உலக பணக்காரர்கள் பட்டியலில் Bill Gates-ஐ பின்னுக்கு தள்ளியது யார்? தற்போது பில் கேட்ஸின் நிலை என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பணக்காரர்கள் பட்டியல் உலக வெகு ஜன மக்களுக்கு பிரபலமாகும் நேரம் தொடங்கி இந்த 2019-ம் ஆண்டு வரை எப்போதுமே Bill Gates டாப் இருவரில் ஒருவராகத் தான் இருந்திருக்கிறார்.

 

2008-ம் ஆண்டு வரை உலகின் நம்பர் 1 பணக்காரராக சுமார் 15 ஆண்டுகளுக்கு மேல் தனி ராஜாங்கம் நடத்தினார் நம் மைக்ரோசாஃப்ட் புகழ் Bill Gates. பட்டியல் வெளியிடப்பட்டாலே அவர் தானய்யா நம்பர் 1. அடுத்த ஆளைப் பாருங்க என்கிற அளவுக்கு மக்கள் மனதில் பதிந்துவிட்டது.

2008-க்குப் பிறகு, அலிபாபா, அமேஸான் போன்ற பல புதிய டெக்னாலஜி நிறுவனங்கள் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு, மைக்ரோசாஃப்ட்டை பின்னுக்குத் தள்ளத் தொடங்கியது.

புதியவர்கள்

புதியவர்கள்

அப்படி தொடங்கப்பட்ட அமேஸான் நிறுவனர் தான் இன்று பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார். அதோடு நம் Bill Gates-க்கு இரக்க மனம் வேறு அதிகம் என்பதால் பல தான தர்மங்களுக்கு கோடி கணக்கில் சொத்துக்களை எல்லாம் எழுதி வைக்கத் தொடங்கிவிட்டார். எனவே கடந்த சில ஆண்டுகளாக உலகின் நம்பர் 1 பணக்காரர் என்கிற தன் சிம்மாசனத்தை, அமேஸான் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப் பிசாஸ் போன்ற புதியவர்களுக்கு கொடுத்துவிட்டு நம்பர் 2 இடத்தில் இருந்தார்.

Louis Vuitton

Louis Vuitton

ஆனால் இப்போது தன் நம்பர் 2 இடத்தையும் விட்டுக் கொடுத்துவிட்டு நம்பர் 3 இடத்துக்கு சரிந்திருக்கிறார் Bill Gates. இப்போது நம் Bill Gates-ஐ முந்திக் கொண்டு உலகின் நம்பர் 2 பணக்காரர் என்கிற பட்டத்தை பெற்றிருப்பவர் பிரான்ஸ் நாட்டின் பெர்னார்ட் அர்னால்ட். உலகின் புகழ் பெற்ற லூயில் வாய்ட்டன் (Louis Vuitton) நிறுவனத்தின் தலைவர் இவர். உலகின் விலை உயர்ந்த கைப் பைகளைத் தயாரிக்கும் முன்னணி ஃபேஷன் நிறுவனங்களில் இந்த லூயில் வாய்ட்டன் நிறுவனமும் ஒன்று.

பெர்னார்ட் அர்னால்ட்
 

பெர்னார்ட் அர்னால்ட்

இந்த 2019-ல் மட்டும் சுமார் 39 பில்லியன் அமெரிக்க டாலர் சொத்தைச் சேர்த்திருக்கிறாராம். உலகின் டாப் 500 பணக்காரர்களிலேயே இந்த ஆண்டில் (வெறும் 6 மாதங்களில் மட்டும்) அதிக சொத்து சேர்த்தவர் இவர் தான் எனவும் உலக மீடியாக்கள் வாயைப் பிளந்திருக்கிறார்கள். அதோடு உலகிலேயே 100 பில்லியன் டாலருக்கு மேல் சொத்து வைத்திருந்தவர்கள் அமேஸான் நிறுவனர் ஜெஃப் பிசாஸ் மற்றும் மைக்ரோசாஃப்ட்டின் Bill Gates மட்டும் தான். இப்போது 3-வது நபராக நம் பெர்னார்ட் அர்னால்டும் உள்ளே வந்திருக்கிறார்.

100 பில்லியன் டாலருக்கு மேல்

100 பில்லியன் டாலருக்கு மேல்

தற்போது இந்த பிரான்ஸ் நாட்டு பணக்காரர் பெர்னார்ட் அர்னால்ட்டின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 104.2 பில்லியன் டாலராக இருக்கிறதாம். நம் தலைவர் Bill Gates-ன் மொத்த சொத்து மதிப்பு சுமார் 103.7 பில்லியன் டாலராக இருக்கிறதாம். இப்போது வரை யாரும் தொட முடியாத சாரி அவரை நெருங்கக் கூட முடியாத உயரத்தில் 164 பில்லியன் டாலர் மொத்த சொத்துக்களோடு தனித்து நிற்கிறார் அமேஸான் நிறுவனர் ஜெஃப் பிசாஸ். அனேகமாக மனைவிக்கு சொத்து பத்துக்களை பிரித்துக் கொடுத்த பின் சுமார் 30 பில்லியன் டாலர் குறையும் என நம்பலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

bill gates had pushed to 3rd place by Louis Vuitton chairman bernard arnault

bill gates had pushed to 3rd place by Louis Vuitton chairman Bernard arnault
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X