60,000 பேர் பணிநீக்கம்.. கண்ணீரில் ஊழியர்கள்.. நடந்தது என்ன..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா தொற்று அதிகமாக இருந்த காலத்தில் நிறுவனங்கள் வர்த்தகம் இல்லாத காரணத்தால் பல ஊழியர்களைக் கொத்துக் கொத்தாகப் பணிநீக்கம் செய்யப்பட்டது யாராலும் மறக்க முடியாது. ஆனால் சீனாவில் கதையே வேறு.

 

சீனாவின் ஜி ஜின்பிங் எடுத்த முடிவால் பில்லியன் கணக்கில் வருமானத்தைப் பார்த்து வந்த நிறுவனங்கள் திவாலானது மட்டும் அல்லாமல் ஆயிர கணக்கில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டிய இக்கட்டான சூழ்நிலை உருவானது.

 நியூ ஓரியண்டல் நிறுவனம்

நியூ ஓரியண்டல் நிறுவனம்

சீனாவின் முன்னணி டிஜிட்டல் கல்வி சேவை நிறுவனமான நியூ ஓரியண்டல் நிறுவனத்தின் வருமானம் சீன அரசின் முக்கியமான உத்தரவால் சுமார் 80 சதவீதம் வரையில் சரிந்த காரணத்தால், குறுகிய காலகட்டத்தில் சுமார் 60,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது.

 60,000 ஊழியர்கள் பணிநீக்கம்

60,000 ஊழியர்கள் பணிநீக்கம்

நியூ ஓரியண்டல் நிறுவனத்தின் 60,000 ஊழியர்கள் பணிநீக்கம் அந்நாட்டில் மட்டும் அல்லாமல் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் கல்வி துறை கொண்ட அனைத்து நாடுகளின் நிறுவனங்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

 தனியார் கல்வி நிறுவனம்
 

தனியார் கல்வி நிறுவனம்

சீனா அரசு அந்நாட்டில் குழந்தைகளுக்கான கல்வி செலவுகள் மிகவும் அதிகமாக இருப்பதாகவும், அது பெற்றோர்களுக்குப் பெரும் சுமையாக இருந்த காரணத்தால் சீனாவில் இருக்கும் தனியார் கல்வி கற்பித்தல் (tutoring cos) நிறுவனங்கள் லாபமற்ற நிறுவனமாகத் தான் இயங்க வேண்டும் என்ற புதிய கட்டுப்பாட்டை விதித்தது.

 டிஜிட்டல் கல்வி நிறுவனம்

டிஜிட்டல் கல்வி நிறுவனம்

இதனால் வருமானத்தைப் பெரிய அளவில் இழந்த அனைத்து தனியார் டிஜிட்டல் கல்வி சேவை நிறுவனங்களும் ஊழியர்கள் பணிநீக்கம், செலவுகள் குறைப்பு, சேவை நிறுத்தம் எனப் பல பாதிப்புகளை எதிர்கொண்டது.

 யூ மின்ஹாங்

யூ மின்ஹாங்

1993ஆம் ஆண்டு நியூ ஓரியண்டல் நிறுவனத்தை உருவாக்கினார் யூ மின்ஹாங் (Yu Minhong), சமீபத்தில் அவருடைய வீசேட் கணக்கில் சீன அரசு ஜூலை 2021ல் வெளியிட்ட கட்டுப்பாட்டிற்குப் பின்பு 60,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 90 சதவீதம் சரிவு

90 சதவீதம் சரிவு

சீன அரசின் கட்டுப்பாடுகள் அறிவிக்கும் முன் சீனாவின் மிகப்பெரிய தனியார் கல்விச் சேவை நிறுவனமாக விளங்கிய நியூ ஓரியண்டல் நிறுவனத்தில் சுமார் 1,05,200 ஊழியர்கள் பணியாற்றி வந்தனர், இதில் 54,200 பேர் ஆசிரியர்கள். ஜூலை 2021க்கு பின்பு நியூ ஓரியண்டல் நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 90 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

 யூ மின்ஹாங் புதிய சேவைகள்

யூ மின்ஹாங் புதிய சேவைகள்

தற்போது நியூ ஓரியண்டல் நிறுவனம் தடை உத்தரவுகள் இல்லாத நடனம், ஓவியம், வெளிநாட்டினருக்கு சீன மொழி கற்பித்தல் போன்றவற்றில் இறங்கியுள்ளது. இதுமட்டும் அல்லாமல் யூ மின்ஹாங் சீனாவில் வேகமாக வளர்ந்து இருக்கும் லைவ் ஸ்ட்ரீமிங் ஈகாமர்ஸ் மூலம் காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்யும் சேவையை அறிமுகம் செய்துள்ளார்.

மேலும் விரைவில் புதிய லைவ் ஸ்ட்ரீமிங் ஈகாமர்ஸ் தளத்தையும் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார் யூ மின்ஹாங்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China biggest edtech New Oriental layoff 60,000 employees after China govt crackdown

China biggest edtech New Oriental layoff 60,000 employees after China govt crackdown 60,000 பேர் பணிநீக்கம்.. கண்ணீரில் ஊழியர்கள்.. நடந்தது என்ன..?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X