சீனா வேணாம்.. இந்தியா தான் வேணும்.. ஆப்பிள்-இன் திடீர் பாசம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சில நாட்களுக்கு முன் சீனாவில் உற்பத்தி மற்றும் தயாரிப்புத் தளத்தை வைத்துள்ள அனைத்து அமெரிக்க நிறுவனங்களை, உடனடியாக மாற்று இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

இதன் எதிரொலியாக ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் புதிதாக 1 பில்லியன் டாலர் பணத்தை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

17 வருட சரிவில் சீனா.. அமெரிக்கா தான் காரணமா..?17 வருட சரிவில் சீனா.. அமெரிக்கா தான் காரணமா..?

ஆப்பிள்

ஆப்பிள்

ஐபோன், ஐபேட் தயாரிக்கும் உலகின் மிகப்பெரிய டெக்னாலஜி நிறுவனமான ஆப்பிள் இந்தியாவில் தனது உற்பத்தியை அதிகரிக்க 1 பில்லியன் டாலர் வரையிலான முதலீட்டைச் செய்யத் திட்டமிட்டு உள்ளார்.

மேக் இன் இந்தியா

மேக் இன் இந்தியா

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே தைவான் நாட்டைச் சேர்ந்த பாக்ஸ்கான் உடன் இணைந்து ஐபோன் தயாரித்து வரும் நிலையில் தற்போது அமெரிக்க அரசின் நெருக்கடி காரணமாக இந்தியாவில் தனது உற்பத்தியை அதிகரித்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்ய முடிவு செய்து மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 1 பில்லியன் டாலர் வரையில் முதலீடு செய்துள்ளது.

 

 

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு

இப்புதிய முதலீட்டின் மூலம் சென்னையில் இருக்கும் பாக்ஸ்கான் நிறுவனத்தில் உற்பத்தி அதிகரிக்க ஆப்பிள் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் கணிசமான வேலைவாய்ப்பு உயர்வு ஏற்படும் என எதிர்பாபர்க்கப்படுகிறது.

பெங்களூர்

பெங்களூர்

இதேபோல் ஆப்பிள் பாக்ஸ்கான் கூட்டணியில் மென்பொருள் நகரமான பெங்களூரிலும் ஐபோன் தயாரிப்புப் பணிகள் தற்போது துவங்கப்பட்டு உள்ள நிலையில் 1 பில்லியன் டாலர் தொகையில் கணிசமான அளவு பெங்களூர் தொழிற்சாலைக்கும் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

 வெளியேற்றம்

வெளியேற்றம்

ஆப்பிள் நிறுவனத்தைப் போல் இன்னும் பல நிறுவனங்கள் இந்தியா, வியட்நாம், இந்தோனேஷியா போன்ற நாடுகளை நோக்கிய பயணிக்கத் துவங்கியுள்ளது. அமெரிக்கா சீனா மீது விதித்துள்ள இந்த வரி விதிப்புகள் இந்தியாவிற்கு ஒரு வகையில் லாபம் தான்.

வர்த்தகப் போர்

வர்த்தகப் போர்

செப்டம்பர் 1 முதல் சீன பொருட்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய வரி விதிப்புகள் அனைத்தும் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாகத் தற்போது சீனா-அமெரிக்கா இடையிலான வர்த்தகப் போர் தீவிரம் அடைந்து வருகிறது.

 13 சதவீத நிறுவனங்கள்

13 சதவீத நிறுவனங்கள்

இந்த வர்த்தகப் போரின் காரணமாகச் சீனாவில் இருந்து சுமார் 13 சதவீத நிறுவனங்கள் அந்நாட்டை விட்டு வெளியேறும், அதுவும் மிகவும் குறைந்த நாட்களில் இது நிகழும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சில வாரங்களுக்கு முன் எச்சரித்தார்.

உலக நாடுகள்

உலக நாடுகள்

அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தகப் போர் இவ்விரு நாடுகளை மட்டுமல்லாமல் உலக நாடுகளிலும் எதிரொலிக்கும். அனைத்தையும் விடச் சர்வதேச வர்த்தகச் சந்தையில் முதலீட்டு அளவுகள் பெரிய அளவில் மாறுபடும்.

இது வளரும் நாடுகளான இந்தியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் பங்குச்சந்தையில் பெரிய அளவில் பாதிக்கப்படும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Apple To Invest $1 Bn In India to make more iPhones

The factory will be in partnership with Apple’s manufacturing partner Foxconn. The move would help Apple comply with local sourcing norms in single-brand retail. Apple could also lower the prices of iPhones in the country in the future.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X