ஆப்பிளுக்கு அதிரடி அபராதம்.. இதப் பண்ணா ஸ்லோவாயிடுமா.. 27 மில்லியன் கட்டுங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாரிஸ்: உலகின் மிக அழகிய நகரங்களில் ஒன்று பாரிஸ். பாரிஸ் நகரத்தின் ஈஃபள் டவர் தொடங்கி உணவுகள், சுற்றுலா தளங்கள் என எல்லாமே அற்புதம் தான்.

இந்த அழகிய பிரான்ஸ் நகரம், உலகின் மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் நிறுவனத்தின் மீது ஒரு அதிரடி காட்டி இருக்கிறது.

அப்படி என்ன அதிரடி காட்டி விட்டது.. ஆப்பிள் என்ன பதில் சொல்கிறது என எல்லாவற்றையும் விரிவாகப் பார்ப்போம்.

 வாட்ஸப் யூசர்கள் கவனத்துக்கு.. இனி எங்கும் அலைய வேண்டாம், அந்த சேவை விரைவில் தொடக்கமாம்! வாட்ஸப் யூசர்கள் கவனத்துக்கு.. இனி எங்கும் அலைய வேண்டாம், அந்த சேவை விரைவில் தொடக்கமாம்!

ஆப்பிள்

ஆப்பிள்

உலகின் முன்னணி ஸ்மார்ட்ஃபோன் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களைத் தயாரிக்கும் நிறுவனம் தான் இந்த ஆப்பிள். தற்போது வரை ஆப்பிளின் மென் பொருள் தரத்துக்கும் (Software Quality), ஒட்டு மொத்த ஆப்பிள் பொருளின் செயல்பாட்டு தரம் (Performance Quality)-க்கும் என்று தனி ரசிகர் பட்டாளங்கள் உண்டு. என்ன விலை சொன்னாலும் கண்ணை மூடிக் கொண்டு வாங்குவார்கள்.

டிசம்பர் 2017

டிசம்பர் 2017

கடந்த டிசம்பர் 2017-ல், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களில் 10.2.1 மற்றும் 11.2 சாஃப்ட்வேர்களை அப்டேட் செய்தால் ஐபோனின் வேகம் குறைந்துவிடுவதாகச் சொன்னார்கள். அதோடு ஐபோன்களின் பேட்டரி நேரமும் கணிசமாக குறைந்துவிடுவதாகச் சொன்னார்கள். Halt Planned Obsolescence (HOP) association என்கிற அமைப்பு இந்த பிரச்னையை வெளியே கொண்டு வந்தது.

என்ன பிரச்சனை

என்ன பிரச்சனை

இப்படி சாஃப்ட்வேர் அப்டேட் செய்து ஐபோனின் வேகம் குறைவதால், விரைவில் அடுத்த ஐபோனை வாங்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகிறார்கள் என்றது Halt Planned Obsolescence (HOP) சங்கம். இதனால் ஆப்பிள் நிறுவனம் தன் ஐ ஓ எஸ் சாஃப்ட்வேர்களை மீண்டும் அப்கிரேட் செய்தது. அதோடு பேட்டரியை மாற்றிக் கொடுக்க பெரிய அளவில் தள்ளுபடி எல்லாம் கொடுத்தது.

விசாரணை

விசாரணை

ஆப்பிள் நிறுவனம் தன் தவறுகளை ஒரு பக்கம் சரி செய்து கொண்டிருக்க... மறு பக்கம் Halt Planned Obsolescence (HOP) association அமைப்பின் கோரிக்கையை ஏற்று கடந்த ஜனவரி 2018-ல், பிரான்ஸ் நாட்டு அரசின் Directorate General for Competition, Consumption and the Repression of Fraud - DGCCRF என்கிற அமைப்பு விசாரிக்கத் தொடங்கியது. பல கட்ட விசாரணைக்குப் பின், ஆப்பிள் நிறுவனம் தவறு செய்து இருப்பதாகச் சொல்லி இருக்கிறது அந்த பிரான்ஸ் நாட்டின் DGCCRF அமைப்பு.

முடிவு

முடிவு

விசாரணையின் முடிவில், ஆப்பிள் நிறுவனத்தின் பழைய ஐபோன்களில், மேலே சொன்ன 10.2.1 மற்றும் 11.2 ஐ ஓ எஸ் சாஃப்ட்வேர் வெர்சன்களை அப்டேட் செய்தால், ஐபோன்களின் வேகம் குறைந்துவிடும் என்பதை ஐபோன் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களிடம் ஆப்பிள் நிறுவனம் சொல்லவில்லை என்பதை உறுதி செய்து இருக்கிறார்கள்.

ஆப்பிள் தரப்பு

ஆப்பிள் தரப்பு

ஆப்பிள் நிறுவனமும், ஐ ஓ எஸ்-ன் 10.2.1 மற்றும் 11.2 சாஃப்ட்வேர் வெர்சன்களை பழைய போன்களில் அப்டேட் செய்தால், ஐபோன்களின் வேகம் குறைந்து விடும் என்பதை ஒப்புக் கொண்டார்களாம். அதோடு பிரான்ஸ் நாடு விதித்து இருக்கும் 25 மில்லியன் யூரோ (27.4 மில்லியன் டாலர்) அபராதத்தையும் செலுத்த ஆப்பிள் தயாராக இருக்கிறதாம்.

இந்தியா

இந்தியா

பிரான்ஸில் சாஃப்ட்வேர் அப்டேட் செய்வதால் ஸ்மார்ட்ஃபோனின் வேகம் குறைந்துவிடும் செய்தியை சொல்லவில்லை என்பதற்காகவே 25 மில்லியன் யூரோ அபராதம் எல்லாம் விதிக்கிறார்கள். ஆனால் நம் இந்தியாவிலோ உயிரே போனால் கூட இப்படி எல்லாம் ஒரு நல்ல தீர்ப்பு கொடுத்து வியாபாரிகளுக்கு, தரம் தொடர்பாக பயம் வர வைப்பார்களா என்று தெரியவில்லை. இப்படி இந்தியாவிலும் ஒரு நாள் தீர்ப்புகள் வழங்கப்படும் என நம்புவோம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Apple fined for not informing iphone slowdown on ios update

Apple company slapped with a fine of 25 Million Euro for not informing about the iphone slowdown on ios update version 10.2.1 and 11.2.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X