ஸ்டீவ் ஜாப்ஸை தூக்கி சாப்பிடும் டிம் குக்கின் அதிரடி திட்டம்...!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் பிரீமியர் மொபைல் போன் நிறுவனமான ஆப்பிள் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் 350 பில்லியன் டாலர் செலவு செய்து புதிய கிளையினைத் துவங்க இருப்பதாகவும், இதனால் 20,000 ஊழியர்களுக்கு அடுத்த 5 வருடத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. ஆனால் சென்ற வருடம் அமெரிக்காவின் புதிய வரி விதிமுறைக்குப் பிறகு இது எப்படிச் சாத்தியம் என்று அனைவரும் உற்று நோக்கி வருகின்றனர்.

புதிய வரி சட்டத்தின் கீழ் 38 பில்லியன் டாலர் வரியினைத் தங்கள் வெளிநாட்டில் இருந்து வந்த வருவாயினை வைத்துக் கட்ட தாயார் என்று அறிவித்துள்ளது. புதிய வரிச் சட்டம் வந்த பிறகு இது தான் அதிகப்படியாகப் பெறப்படும் வரித் தொகை எனவும் கூறுகின்றனர்.

ஒரு பக்கம் இது மிகப் பெரிய பரிவர்த்தனை என்றாலும் இதனை எப்படி வெற்றிகரமாக ஆப்பிள் நிறுவனம் நிறைவேற்றப்போகிறது என்பது தான் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

 கார்ப்ரேட் வரி

கார்ப்ரேட் வரி

புதிய கார்ப்ரேட் வரி விகிதத்தின் கீழ் 15.5 சதவீதத்தினைச் செலுத்த முன்வந்துள்ள ஆப்பிள் தனது பிற நாடுகளின் வர்த்தகத்தில் இருந்து 245 பில்லியன் டாலரினை அமெரிக்காவிற்குக் கொண்டு செல்ல உள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் அறிக்கையில் வெளிநாடுகளில் இருந்து மட்டும் 252 பில்லியன் டாலர் பெற்றுள்ளதாக அறிவித்து இருந்தது.

வரி ஏய்ப்பு

வரி ஏய்ப்பு

கடந்த சில வருடங்களாக வரி ஏயுப்புச் செய்வதாக ஆப்பிள் நிறுவனத்தின் மீது விமர்சனம் இருந்து வருகிறது. அன்மையில் ஆப்பிள் நிறுவனம் பிரிட்டிஷ் அதிகாரிகளின் தணிக்கைக்குப் பிறகு 100 மில்லியன் டாலர் தொகையினை வரியாகச் செலுத்த முன்வந்துள்ளது.

வரியைக் குறைக்கத் திட்டம்
 

வரியைக் குறைக்கத் திட்டம்

வெளிநாட்டில் பெற்ற லாபத்தினை அமெரிக்காவிற்குக் கொண்டு வருவதாக ஆப்பிள் நிறுவனம் வரியைக் குறைக்க உள்ள சாத்திய கூறுகளை ஆராய்ந்து வருகிறது.

டிம் குக்

டிம் குக்

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான டிம் குக் வெளியிட்டுள்ள அறிக்கையில் அமெரிக்காவின் புத்தி கூர்மையின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது எங்களின் முதலீடுகள் மூலமாகத் திகப்படியான நேரடி வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். நாங்கள் பெற்ற வருவாயினை நமது நாட்டிற்கு அளிப்பதில் மகிழ்ச்சியே என்று கூறியுள்ளார்.

நியூ யார்க் டைம்ஸ்

நியூ யார்க் டைம்ஸ்

சென்ற வருடம் நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு டிம் குக் அளித்த பேட்டியில் அமெரிக்காவின் பொருளாதாரத்தினை உயர்த்த உதவுவது நிறுவனத்தின் கடமை என்று கூறியிருந்தார். அதனைப் பிரதிபலிக்கும் வகையில் தான் அவரின் இந்த முதலீட்டு முடிவு இருக்கிறது.

ஊழியர்கள் எண்ணிக்கை

ஊழியர்கள் எண்ணிக்கை

அடுத்து வர இருக்கும் சில வருடங்களில் அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்தின் கீழ் 84,000 ஊழியர்கள் பணிபுரிவார்கள் என்று கூறியுள்ளது. இந்த வேலை வாய்ப்பானது ஏற்கனவே உள்ள கிளை மற்றும் புதிய அலுவலகம் மூலமாக அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

தொழில்நுட்ப உதவி சேவைக்காகத் தான் இரு அலுவலகங்களிலும் வேலை வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் என்கின்றனர். இந்த வருடத்தின் இறுதியில் புதிய அலுவலகத்திற்கான இடத்தினை ஆப்பிள் நிறுவனம் அறிவிக்க உள்ளது.

 

வெள்ளை மாளிகை

வெள்ளை மாளிகை

வெள்ளை மாளிகை ஆப்பிள் நிறுவனத்தின் அறிவிப்பை வரவேற்றது மட்டும் இல்லாமல் இதனால் அமெரிக்கர்கள் அதிகப் பயன் அடைவார்கள் என்றும் கூறியுள்ளது.

அமெரிக்க அரசியல் தலைவர்கள்

அமெரிக்க அரசியல் தலைவர்கள்

ஆப்பிள் நிறுவனம் தங்களது ஐபோன், ஐபாடு மற்றும் மே கணினிகளை அமெரிக்காவில் தயாரிக்காமல் சீன உள்ளிட்ட நாடுகளில் தயாரிக்கிறது என்று அமெரிக்க அரசியல் தலைவர்கள் விமர்சித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் பார்க்

ஆப்பிள் பார்க்

ஆப்பிள் பார்க் கட்ட 5 பில்லியன் டாலர் மட்டுமே ஸ்டீவ் ஜாப்ஸ் செலவு செய்த நிலையில் டிம் குக் 350 பில்லியன் டாலர் செலவு செய்யப் போவதாகத் திட்டமிட்டுள்ளது அனைவரையும் ஆச்சர்யம் அடையச் செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Apple Plans New Campus, Says Will Spend $350 Billion Over Next 5 Years

Apple Plans New Campus, Says Will Spend $350 Billion Over Next 5 Years
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X