உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நாடான சவுதி அரேபியா-வின் ஆரம்கோ நிறுவனத்தின் மாபெரும் எண்ணெய் ஏற்றுமதி துறைமுகம் அமைந்திருக்கும் ராஸ் தனுரா துறைமுகத்தில் டிரோன் தாக்குதலும், ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் தங்கியிருக்கும் ஆராம்கோ காம்பிளக்ஸ் பகுதியில் ஏவுகணை தாக்குதலும் நிகழ்ந்துள்ளது.
தாக்குதலின் வீடியோ
இந்தத் தாக்குதலின் எதிரொலியாகக் கச்சா எண்ணெய் சந்தையில் அதன் உற்பத்தி அளவுகள் பெருமளவில் குறைந்துள்ள இதேவேளையில் விலையும் அதிகரித்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் நீண்ட நாட்களுக்குப் பின் குறைந்து வந்த தங்கம் விலை இன்று 70 டாலர் அளவீட்டைத் தொட்டு உள்ளது.

ஏமன் ஹவுத்தி ராணுவ அமைப்பு
சவுதி அரேபியாவில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு ஏமன் ஹவுத்தி ராணுவ அமைப்புப் பொறுப்பு ஏற்று உள்ளது. இது மட்டும் அல்லாமல் ஏமன் ஹவுத்தி அமைப்பின் செய்தி தொடர்பாளர் Yahya Sare'ஏ தக்குதல் குறித்துத் தனது டிவிட்டரில் அடுத்தடுத்து டிவீட்கள் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.

சவுதி-க்கு ஆதரவு
இந்தத் தக்குதலுக்குப் பல அரபு நாடுகள் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், GCC செயலாளர் மற்றும் தலைவரான Nayef Al-Hajraf, இந்தத் தாக்குதல் சர்வதேச பொருளாதாரத்தையும், எண்ணெய் விநியோகத்தையும் கடுமையாகப் பாதிக்க உள்ளது. மேலும் வளைகுடா நாடுகள் சவுதிக்கு ஆதரவாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் எனக் தெரிவித்துள்ளார்.

2015முதல் பிரச்சனை
சவுதி தலைமையிலான கூட்டணி 2015ஆம் ஆண்டு ஏமன் சிவில் போரில் தலையிட்டது, அன்று முதல் இன்று வகையில் சவுதி மற்றம் ஹவுத்திக்கள் மத்தியில் பல்வேறு தாக்குதல்கள் மூலம் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

டிரான் தாக்குதல்
சவுதி நாட்டின் ஆரம்கோ நிறுவனத்தின் மாபெரும் எண்ணெய் ஏற்றுமதி துறைமுகம் அமைந்திருக்கும் ராஸ் தனுரா துறைமுகத்தில் இந்த டிரான் தாக்குதல் நடந்துள்ள நிலையில், எவ்விதமான உயிர் சேதம் இல்லை என அறிவிக்கப்பட்டு இருந்தாலும், பாதிப்புகள் சற்றுக் கடுமையாக இருக்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

சவுதி அரேபியாவின் உற்பத்தி
இதனால் அடுத்த சில நாட்களுக்குச் சவுதி அரேபியாவின் ஆராம்கோ நிறுவனத்தின் எண்ணெய் உற்பத்தி மற்றும் விநியோகம் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் எதிரொலியாகக் கச்சா எண்ணெய் விலை அதிகளவிலான மாற்றங்களை எதிர்கொள்ளும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை
இதன் வாயிலாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பெரிய அளவிலான மாற்றங்கள் இருக்கும். ஏற்கனவே இந்தியா முழுவதும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 90 ரூபாயைத் தாண்டியுள்ள நிலையில் தற்போது சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் உருவாகியுள்ள விலை உயர்வு நிலை அதிகளவில் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.