30 வயதுக்குள் சிங்குளாக இருக்கும் அழகு Billionaire-கள்..! ஒரு முறை ப்ரொபோஸ் செய்து பாருங்களேன்..?

By G P Subramanian
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தலைப்பு சரி தான்... கோடிக் கணக்கில் சொத்து பத்துக்கள் இருக்கிறது, ஆனால் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்குளாகவே இருக்கும் பணக்கார இளவரசிகள் மற்றும் இளவரசர்களைப் பற்ரித் தான் பார்க்கப் போகிறோம்.

 

Billionaire-கள், பணக்காரர்கள், பிசினஸ் மேன்கள் என்றாலே ஃபோர்ப்ஸ் தான். சமீபத்தில் உலகின் இளம் வயது Billionaire-கள் என ஒரு பட்டியளைத் தயார் செய்திருக்கிறது ஃபோர்ப்ஸ். 30 வயதுக்குள் ஒருவர் 1 பில்லியன் டாலருக்கு மேல் (1000 மில்லியன் டாலர்) சம்பாதித்திருந்தால் மட்டுமே இந்தப் பட்டியலில் இடம் பிடிக்க முடியும். அதோடு திருமணமும் செய்யாதவர்களாக இருக்க வேண்டும்.

அப்படிச் சம்பாதித்த இளசுகளைப் பற்றித் தான் படித்துப் பொறாமைப்படப் போகிறோம். அழகுப் பதுமை அன்னா கஸ்பிரசாக் (Anna Kasprzak)-யிடம் இருந்து தொடங்குவோம்.

குடிமக்களுக்கோர் சியர்ஸ் செய்தி.. 19 புது சரக்கு..டாஸ்மாக் எலைட் கடைகளுக்கு இறக்குமதி! குடிமக்களுக்கோர் சியர்ஸ் செய்தி.. 19 புது சரக்கு..டாஸ்மாக் எலைட் கடைகளுக்கு இறக்குமதி!

Anna Kasprzak

Anna Kasprzak

டென்மார்க்கின் பிரபல ஷூ தயாரிப்பு நிறுவனமான ECCO-ன் உரிமையாளர்களில் ஒருவர் நம் 29 வயதான anna kasprzak. இவர்களின் ECCO நிறுவன ஷூக்கள் உலகில் 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் 2,200 அவுட் லெட்டுகளுடனும், ஆன்லைனிலும் விற்பனை செய்து வருகிறார்கள். இந்த ECCO நிறுவனம் ஒரு பரம்பரை சொத்து தான். 1963-ல் நம் அன்னா கஸ்பிரசாக்கின் தாத்தா தொடங்கிய நிறுவனம் இது. அன்னாவின் தற்போதைய சொத்து மதிப்பு 100 கோடி டாலராம். உலகின் டாப் பில்லியனர்கள் பட்டியலில் 2057-வது இடத்தில் அன்னா சப்பளக் கால் போட்டு அமர்ந்திருக்கிறார்.

குதிரைக் காதலி

குதிரைக் காதலி

இளம் தொழிலதிபர் என்ற முகத்தை கொண்ட anna kasprzak-க்கு விளையாட்டு வீராங்கனை என்ற மற்றொரு முகமும் உண்டு. இவர் ஒரு Dressage rider. அதாவது குதிரைகளை பழக்கி, சவாரி செய்யும் போட்டிகளில் அதிக ஈடுபாடு கொண்ட anna kasprzak, 2016ல் ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு 14வது இடத்தைப் பிடித்தவர் என்பதும் கூடுதல் பெட்டிச் செய்தி. கொடுத்து வைத்த குதிரைகள் மீது காதல் கொண்ட anna kasprzak தனிப்பட்ட முறையில் குதிரை சவாரி பந்தய அரங்கத்தையும் நடத்தி வருகிறார். இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை அனால் ஒரு குழந்தை இருக்கிறதாம். வலை வீசிப் பாருங்களேன்..?

Ludwig Theodor Braun
 

Ludwig Theodor Braun

குடும்ப பிசினஸை பார்த்து வரும் 6-வது தலைமுறையை சேர்ந்தவர் இந்த 29 வயதான இளவரச கோடீஸ்வரர் லுட்விக் தியோடர் பிரவுன் (Ludwig Theodor Braun). இவரின் சொத்து மதிப்பு 100 கோடி டாலர். அறுவை சிகிச்சைக்கு தேவையான கருவிகள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் தனது குடும்ப நிறுவனமான B. Braun Melsungen-ல் 10 சதவீத பங்குகளை தன்வசம் வைத்துள்ளார். அதனால் தான் இவரை பணக்காரர் பட்டியலில் வைத்திருக்கிறது ஃபோர்ப்ஸ் நிறுவனம். 1977ல் அந்த நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 2.40 கோடி டாலர்தான். ஆனால் 2019-ல் ஆண்டு வருமானம் 800 கோடி டாலரைத் தொட்டது என்றால் வளர்ச்சியைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

நல்ல பிள்ளை

நல்ல பிள்ளை

இவரைப் பற்றிச் சொல்ல பாசிட்டிவ் நெகட்டிவ் என எதுவுமே இல்லை. அந்த அளவுக்கு நல்ல பிள்ளையாக இருக்கிறார் போல. இவர் தான் B. Braun Melsungen சாம்ர்ராஜ்யத்தின் கடைசி இளரவரசன். குடும்பத்தின் கடைக்குட்டியாம். தற்போது இதுவரை கிடைத்த இணையச் செய்திகளில் இந்த ஹாட் இளைஞருக்கு இன்னும் திருமணமாகவில்லை. ஆக Girls... தயாராக இருங்கள்.

John Collison

John Collison

படிப்புக்கும், சம்பாத்தியத்துக்கும் கொஞ்சம் கூட தொடர்பு இல்லை என்பதை மீண்டும் நிரூபித்த இளம் கோடீஸ்வரர் ஜான் கொலிசன் (John Collison). ஹார்வர்டு பல்கலைகழகத்தில் படிப்பை பாதியில் விட்ட ஜான் கொலிசனின் தற்போதைய சொத்து மதிப்பு 210 கோடி டாலர். 20.25 பில்லியன் டாலர் (2025 கோடி டாலர்) மதிப்பு கொண்ட ஆன்லைன் பேமெண்ட்ஸ் சாப்ட்வேர் stripe நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைவர் நம் ஜான் கொலிசன்.

திறமைக்கு மரியாதை

திறமைக்கு மரியாதை

இவரின் Stripe நிறுவனத்தில் கூகுளின் கேப்பிட்டல் ஜி என்கிற நிறுவனமே நேரடியாக முதலீடு செய்திருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். தன் 17-வது வயத்திலேயே 50 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு தன் Auctomatic என்கிற சாஃப்ட்வேர் கம்பெனியை விற்ற திறமைசாலி. தற்போது அயர்லாந்து குடியுரிமை கொண்ட ஜான் கொலிசன் தற்போது கலிபோர்னியாவில் வசித்து வருகிறார். 28 வயதான ஜான் கொலிசனுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லையாம்.

Evan Spiegel

Evan Spiegel

இன்ஸ்டாகிராமுக்கு டஃப் கொடுத்து வரும் ஸ்னாப்சாட் (Snapchat)-ன் தலைமை செயல் அதிகாரி இவான் ஸ்பீகல் (Evan Spiegel) தான் நாம் அடுத்து பார்க்கும் இளம் கோடீஸ்வரர். அமெரிக்காவை சேர்ந்த இவான் ஸ்பீகல் உலகின் இள வயது தலைமை செயல் அதிகாரிகளில் ஒருவர் என்கிற பெருமைக்கும் சொந்தகாரர். சொந்தக் காலில் நின்று, 2011-ல் Snapchat-ஐத் தனியாகத் தொடங்கி பில்லியனர் பட்டியலில் இடம் பிடித்த அமெரிக்காவின் சுயம்புலிங்கங்களில் ஒருவர். இப்போதும் Snapchat-ல் 18% பங்குகளை வைத்திருக்கிறார். இவரின் Snapchat நிறுவன பங்குகள் அமெரிக்க பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு ஒரு பங்கு விலை 11.54 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.

மிரட்டல்

மிரட்டல்

2013ல் ஸ்னாப்சாட் நிறுவனத்தை தன்னிடம் கொடுத்தால் நினைத்து பார்க்க முடியாத பெரிய தொகையைத் தருவதாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் மார்க் பணப் பொட்டியோடும், செக் புக்குடனும் நம் Evan Spiegel-ஐ வளம் வந்து நைஸாக மிரட்டினார். சிரித்த மேனிக்கே "பார்த்துக்கலாம் மார்க், இப்ப வேண்டாம்" என மறுத்தார் Evan Spiegel. தற்போது 28 வயதாகும், கல்லூரி படிப்பை பாதியில் விட்ட ஸ்பீகலின் தற்போதைய சொத்து மதிப்பு 230 கோடி டாலர் வைத்திருக்கிறார். மிராண்டா கெர் என ஒரு பெரிய மாடலைத் திருமணம் செய்திருக்கிறாராம். ஆனால் சமீபத்தைய இணைய செய்திகளில் இவருக்கும் மிராண்டாவுக்கு உறவுமுறை சுமூகமாக இல்லை எனச் சொல்கிறார்கள். விரைவில் பிரியலாம். எனவே இது கல்யாணம் செய்ய விருப்பப்படும் இளம் பெண்களுக்கான தளம். என்ஜாய் கேர்ல்ஸ்.

Gustav Magnar Witzoe

Gustav Magnar Witzoe

சால்மன் (Salmon) என்கிற நன்னீர் மீனை உலகில் அதிகம் விரும்பி சாப்பிடக் கூடிய மீன் வகைகளில் ஒன்று. இந்த மீனை உலக அளவில் பெரிதாக உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் சல்மர் ஏ.எஸ்.ஏ (Salmar ASA) நிறுவனத்துக்கு தனி இடம் உண்டு. நார்வே நாட்டில் மீன் வளர்ப்பை தொழில்மயமாக்கியதில் இந்த நிறுவனம் தான் முன்னோடி. இந்த நிறுவனத்தை கஸ்டவ் மக்னர் விட்சோ (Gustav Magnar Witzoe)வின் தந்தை தொடங்கி சிறப்பாக நடத்தி வந்தார். இப்போது வரை Gustav Magnar Witzoe பெரிதாக இந்த தொழில் எதையும் சாதிக்கவில்லை.

முதலீடுகள்

முதலீடுகள்

ஆனால், அந்த நிறுவனத்தில் பாதி பங்குகளை Gustav Magnar Witzoe-க்கு அவரது தந்தை பரிசாகக் கொடுததார். அதனால் தான் 26 வயது இளம் Gustav Magnar Witzoe உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இருக்கிறார். சல்மர் நிறுவன நிர்வாகத்தை Gustav Magnar Witzoe-ன் அண்ணண் பார்த்துக் கொள்கிறார். நம் இளவரசன் Gustav Magnar Witzoe நார்வேயின் ரியல் எஸ்டேட் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார் இந்த இளம் கோடீஸ்வரர். Gustav Magnar Witzoe-ன் தற்போதைய சொத்து மதிப்பு 280 கோடி டாலர். சொல்ல மறந்துவிட்டேன் இவர் ஒரு ஆண். இதுவரை கல்யாணம் ஆகவில்லை. இவருக்கு பெண்கள் ப்ரொபோஸ் செய்யலாம் அல்லது ஒரே பாலின திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஆண்கள் ப்ரொபோஸ் செய்யலாம்.

Katharina Andresen

Katharina Andresen

பெயரை எங்கோ கேள்விப் பட்டது போல் இருக்கிறதா..? அட ஆமாங்க, நம்ம அலெக்ஸாண்ட்ராவின் அக்கா தான் இந்த கேத்தரீனா ஆண்டர்சன் (Kathrarina Andresen). நார்வேயின் பிரபல முதலீட்டு நிறுவனமான ferd-ஐ நடத்தி வரும் சகோதரிகளில் ஒருவர் காத்ரினா ஆண்டர்சன். அந்த நிறுவனத்தில் தனது தங்கைக்குச் சமமாக 42 சதவீத பங்குகளை தன் வசmuம் வைத்துள்ளார் நம் காத்தரீனா ஆண்டர்சன். உலகின் இவரின் சொத்து மதிப்புm தங்கைக்கு சல்லிப் பைசா குறையாமல் அதே 140 கோடி டாலருக்கு 32,000 டாலர் குறைவாக இருக்கிறதாம். 2017-ல் சில போதை பொருட்களை எடுத்துக் கொண்டு வாகன ஓட்டியதற்காக நார்வே காவல் துறை 32,000 டாலர் அபராதம் விதித்ததாம். அதனால் தான் அந்த 32,000 டாலர் குறை. சரி அது போகட்டும், இந்த 24 வயது பிசினஸ் அழகிக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. ப்ரொபோச் செய்கிறீர்களா..?

Alexandra Andresen

Alexandra Andresen

முதலீடு செய்தே சம்பாதிக்கும் இளம் கோடீஸ்வரி அலெக்ஸாண்ட்ரா ஆண்ட்ரெஸ்சன் (Alexandra Andresen). நார்வே நாட்டின் பிரபல முதலீட்டு நிறுவனமான ferd நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவர் தான் அலெக்ஸாண்ட்ரா ஆண்ட்ரெஸ்சன். அந்த நிறுவனத்தில் அவருக்கு 42 சதவீத பங்குகள் சொந்தம். இவருடைய சொத்து மதிப்பு 140 கோடி டாலர். நார்வே குதிரை சவாரி போட்டியின் ஜூனியர் பிரிவில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்றவர் அலெக்ஸாண்ட்ரா.

100 வருடம் பணக்காரர்கள்

100 வருடம் பணக்காரர்கள்

நம் அலெக்ஸாண்ட்ராவின் குடும்பம் ஆச்சாரமான பணக்கார குடும்பம். 100 ஆண்டுகளாக பணக்காரர்களாகவே இருப்பவர்கள். 2005 வரை புகையிலை வியாபாரத்தில் கொடி கட்டிப் பறந்தவர்கள். அந்த வியாபாரம் அழுத்துப் போக விற்ரு விட்டு தற்போது முதலீட்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். 22 வயதான அலெக்ஸாண்ட்ரா ஆண்ட்ரெஸ்சனுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லையாம். மோஸ்ட் எலிஜிபில் Bachelorette-களில் இவரும் ஒருவர். உங்களுக்கு திருமண ஆசை இருந்தால் முயற்சித்துப் பாருங்களேன்...?

kylie jenner

kylie jenner

மொத்த ஃபோர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் மிக இளம் வயது பணக்காரர் நம் அழகு குட்டிச் செல்லம் kylie jenner தான். கைலி ஜென்னரைப் பற்றி நம்மாட்கள் படித்து தெரிந்து கொண்டதை விட பார்த்துத் தெரிந்து கொண்டதே அதிகம். அம்மணி எல்லாத்தையும் இன்ஸ்டால ஃபோட்டோவாகவே போட்டுடும். 1997-ல் பிறந்த அம்மணிக்கு இப்போது 22-வது வயது நடந்து கொண்டிருக்கிறது.
அமெரிக்காவை சேர்ந்த 21 வயதான கைலி ஜென்னருக்கு மாடல், பிசினஸ் உமன், சமூக ஆர்வலர் என பலமுகங்கள் உண்டு.

பணக்காரி

பணக்காரி

அமெரிக்க இளைஞர்களை அடிக்கு அடி சூடேற்றும் கிம் கர்தாஷியன் தேவதைகள் குடும்பத்தில் பிறந்தவர். தன்னுடைய 15 கோடி சோஷியல் மீடியா follower-களை வைத்து கச்சிதமாக பிசினஸ் செய்து கல்லா கட்டிய சுய சம்பாத்திய ரோஷக் காரி நம் kylie jenner. தன்னுடைய மாடலிங் பணம் 2.5 லட்சம் டாலரை வைத்து, தனக்கு பிடித்தது போல 15,000 Lip Kit-களை தயாரிக்க ஆர்டர் கொடுத்தாள். அப்படித் தொடங்கியது தான் Kylie Cosmetics இன்று வரை இளசுகளை கட்டிப் போட்டிருக்கிறது.

மாடல் பணம் டு பிசினஸ்

மாடல் பணம் டு பிசினஸ்

29 டாலருக்கு வெளியிட்ட Lip Kit-கள் ஒரு வருடத்தில் 360 மில்லியன் டாலருக்கு விற்பனை ஆனது, சமீபத்தில் Ulta என்கிற நிறுவனத்தோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தில் தன் புதிய Lip Kit 6 வாரங்களில் 55 மில்லியன் டாலருக்கு விற்பனையானது என தொடர் சாதனைகளை அள்ளி அணைத்துக் கொண்டிருக்கிறார் குட்டி kylie jenner. சமீபத்தில் தான் இந்த ஆந்தைக் கண்ணழகியின் Kylie Cosmetics-ன் மதிப்பு 100 கோடி டாலரைத் தொட்டது. இதுவரை இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் தன் நண்பரோடு லிவ் இன்னில் வாழ்ந்து ஒரு குழந்தையே பெற்றுக் ஒண்டுவிட்டார். ஆக திருமண விண்ணப்பங்கள் ரிஜெக்ட் செய்யப்படுகின்றன.

ஆணாய்ப் பிறந்ததன் கஷ்டம் ஒரு ஆணுக்குத் தான் தெரியும்..! வாங்கப்பு நம்ம பொழப்ப பாப்போம்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

billionaires who are under 30 and still single

billionaires who are under 30 and still single
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X