் உடன் சார்ஜர் மற்றும் ஹெட்போன் வழங்குவதை நிறுத்தியதால் 6.5 பில்லியன் வரை சேமித்ததாகவும், அதை சந்தையில் விற்று பணமும் பார்த்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

வல்லுநர்கள்

வல்லுநர்கள்

நாம் வீட்டில் பழைய போன் இருந்தால் அதன் சார்ஜர் எப்பசி நாம் வாங்கும் புதிய போனுக்கு தேவையான மின்சாரத்தைச் செலுத்தும் என்பது கேள்வியாக உள்ளது. ஒவ்வொரு சார்ஜிங் அடாப்டர்களும் வெவ்வேறு அளவில் மின்சாரத்தைக் கடத்தும். ஒரு போனுக்கு வேறு சார்ஜர் அடாப்ட்டரை பயன்படுத்தும் போது போன் பழுதும் ஆகலாம் என வல்லுநர்கள் கூறுகிறார்கள்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Apple And Samsug Pays Fine For Not Providing Chargers With New

போனுக்கு சார்ஜர் ஏன் கொடுக்கல.. ஆப்பிள், சாம்சங்கிற்கு அபராதம்! | Apple And Samsug Pays Fine For Not Providing Chargers With New Phones
Story first published: Saturday, May 21, 2022, 18:25 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X