36,000 பேரை சஸ்பெண்ட் செய்ய இருக்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ்! ஏர் கனடா-க்கும் இதே நிலை தான்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகில், கொரோனா வைரஸ் பாதிப்பால் அதிகம் பாதிப்பு அடைந்த சில முதல் துறைகளில் விமான சேவைத் துறையும் ஒன்று.

கொரோனா வைரஸ் வெளிநாடுகளில் இருந்து வந்துவிடக் கூடாது என பல நாட்டு அரசாங்கங்களும், விமான சேவைகளை நிறுத்தி வைத்தார்கள்.

இதனால் சர்வதேச அளவில் பல பில்லியன் டாலர் வருவாயை இழந்து இருக்கிறது விமான சேவை நிறுவனங்கள்.

44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான நிலை.. 2020ல் மீண்டு வருவது மிக கஷ்டமே.. சீனாவுக்கு செக்...!44 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான நிலை.. 2020ல் மீண்டு வருவது மிக கஷ்டமே.. சீனாவுக்கு செக்...!

எப்படி நடத்துவது

எப்படி நடத்துவது

இப்படி வர வேண்டிய வருவாய் எல்லாம் அடி வாங்கிக் கொண்டு இருந்தால் எப்படி விமான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்து கம்பெனியை நடத்த முடியும்..? எனவே இண்டிகோ, கோ ஏர், ஸ்பைஸ் ஜெட் போன்ற பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கான சம்பளத்தை கணிசமாகக் குறைத்து இருக்கிறார்கள்.

லே ஆஃப்

லே ஆஃப்

ஆனால் பிரிட்டிஷ் ஏர்வேஸ் இந்த சம்பள குறைப்பில் எல்லாம் இறங்கவில்லை நேரடியாக சுமார் 36,000 ஊழியர்களை தற்காலிகமாக வேலையில் இருந்து நீக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இதை பிபிசி நிறுவனம், நேற்று ஏப்ரல் 01, 2020 அன்று உறுதி செய்து இருக்கிறது.

யாருக்கு எல்லாம் சஸ்பென்ஷன்

யாருக்கு எல்லாம் சஸ்பென்ஷன்

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் கேபின் குழுவினர்கள், தரை தள உதவியாளர்கள் (Ground Staff), பொறியாளர்கள், தலைமை அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள் போன்றவர்களில் சுமாராக 80 சதவிகித ஊழியர்களை சஸ்பெண்ட் செய்ய இருக்கிறார்களாம். சுருக்கமாக தேவை இல்லாமல் யாரையும் வைத்துக் கொள்ளப் போவதில்லை.

விமான சேவை

விமான சேவை

தெற்கு இங்கிலாந்தில் இருக்கும், இங்கிலாந்தின் இரண்டாவது முக்கிய விமான நிலையமான கத்விக் விமான நிலையத்தில் (Gatwick Airport) இருந்து இயங்கும் விமானங்களை, கொரோனா வைரஸ் பிரச்சனையால் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம், கடந்த மார்ச் 31, 2020 அன்று சொன்னது குறிப்பிடத்தக்கது.

ஏர் கனடா

ஏர் கனடா

பிரிட்டிஷ் ஏர்வேஸைப் போலவே ஏர் கனடாவில் தற்காலிகமாக ஊழியர்களை லே ஆஃப் செய்யப் போகிறார்களாம். இந்த நடவடிக்கையால் சுமார் 15,200 ஏர் கனடா ஊழியர்கள் மற்றும் 1,300 மேலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் எனச் சொல்லி இருக்கிறது ஏர் கனடா விமான சேவை நிறுவனம்.

சேவை ரத்து

சேவை ரத்து

ஏப்ரல் முதல் ஜூன் 2020 வரையான இரண்டாவது காலாண்டில் ஏர் கனடா நிறுவனம் சுமாராக 85 முதல் 90 சதவிகித விமான இயக்க செயல்பாடுகளை குறைத்துக் கொள்ளப் போகிறதாம். ஏர் கனடா நிறுவனத்தில் பல்வேறு பெருந்தலைகளே தங்கள் முழு சம்பளத்தைக் நிறுவனத்துக்கு விட்டுக் கொடுத்து இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

British airway is likely to suspend 36000 staff air Canada also on the same thought

The British airways is likely to suspend around 36000 staffs. The air Canada airlines is also announced to temporarily layoff around 16500 staff.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X