ஆப்பிள் சப்ளையர்கள் சீனாவில் இருந்து வெளியேறுவது உறுதி.. பிடன் ஆட்சியிலும் கஷ்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரக்க சீன பதற்றம் என்பது நாம் அறிந்த ஒன்று தான். ஆனால் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பிடனின் வெற்றிக்கு பிறகு, இதற்கு சூமுக தீர்வு காணப்படலாம் என்று நம்பப்பட்டது.
அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தக போருக்கு நடுவில் பல அமெரிக்கா நிறுவனங்களும், சர்வதேச நாடுகளை சேர்ந்த நிறுவனங்களும் சீனாவை விட்டு வெளியேறுவதாக அறிவித்தன.

ஏன் அந்த காலகட்டத்தில் சீனாவில் இருந்து வெளியேறினால், அதற்கு ஊக்கத்தொகை கொடுக்கப்படும் என்றும் சில நாடுகள் அறிவித்தன.

அமெரிக்கா நிறுவனங்கள் வெளியேற வேண்டும்

அமெரிக்கா நிறுவனங்கள் வெளியேற வேண்டும்

அமெரிக்கா சீனா இடையே வர்த்தக போர் இருந்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் பரவலுக்கு சீனா தான் காரணம் என அமெரிக்கா குற்றம் சாட்டியது. இதற்கிடையில் தான் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், சீனாவால் அமெரிக்கா நிறுவனங்களின் தொழில்நுட்பம் திருடப்படுகிறது. ஆக சீனாவிலிருந்து அமெரிக்க நிறுவனங்கள் வெளியேற வேண்டும் என்றும் கூறினார்.

வெளியேற்றம் தான்

வெளியேற்றம் தான்

இதற்கிடையில் பல்வேறு வர்த்தக பிரச்சனையில் தான், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலும் வந்தது. சீனா எதிர்பார்த்ததை போலவே பிடனும் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் இப்போதாவது சீனாவில் இருந்து வெளியேறும் அமெரிக்கா நிறுவனங்கள், தாங்கள் வெளியேறுவதை நிறுத்துவார்களா? குறிப்பாக ஆப்பிளின் சப்ளையர்கள் இருப்பார்களா என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிடன் அரசின் கீழும் ஆப்பிளின் சப்ளையர்கள் வெளியேறுவது நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

ஆப்பிளின் முக்கிய சந்தை சீனா

ஆப்பிளின் முக்கிய சந்தை சீனா

ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய சந்தையே சீனா தான். ஏனெனில் ஐபாட், டேப்லெட்டுகள், ஹோம் பாட் ஸ்மார்ட்ஸ்பீக்கர், ஏர்போர்ட்கள் உள்ளடக்கிய பலவற்றை ஆப்பிள் நிறுவனம் சீனாவில் இருந்து தான் தயாரிக்கின்றது. ஏன் ஆப்பிளின் ஒவ்வொரு பொருட்கள் உற்பத்தியிலும் சீனாவினையே சார்ந்திருந்தது. இதற்கிடையில் டிரம்பின் அறிவிப்புக்கு பின்னர் ஆப்பிளின் சப்ளையர்கள் தங்களது உற்பத்தியினை, சீனாவில் இருந்து வெளியேற்றி வருகின்றன.

பல சலுகைகள்

பல சலுகைகள்

ஆப்பிளின் மிகபெரிய சப்ளையரான ஃபாக்ஸ்கான், ஹான் ஹாய் போன்ற முன்னணி நிறுவனங்கள் வியட்நாம் மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் 270 மில்லியன் டாலர் புதிய முதலீடுகளை ஒதுக்கியுள்ளது. மேலும் வியட்னாம், இந்தியா போன்ற நாடுகள், சீனாவிலிருந்து வெளி வரும் நிறுவனங்களை கவர பல சலுகைகள வாரி வழங்குகின்றன. ஆக இந்த போக்கு மாற்ற முடியாததாக தோன்றுகிறது என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

என்னென்ன நிறுவனங்கள் மாறுகின்றன?

என்னென்ன நிறுவனங்கள் மாறுகின்றன?

இந்தியா, வியட்னாமுடன் ஒப்பிடும்போது சீனாவின் செலவினங்கள் அதிகம். அதற்கு மேல் அமெரிக்க - சீன பதற்றத்தினை கணிக்க முடியாதது என்பதால், ஏற்கனவே பலர் தங்கள் உற்பத்தியினை சீனாவில் இருந்து மாற்றி விட்டன. ஏற்கனவே இந்தியாவின் பி எல் ஐ திட்டத்தின் கீழ், விஸ்ட்ரான், பெகட்ரான், பாக்ஸ்கான், ஹான் ஹாய், சாம்சங் போன்ற முன்னணி நிறுவனங்கள் கூட, இந்தியாவில் தங்களது புதிய உற்பத்தியினை தொடங்க விண்ணப்பித்துள்ளதாக கூறப்பட்டது.

வரி விலக்கு கோரும் ஐபோன்

வரி விலக்கு கோரும் ஐபோன்

இதற்கிடையில் ஐபோன் நிறுவனம் தனது உள்ளூர் அரசிடம், சிப் தயாரிப்புகளுக்கு வரி கோரி ஆதரவு தேடி வருகின்றது. ஐபோனின் ,முக்கிய சப்ளையரான தைவான் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனத்தினை அரிசோனாவில் நிறுவ திட்டமிட்டு வருகின்றது. எனினும் இதன் மூலம் ஐபோனின் அனைத்து வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய முடியாது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சீன பொருள் வேண்டாம்

சீன பொருள் வேண்டாம்

எல்லாவற்றுக்கும் மேலாக சீன பொருட்களை உபயோகப்படுத்த மற்ற உலக நாடுகள் தற்போது யோசிக்கின்றன. ஆக இது சீனாவிலிருந்து மற்ற நாட்டு நிறுவனங்கள் வெளியேறவே வழிவகுக்கும். ஆக ஆப்பிள் நிறுவனமும் இதனை கருத்தில் கொண்டு தனது உற்பத்தியினை மாற்ற நினைக்கலாம். இதன் மூலம் தனது விநியோக சங்கிலியை மேம்படுத்தலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Apple suppliers exit from china won’t slow down under new president

Apple updates.. Apple suppliers exit from china won’t slow down under new president
Story first published: Sunday, November 29, 2020, 17:34 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X