இந்தியா ஹெலிக்காப்டர் என்றால்.. சீனா பயணிகள் விமானம்.. போயிங் காட்டில் மழை..!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சியாடில்: இந்தியா சீனா மத்தியில் நீண்ட காலமாக நிலவும் போட்டி சமீப காலத்தில் அதிகரித்துள்ளதாகச் சர்வதேச சந்தை மற்றும் பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் இந்தியாவைப் பார்த்து சீனாவும், சீனாவை பார்த்து இந்தியாவும் திட்டம் வகுத்தல் முதல் வளர்ச்சி நோக்கங்கள் வரை அனைத்தையும் காபி அடித்து வருகிறது.

 

இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ள இதே வேளையில், சீனா அதிபர் ஜி ஜின்பிங் புதிய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை முன்னேற்றத்திற்காக வர்த்தகம், தொழில்நுட்ப நிறுவன தலைவர்களைச் சந்திக்க 3 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.

போயிங் காட்டில் மழை..

போயிங் காட்டில் மழை..

இப்பயணத்தில் முதல் கட்டமாகச் சியாடில் நகரத்தில் உள்ள போயிங் விமானத் தயாரிப்புத் தளத்தைப் பார்வையிட்ட ஜி ஜின்பிங், சீனா 38 பில்லியன் டாலர் மதிப்புள்ள 300 பயணிகள் விமானங்களை இந்நிறுவனத்திடம் இருந்து வாங்க உள்ளதாகத் தெரிவித்தார்.

சைனீஸ் ஏர்லைன்ஸ்

சைனீஸ் ஏர்லைன்ஸ்

ஜி ஜின்பிங் அறிவித்த 300 விமானங்களில் சைனீஸ் ஏர்லைன்ஸ் 240 விமானங்களையும், ICBC மற்றும் CDB அமைப்புகள் விமானத்தைக் குத்தகைக்கு விடும் திட்டத்திற்காக 60 விமானங்களைப் போயிங் விமான நிறுவனத்திடம் வாங்க உள்ளதாகச் சீனா அறிவித்துள்ளது.

இண்டிகோ

இண்டிகோ

சர்வதேச விமானப் போக்குவரத்துத் துறையில் இண்டிகோ நிறுவனம் செய்த 250 விமானங்களின் ஆர்டர் தான் உச்சபட்சமாக விமானச் சந்தையில் கருதப்பட்டது. இந்நிலையில் சீனாவின் 300 விமானங்களின் ஆர்டர் ஒட்டுமொத்த விமானச் சந்தையையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதற்குப் பெயர் தான் காஃபி...
 

அதற்குப் பெயர் தான் காஃபி...

இண்டிகோ விமான நிறுவனம் உள்நாட்டுச் சந்தையிலும், வெளிநாடுகளிலும் புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகத்தைப் பெற 250 விமானங்களை ஆர்டர் செய்தது. இதற்கு முக்கியக் காரணம் இந்திய சந்தையில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை வரலாறு காணத அளவிற்கு உயர்ந்து வருகிறது.

ஆனால் சீனா தற்போது உள்ள மந்தமான பொருளாதாரச் சூழ்நிலையில் விமானங்களை வாங்கி இந்தியாவிற்குப் போட்டியாகப் புதிய வர்த்தகத்தைத் தேட திட்டமிட்டுள்ளது.

இந்தியா

இந்தியா

மோடியின் இந்த 7 நாள் பயணத்தில் அமெரிக்கப் போயிங் நிறுவனத்திடம் இருந்து சுமார் 16,000 கோடி ரூபாய் (2.5 பில்லியன் டாலர்) மதிப்பில் 22 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள், 15 சினூக் கனரக ஹெலிகாப்டர்கள் வாங்க இந்தியாவும் போயிங் நிறுவனமும் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது.

240 விமானங்கள்

240 விமானங்கள்

சீனா ஆர்டர் செய்துள்ள 240 விமானங்களைச் சீனா ஏர்லைன்ஸ் சார்பாக விமானக் குத்தகை நிறுவனமான சைனா ஏவியேஷன் சப்லைஸ் ஹோல்டிங் நிறுவனம் வாங்குகிறது.

பிளிப்கார்ட் பிரதர்ஸ்..!

பிளிப்கார்ட் பிரதர்ஸ்..!

இனி நாங்களும் பில்லியனர்கள் தான்.. மகிழ்ச்சியில் பிளிப்கார்ட் பிரதர்ஸ்..!

சமுக வலைத்தள இணைப்புகள்

சமுக வலைத்தள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தைப் பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Boeing announces record Chinese order worth $38 bn

Boeing announced today a record order by a group of Chinese firms for the purchase of 300 aircraft worth some USD 38 billion.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X