அமெரிக்கா, சீனாவுக்கு இடையேயான விரிசல்.. இந்தியாவுக்கு பலன் கிடைக்குமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒவ்வொரு செப்டம்பரிலும் ஆப்பிள் நிறுவனம் தனது புது புது மாடல் செல்போன்களை சிலிக்கான் வேலி வளாகத்தில் வெளியிடும்.

 

அதன் பிறகு சில வாரங்களுக்கு பின்னர் , அதன் சப்ளையளர்களால் பணியமர்த்தப்பட்ட பருவகால தொழிலாளர்களின் படையணிகளால் அசெம்பிளி செய்யப்பட்ட அதன் மில்லியன் கணக்கான புதிய மொபைல்களை அசெம்பிள் செய்யும்.

இது சீனா தொழிற்சாலைகளில் இருந்து உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்யப்படும்.

சீனா-வில் சிங்கிள் டே கொண்டாட்டம்.. உருவானது எப்படி..? அனல் பறக்கும் ஷாப்பிங்..! சீனா-வில் சிங்கிள் டே கொண்டாட்டம்.. உருவானது எப்படி..? அனல் பறக்கும் ஷாப்பிங்..!

லாபகரமான நிறுவனம்

லாபகரமான நிறுவனம்

ஆப்பிளின் ஐபோன்களின் வருடாந்திர வெளியீடானது பொதுவாக கடிகாரத்தினை போலவே இயங்கி வருகின்றது. உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளில் தடையின்றி வழி நடத்துவன் மூலம், அமெரிக்காவின் டெக் நிறுவனமானது லாபகரமான ஒரு நிறுவனமாகவும் மாறியுள்ளது.

ஐபோன் 14 சீரிஸ் உற்பத்தி

ஐபோன் 14 சீரிஸ் உற்பத்தி

ஆனால் இந்த ஆண்டு ஐபோன் 14-க்கான வெளியீடானது செய்யப்பட்ட நிலையில், அதனை சீனாவில் உற்பத்தி செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இது சீனாவில் அதிகரித்து வரும் கொரோனாவின் காரணமாக, அமெரிக்க நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்களும் மறுசீரமைக்க கட்டாயப்படுத்தியுள்ளன. இதன் காரணமாக சீனாவில் உற்பத்தியானது குறையத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் ஐபோன் 14 சீரிஸ் போன்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட தொடங்கியுள்ளன.

இந்தியாவில் ஆப்பிள் உதிரி பாகங்கள்
 

இந்தியாவில் ஆப்பிள் உதிரி பாகங்கள்

இதற்கிடையில் டாடா குழும நிறுவனம் கடந்த வாரத்தில் ஆப்பிள் நிறுவனத்திற்கான உதிரி பாகங்களுக்கான ஆர்டர் பெரியளவில் கிடைத்துள்ளதாகவும், அதனை தமிழகத்தின் ஓசூர் ஆலையில் உற்பத்தி செய்யவிருப்பதாகவும், இதற்காக பணியமர்த்தலை அதிகரிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

லாக்டவுன்

லாக்டவுன்

சீனாவின் ஆப்பிள் போன் உற்பத்தி செய்யப்படும் பாக்ஸ்கான் ஆலை அமைந்துள்ள பகுதியில், கொரோனா காரணமாக லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இங்கு கடந்த வாரமே 7 நாள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக நிறுவனம் உற்பத்தியினை முழுமையாக செய்ய முடியாமல் போனது.

தேவை அதிகரிக்கலாம்

தேவை அதிகரிக்கலாம்

வரவிருக்கும் பண்டிகை காலத்தில் தேவை அதிகரிக்கலாம் என்ற நிலையில், உற்பத்தி சரிவால் பற்றாக்குறை ஏற்படலாம் என தெரிகிறது. நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே சீனாவில் பதற்றமான நிலையே இருந்து வருகின்றது. இதற்கிடையில் பல்வேறு பிரச்சனைகள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. இதற்கிடையில் தான் ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே தனது உற்பத்தியினை மறுசீரமைக்க தொடங்கியுள்ளது.

வளர்ச்சி கண்ட நிறுவனம்

வளர்ச்சி கண்ட நிறுவனம்

ஒரு காலகட்டத்தில் சீனாவுடன் ஆப்பிள் நிறுவனம் நெருங்கிய உறவினை கொண்டிருந்த நிலையில், சமீபத்திய மாதங்களாக அதன் உறவு கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது.

1990களில் திவாலாகிவிட்ட நிலையில், பின்னர் உலகின் மதிப்புமிக்க நிறுவனமாக மாறியது. சீனாவின் பொருளாதார ஏற்றத்தினை இது நெருக்கமாக பின்பற்றிய நிலையில், ஆப்பிள் நிறுவனம் லாபகரமான நிறுவனமாகவும் உருவெடுத்தது.

 வீழ்ச்சியின் பிடியில்

வீழ்ச்சியின் பிடியில்

ஆனால் தற்போது இரு அரசாங்கங்களும் வீழ்ச்சியின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றன. இதன் காரணமாக ஆப்பிளின் வளர்ச்சி என்னவாகுமோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது.


அரசியல் பதற்றங்களால் நிலவி வரும் பிரச்சனைகளை ஆப்பிள் தெரிந்து கொண்டுள்ளது. இதற்கிடையில் சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங் நாட்டில் செயல்படுவது குறித்து, பரிசீலனை செய்ய வணிகத் தலைவர்களை கட்டாயப்படுத்தியுள்ளார்.

எது முக்கியம்

எது முக்கியம்

பல தசாப்தங்களாகவே பொருளாதார வளர்ச்சி என்பதே சீன அரசின் முதன்மை முன்னுரிமையாக இருந்து வந்தது. ஆனால் கடந்த மாதம் பாதுகாப்பு பிரச்சனையானது, வணிக வளர்ச்சியினை விட முன்னுரிமையாக உள்ளது. பாதுகாப்பு முன்னுரிமைக்கு மத்தியில் உற்பத்தியானது பாதிக்கப்பட்டுள்ளது. இது நிறுவனங்களின் வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

சப்ளை சங்கிலியில் தாக்கம்

சப்ளை சங்கிலியில் தாக்கம்

விரைவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம் என்றாலும், இது மீண்டும் எப்போது சரியாகலாம் என்பது தெளிவாக தெரியவில்லை. இதற்கிடையில் தான் ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்கள் சப்ளை சங்கிலியில் தாக்கத்தினை எதிர்கொண்டுள்ளன.

இதற்கிடையில் சீனாவில் தான் ஆப்பிள் நிறுவனத்திற்கு தேவையான உதிரி பாகங்கள் பலவும் குறைவான விலையில் சப்ளை செய்யப்படுகின்றன. இதுவும் தற்போது பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனாவில் பாதிப்பு

சீனாவில் பாதிப்பு

ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் மிகச்சிறிய அளவில் உறபத்தி செய்து வரும் நிலையில், வியட்னாமிலும் சிறிய அளவில் செய்து வருகின்றது. இவ்விரு உற்பத்தி ஆலைகளும் மிகச்சிறியது. ஆனால் சீனாவில் 3 லட்சம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த ஆலையில் தான் தற்போது உற்பத்தியானது பாதிக்கப்பட்டுள்ளது.

நோ ஆப்சண்டா?

நோ ஆப்சண்டா?

சீனா ஆலைகளில் கொரோனாவுக்கு பயந்து பலரும் வெளியேறிய நிலையில், நவம்பர் மாதம் முழுவதும் விடுமுறை எடுக்காமல் பணியாற்றும் ஊழியர்களுக்கு கூடுதலாக 15000 யுவான் வரையில் கூடுதலாக பெறலாம் என்றும் ஃபாக்ஸ்கான் அறிவித்துள்ளது. இதே நவம்பரில் 15 நாட்கள் அல்லது அதற்கு மேல் பணிக்கு சென்றால் அதற்கும் தனியாக சலுகைகள் உண்டு என்றும் அறிவித்துள்ளது.

தினசரி சலுகை

தினசரி சலுகை


மேலும் ஆலையில் தங்கி பணியாற்றும் ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாத தினசரி 55 டாலர் (இந்திய மதிப்பில் 4500 ரூபாய்க்கும் மேல்) போனஸ் ஆக வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. பாக்ஸ்கானின் இந்த அறிவிப்பு சீனாவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், சில தினங்களுக்கு முன்பு ஆலையை விட்டு வெளியேறிய நிலையில் வந்தது.

மாற்று என்ன?

மாற்று என்ன?

மொத்தத்தில் சீனாவுக்கு மாற்றாக இந்தியா மற்றும் வியட்னாம் ஏற்கனவே இருந்தாலும், அங்கு உள்கட்டமைப்பு வசதிகள் என்பது குறைவாகவே உள்ளது. ஆக இது எதிர்காலத்தில் அதிகரிக்கப்படும் பட்சத்தில் இது மேற்கொண்டு அதிகரிக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Apple production fall in china: Will India benefit from the US-China standoff?

For Apple, while India and Vietnam already exist as alternatives to China, infrastructure facilities there are limited. So if it is increased in future it may increase further.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X