விழி பிதுங்கி நிற்கும் வல்லரசு! 6 வாரத்தில் காணாமல் போன 3 கோடி வேலை வாய்ப்புகள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்கா என்கிற வல்லரசின் முகம், இந்த கொரோனா வைரஸால், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சிதைந்து கொண்டு இருக்கிறது.

அமெரிக்காவில், கொரோனா வைரஸ் மனித உயிர்களை பறிப்பதோடு மட்டும் நிற்காமல், ஒட்டு மொத்த அமெரிக்க பொருளாதாரத்தையும் கண் முன்னே அதிவிரைவாக சிதைத்துக் கொண்டு இருக்கிறது.

அதன் முதல் வெளிப்பாடு தான் 3 கோடி பேரின் வேலை இழப்புகள். இந்த வேலை இழப்புக்கு அமெரிக்க அரசு பூசும் முதல் மருந்து Unemployment Benefit.

Unemployment Benefit என்றால்?

Unemployment Benefit என்றால்?

அமெரிக்காவில் வேலை இழந்தவர்களுக்கு, மாநில அரசோ அல்லது அமெரிக்க மத்திய அரசோ ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுப்பார்கள். அதை Unemployment Benefit என்பார்கள். அந்த சலுகைக்காக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3.2 மில்லியன் (32 லட்சம்) அமெரிக்கர்கள் விண்ணப்பித்து இருக்கிறார்கள்.

வார சராசரி

வார சராசரி

சராசரியாக கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை அமெரிக்காவில் ஒரு வார காலத்தில் 3.5 லட்சம் பேர் தான் Unemployment Benefit-க்கு விண்ணப்பித்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால் கடந்த மார்ச் கடைசி வாரத்தில் இருந்து, கொரோனா தாக்கத்தால், ஒவ்வொரு வாரமும் சுமாராக 30 லட்சம் பேர் Unemployment Benefit-க்கு விண்ணப்பிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

3.33 கோடி பேர்

3.33 கோடி பேர்

கடந்த ஏழு வாரத்தில் மட்டும், அமெரிக்காவில் மொத்தம் 3.33 கோடி பேர் Unemployment Benefit சலுகைக்காக விண்ணப்பித்து இருப்பதாகச் சொல்கிறது அமெரிக்க அரசசின் தொழிலாளர் துறை. அதை eand.co என்கிற வலைதளத்திலும் செய்தியாகப் பார்க்க முடிகிறது.

50 % பேருக்கு தான் வேலை

50 % பேருக்கு தான் வேலை

இந்த eand.co வலைதளச் செய்தியில் இன்னும் ஒரு அதிர்ச்சிகரமான தகவலைச் சொல்லி இருக்கிறார்கள். அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையில் சுமாராக 50 % மக்கள் மட்டுமே வேலை பார்த்துக் கொண்டு இருப்பதாகவும் சொல்லி அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார்கள். இதை ஆங்கிலத்தில் Employment to Population ratio என்பார்கள்.

பெரிய அடி

பெரிய அடி

அது போக, இப்போது அமெரிக்காவில் Depression வருவதாகச் சொல்கிறார்கள். ஆனால் இந்த Depression இதற்கு முன் அமெரிக்கா பார்த்த பெரிய Depression -களை எல்லாம் விட பெரிதாக இருக்கும் என eand.co வளைதளத்தில் சொல்கிறார் umair haque. கொரோனா வைரஸ், அமெரிக்க பொருளாதாரம் வறுமைக்குச் செல்வதை வேகப்படுத்திவிடும் எனவும் சொல்லி இருக்கிறார்.

நடக்குமா

நடக்குமா

அமெரிக்க வறுமைக்கு எல்லாம் தள்ளப்படுமா..? என்கிற கேள்வி ஆம் என்கிற பதிலுடம் விளக்கம் கொடுக்கிறார் umair haque.
1. வேலை இழப்பால், நுகர்வு குறையும்.
2. இதனால் குட்சிறு குறு வியாபாரங்கள் அடிவாங்கும்.
3. குட்டி வியாபாரிகளிடம் அதிகம் பணம் இருக்காது, விரைவில் கடையை மூடுவார்கள்.
4. இந்த கடைகளில் வேலை பார்ப்பவர்கள் மேலும் வேலை இழப்பார்கள்.
5. வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாது... இப்படியே இந்த சுழற்சி தொடரும். இது ஒரு தலைமுறையையே காலி செய்துவிடும்.

வேலை காணா போச்சு

வேலை காணா போச்சு

பெரு நிறுவனங்களில் வேலை பார்த்தவர்கள் லே ஆஃப் செய்யப்படுவது ஓகே. அந்த பெரிய கம்பெனிகள் மீண்டும் தங்களுக்கு தேவையான போது, தேவையான அளவுக்கு ஆட்களை எடுத்துக் கொள்வார்கள். ஆனால் சிறு குறு வியாபாரிகள் கடையை நடத்த முடியாமல் மூடியவர்கள் எல்லாம் திரும்ப திறப்பார்களா என்ன..? மீண்டும் கடை நடத்த கையில் பணம் இருக்குமா..? அந்த சிறு குறு வியாபாரிகள் மூலம் உருவான வேலை வாய்ப்புகள் எல்லாம் அடியோடு போயே போச்சு என்கிறார் umair haque.

கம்மி ஆட்கள்

கம்மி ஆட்கள்

இதை எல்லாம் தாண்டி இன்னொரு முக்கியமான விஷயம், ஊழியர்களின் சம்பளம் எதிர்காலத்தில் குறையும் என்கிறார் உமைர். அது எப்படி..? இப்போது பெரிய கம்பெனிகள் தாறுமாறாக லே ஆஃப் செய்து கொண்டு இருக்கிறார்கள். நாளை நிலைமை சரியானால் கூட, உடனடியாக நிறைய ஆட்களை வேலைக்கு எடுக்கமாட்டார்கள். குறைந்த அளவிலான ஊழியர்களைக் கொண்டே எல்லா வேலைகளையும் செய்யச் சொல்வார்கள். அப்படி வேலை வாங்கத் தொடங்கிவிட்டால், அதை அப்படியே பின்பற்றுவார்கள்.

நோ புதிய வேலை

நோ புதிய வேலை

எனவே, புதிதாக அதிகம் வேலை கிடைக்காது. இப்படி ஒட்டுமொத்தமாக ஆட்களை குறைவாக எடுத்தால், வேலைக்குச் செல்பவர்கள் அடித்துப் பேசி சம்பளத்தை அதிகமாக கேட்க முடியாது. கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக் கொண்டு வேலை பார்க்க வேண்டிய சூழல் வரும். மக்கள் கையில் போதுமான பணம் இல்லை என்றாஅல், மீண்டும் நுகர்வு குறையும்.. அந்த சுழற்சி தொடரும் என்கிறார் உமைர் ஹேக் (umair haque).

அமெரிக்காவுக்கு சவால்

அமெரிக்காவுக்கு சவால்

இந்த வேலை இல்லா திண்டாட்டத்தை அமெரிக்கா எப்படி சமாளிக்கப் போகிறது..? கொரோனா முடிந்த பின், எப்படி வேலை வாய்ப்புகளை உருவாக்கப் போகிறார்..? அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சீனாவை குறை சொல்வது, கூடுதல் வரி விதிப்பேன் என மிரட்டுவதைத் தவிர வேறு என்ன செய்ய உத்தேசித்து இருக்கிறார்.? அது அவருக்குத் தான் வெளிச்சம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

around 3 crore americans lost jobs in 6 weeks due to COVID-19

In the last 6 weeks around 3 crore american workers has applied for the unemployment benefits. This Covid-19 is creating some deeper problems which results in permanent job loss.
Story first published: Tuesday, May 12, 2020, 15:49 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X