இலங்கையை போல நாங்கள் ஒரு போதும் வீழ்ச்சி காண மாட்டோம்.. பங்களாதேஷ் நம்பிக்கை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்வதேச அளவில் நிலவி வரும் பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் இலங்கையில், அசாதரணமான சூழல் இருந்து வருகின்றது.

 

இதற்கிடையில் பலரும் இலங்கையை போலவே பங்களாதேஷ்-ம் வீழ்ச்சி காணலாம் என கூறி வருகின்றனர்.

நிபுணர்களின் இந்த கருத்தினை நிராகரித்த பிரதமர் ஷேக் ஹசீனா, கொரோனா தாக்குதல், உக்ரைன் - ரஷ்யா பிரச்சனை என பல மோசமான காரணிகள் இருந்தபோதிலும், பங்களாதேஷின் பொருளாதாரம் தொடர்ந்து வலுவாக இருந்து வருகின்றது.

2.9 பில்லியன் நிதியுதவி.. ஆனா ஒரு கண்டிஷன்.. இலங்கை-க்கு செக் வைத்து IMF..! 2.9 பில்லியன் நிதியுதவி.. ஆனா ஒரு கண்டிஷன்.. இலங்கை-க்கு செக் வைத்து IMF..!

சவால்களை தாண்டி செயல்பாடு

சவால்களை தாண்டி செயல்பாடு

தொடர்ந்து விடாமுயற்சியுடன் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் தற்போது சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. இது பங்களாதேஷ்-க்கு மட்டும் அல்ல. எனினும் எங்கள் பொருளாதாரம் வலுவாக இருந்து வருகின்றது.

கடனையும் சரியாக செலுத்தி வருகின்றோம். பங்களாதேஷின் கடன் விகிதமும் குறைவு. எங்களுடைய பொருளாதாரம் சரியாக திட்டமிடப்பட்டுள்ளது என்றும் பங்களாதேஷ் பிரதமர் தெரிவித்துளார்.

பொருளாதாரம் வலுவான செயல்பாடு

பொருளாதாரம் வலுவான செயல்பாடு

திட்டமிடப்பட்ட காரணிகளுக்கு மத்தியில் பொருளாதாரம் வலுவாக இருக்கிறது. மேற்கோண்டு நாங்கள் எந்த கடனையும் வாங்கவில்லை. மொத்த உலகமும் பிரச்சனையை எதிர்கொண்டு இருக்கிறது. நாங்களும் எதிர்கொண்டுள்ளோம். எனினும் இது பெரியளவில் தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை. பலரும் பங்களாதேஷூம் இலங்கையை போல பிரச்சனை எதிர்கொள்ளலாம் என எச்சரித்து வருகின்றனர் ஆனால் நிச்சயம் அதுபோல நடக்காது

வளர்ச்சிகான திட்டம்
 

வளர்ச்சிகான திட்டம்

ஏனெனில் நாங்கள் அனைத்து வளர்ச்சிக்கான திட்டத்தினையும் திட்டமிட்டுள்ளோம். அதேபோல எந்த திட்டத்தினையும் தொடங்குவதற்கு முன்பு, அது மக்களுக்கு பயனுள்ளதா என யோசித்து முடிவு எடுக்கிறோம் ஆக நாங்கள் எந்த திட்டத்தினையும், தற்போதைக்கு கையில் எடுக்கவில்லை. அதற்காக எந்த பணத்தையும் செலவிடவில்லை.

வீணாக செலவு செய்யவில்லை

வீணாக செலவு செய்யவில்லை

பங்களாதேஷ் ஒரு வேளை ஏதேனும் திட்டத்தினை கையில் எடுக்கிறது எனில். அதனால் மக்களுக்கு என்ன பயன் என யோசிக்கும். எப்படி பொருளாதாரத்தினை மேம்படுத்துவது, மக்கள் எப்படி பயனடைய போகிறார்கள். மக்களின் நலனே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஆக நாங்கள் வீணாக எந்த பணத்தினையும் செலவு செய்ய மாட்டோம் என பிரதமர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

கடன் பொறி

கடன் பொறி

பல நிபுணர்களும் இலங்கையின் வீழ்ச்சிக்கு சீனாவின் கடன் விகிதமே காரணம் என நினைக்கிறார்கள். இது கடன் பொறிகளாகவே பார்க்கப்படுகிறது. இருப்பினும் நாடு அதனை நிர்வகிக்கும் விதமாக திட்டங்களை வைத்துள்ளது என்றும் ஹசீனா தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

bangladesh pm sheikh hasina on economy

bangladesh pm sheikh hasina on economy/இலங்கையை போல நாங்கள் ஒரு போதும் வீழ்ச்சி காண மாட்டோம்.. பங்களாதேஷ் நம்பிக்கை!
Story first published: Sunday, September 4, 2022, 20:31 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X