எப்பவும் நாங்க தான் நம்பர் 1!! மார்தட்டும் ஆப்பிள்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கலிபோர்னியா: ஆப்பிள் இன்க் நிறுவனம் புதிய மொபைல் பேமெண்டு சிஸ்டத்தை அறிமுகம் செய்துள்ளது. துவங்கிய முதல் முன்று நாட்களில் வாடிக்கையாளர்களிடம் வழக்கும் போல் பெறும் வரவேற்பை பெற்றது. இப்புதிய சேவையின் பெயர் "ஆப்பிள் பே" ("Apple Pay")

முதல் மூன்று நாட்களிலேயே சந்தையில் இருக்கும் பிற நிறுவனங்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கையை விட அதிகளவில் பெற்றுள்ளது ஆப்பிள் நிறுவனம்.

நம்பர் 1:

நம்பர் 1:

இச்சேவையின் வெற்றியை குறித்து இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான டிம் குக் கூறுகையில்,"துவக்கத்திலேயே முதல் இடத்தை பிடித்து விட்டோம், ஒரே வாரத்தில் சந்தையில் உள்ள பிற போட்டியாளர்களை விடவும் அதிகளவிலான வாடிக்கையாளர்களை கொண்டு நம்பர் 1ஆக உள்ளோம்" என்று மார்தட்டிக் கொண்டார் டிம்.

விசா மற்றும் மாஸ்டர்கார்டு

விசா மற்றும் மாஸ்டர்கார்டு

சந்தையில் உள்ள பிற பேமெண்ட் பயன்பாட்டை விடவும் ஆப்பிள் பே அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்நிறுவனத்தின் தொழில்நுட்பம் மிகவும் சிறப்பாக உள்ளது என் டெபிட் மற்றும் கிரேடிட்கார்டு நிறுவனமான விசா மற்றும் மாஸ்டர்கார்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

கூட்டு

கூட்டு

ஆப்பிள் நிறுவனத்தின் இச்சேவை உடன் பல முன்னணி வங்கிகள் மற்றும் சில்லறை விற்பனை நிறுவனங்கள் இணைந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர் பயன்பாடு அதிகளவில் உள்ளது.

அலிபாபா

அலிபாபா

மேலும் ஆப்பிள் நிறுவனம் சீனா ஆன்லைன் விற்பனை நிறுவனமான அலிபாபா உடன் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

செயல்முறை

செயல்முறை

மேலும் இச்சேவை உயர்தர பாதுகாப்பு அம்சங்களோடு வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் வாடிக்கையாளர் எளிமையாக பொருட்களை பெற முடியும் எனவும் ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. சந்தையில் இச்சேவை பேஸ்புக் மற்றும் கூகிள் நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக உள்ளது.

பிறரை போல் நாங்கள் இல்லை...

பிறரை போல் நாங்கள் இல்லை...

இச்சேவையில் முக்கியமான ஒன்று, பேஸ்புக் மற்றும் கூகிள் நிறுவனத்தை போல் வாடிக்கையாளர் எதை வாங்குகிறார்கள் என்ற தகவலை சேகரிப்பதில்லை. இத்தகைய தகவல் எங்களுக்கு தேவையும் இல்லை என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Apple Pay already No. 1, boasts CEO Tim Cook

Apple CEO Tim Cook said Apple’s new mobile payment system Apple Pay had over 1 million activations in the first three days after it became available, and is now more widely used than any competing payment system.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X