மாலத்தீவில் ஊழியர்களுடன் கொண்டாட்டம்.. ரொம்ப நல்ல ‘பாஸூ’..!

இவர் மட்டும் தான் ‘பாஸூ’ மத்தவங்க எல்லாம் தூசு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2017-ம் ஆண்டில் அதிர்ஷ்டசாலி ஊழியர்கள் என்றால் அது எவால்வ் மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸ் நிறுவன ஊழியர்கள் ஆவார்கள். எப்படி என்கிறீர்களா எவால்வ் மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸ் நிறுவனர் மற்றும் தலைவரான சட்ரி சிடியாட்ங் தனது ஊழியர்களை மாலதீவுக்குச் சுற்றுலா கொண்டு சென்றுள்ளார்.

என்னதான் பொருளாதாரச் சவால்கள் நிறைந்து இருந்தாலும் 2016-ம் ஆண்டு 30 சதவீதம் வரை அதிக லாபம் அடைந்துள்ளது. இரண்டு அடுக்க லாப உயர்வை இந்த நிறுவனம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

சாதாரணச் சுற்றுலா இல்லை

சாதாரணச் சுற்றுலா இல்லை

இது ஒன்றும் சாதாரணச் சுற்றுலா இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்தச் சுற்றுலாவில் ஊழியர்கள் ஒரு ரூபாய் கூடச் செலவு செய்யவில்லை, ஆனால் 5 நட்சத்திர தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். மொத்தம் 100 ஊழியர்களுக்கு நிறுவனர் செலவு செய்த தொகை என்னவென்று பார்த்தால் அது 500,000 டாலர்கள் ஆகும்.

சிடியாட்ங்

சிடியாட்ங்

சிடியாட்ங் ஒரு பாதித் தாய் நாட்டவர் பாதி ஜப்பானியர், இவர் மட்டும் தான் ஆசியாவின் இந்த மிகப் பெரிய விளையாட்டு மீடியா பிராப்ரட்டிஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் ஆவார்.

தாராள மனப்பான்மை

தாராள மனப்பான்மை

45 வயதான சிடியாட்ங் தனது ஊழியர்களுடன் தாராள மனப்பான்மை கொண்டவர் ஆவார். மாலதீவுக்குத் தனது ஊழியர்களை அழைத்து வருவதற்கு முன்பு இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட இடங்களுக்கு ஆடம்பர சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளார்.

பயணச் செய்வதில் விருப்பம்

பயணச் செய்வதில் விருப்பம்

எங்களது நிறுவனத்தில் பணி புரியும் பெரும்பாலான ஊழியர்கள் உலகம் முழுவதும் பயணச் செய்வதில் விருப்பம் உடையவர்கள் அது தான் என்னுடைய விருப்பனும் என்று அமெரிக்கப் பத்திரிக்கைக்குச் சிடியாட்ங் கூறியுள்ளார்.

ஊழியர்களில் பலர் மிகவும் ஏழ்மையான பின்புலம் கொண்டவர்கள்

ஊழியர்களில் பலர் மிகவும் ஏழ்மையான பின்புலம் கொண்டவர்கள்

அதே நேரம் எங்களது நிறுவனத்தின் ஊழியர்களில் பலர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர்கள், அவர்களுடைய கனவை நினைவாக்கும் விதமாக இந்த வாய்ப்பு இருக்கும் என்றும் அவர் கூறினார்.

சிறு வெகுமதிகள்

சிறு வெகுமதிகள்

மேலும் நான் இவர்களுக்கு அளிக்கும் இந்தச் சிறு வெகுமதிகளால் இவர்கள் ஈடுபாட்டுடன் பணிபுரிவார்கள். அதனால் இவர்களை ஒவ்வொரு வருடமும் ஆச்சரியமூட்டும் இடங்களுக்கு ஆடம்பர வசதிகளின் அழைத்துச் சென்று வருகிறேன் என்கிறார்.

ஆரம்பக் கால வாழ்க்கை

ஆரம்பக் கால வாழ்க்கை

சிடியாட்ங் ஒன்றும் பிறப்பால் பணக்காரர் அல்ல. இவருடைய குடும்பம் ஒரு காலத்தில் தங்க இடம் கூட இல்லாமல், ஒரு வேலை உணவு கூடச் சரியாகக் கிடைக்காமல் இருந்தனர் என்பதை இவர் நினைவு கூறுகிறார்.

முதல் வேலை

முதல் வேலை

சொந்தமாக நிறுவனம் துவங்கும் முன்பு இவருடைய குடும்பச் சிக்கல்களில் இருந்து எல்லாம் வெளியில் வருவதற்காக முதலில் நிதி நிறுவனத்தில் தனது பணிபுரிந்துள்ளார்.

சிறந்த மனிதர்

சிறந்த மனிதர்

இதில் என்ன சிறப்பு என்னவென்றால் சிடியாட்ங் ஒரு சிறந்த மனிதர் என்பதை அவருடைய ஊழியர்கள் மறுக்காமல் ஏற்றுக்கொள்வார்கள் என்பதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.

புகைப்படம்: எலைட் ரீடர்ஸ்

 

வீடியோ

ஊழியர்களுடன் நிறுவனரும் சேர்ந்து அடிக்கும் கூத்தை இந்த வீடியோவில் பாருங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Awesome boss sepnds 500,000 dollar expenses to his employees vocation : chatri sityodtong

Awesome boss sepnds 500,000 dollar expenses to his employees vocation : chatri sityodtong
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X