பெய்ரூட்: லெபனானின் தலைநகரான பெய்ரூட் வீதிகளில் பல ஆண்டுகளாகப் பிச்சை எடுத்த வந்த நடக்க முடியாத, கைகளும் இயங்காத பாத்திமா ஒத்மான் சென்ற வாரம் செவ்வாய்க்கிழமை இரவு சாலை ஓரம் இறந்து கிடந்துள்ளார்.
இவர் இறந்து கிடந்தது குறித்துத் தகவல் அளித்தவர் தினமும் இவர் அந்தப் பக்கம் சென்று வரும் போது தன்னிடம் உள்ள நாணயங்களை அவருக்குப் பிச்சையாக மடியில் போடுவேன். அவர் அதனை வாயால் கவ்வி தனது பையில் வைப்பார். அவ்வாறு செவ்வாய்க்கிழமை அவருக்குப் பிச்சை போடும் போது உடல் அடை அசைவு இல்லாத உடன் காவல் துறைக்குத் தகவல் அளித்தேன் என்று தெரிவித்துள்ளார்.
பிரேத பரிசோதனை
காவல் துறை இவரது உடலினை கைபற்றிப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதில் இவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.
கோடி கணக்கில் பணம்
இவரது பையை ஆய்வு செய்த போது இந்திய மதிப்பில் 2.24 லட்சம் ரூபாய் மதிப்பிலான லெபானான் நாட்டு ரூபாய் நோட்டுகள் இருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்த காவல் துறையினர் மேலும் இவரது பையைச் சோதனை செய்த போது அதில் இருந்த வங்கி கணக்குப் புத்தகத்தில் 7.50 கோடி ரூபாய் இருப்பதும் தெரியவந்துள்ளது.
உறவினர்கள்
பாத்திமா ஒத்மான் குறித்து விசாரணை செய்த போது பார்பிர் மாவட்டத்தினைச் சார்ந்தவர் என்றவர் என்பதும், அங்க பலருக்கு பரிட்ச்சையமானவர் என்றும் தெரியவந்துள்ளது. பின்னர் அங்கு உள்ளவர்களுக்குத் தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து இவரது உடலை அவரது உறவினர்கள் வந்து பெற்றுக்கொண்டு சென்றுள்ளனர்.
பாத்திமா ஒத்மான் குடும்பத்தில் இவரது தாய், 2 அண்ணண் மற்றும் 5 தங்கைகள் என 8 பேர் உள்ளனர். இவரது குடும்பத்தினருக்கு இவரது பணம், சேமிப்புகள் குறித்துத் தெரியாது என்றும் யாரும் இவரைப் பிச்சை எடுக்க வற்புறத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
கொலை செய்து விடுவார்களோ என்ற பயம்
தன்னிடம் அவ்வளவு பணம் இருப்பதை யாரிடமாவது சொன்னால் தன்னை எங்குக் கொன்று விடுவார்களோ என்று மக்கள் இவருக்கு இரக்கப்பட்டு அளித்த பணத்தினை அனுபவிக்கும் முடியாமல் இறந்துள்ளார்.
லெபனான்
பாத்திமா ஒத்மான் குறித்த செய்திகள் மற்றும் படங்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து சமுக வலைத்தளங்களில் லெபனானில் பிச்சை எடுக்கும் பலர் கோடீசுவரர்களாக இருப்பார்கள் போல என விமர்சித்து வைரல் ஆக்கி வருகின்றனர்.
அது வேற வாய்.. இது நாற வாய்..
ரூ. 1,999-க்கு குறைந்த விலை சைக்கிள்
இந்தியர்களுக்கு ஜாக்பாட்..!
மோடி அரசு இப்போதாவது பாடம் கற்றுக்கொள்ளுமா..?
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications