3 வருட சரிவை எட்டிய சீன நாணயம்.. மோசமான பொருளாதார நிலை!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஷாங்காய்: மோசமான பொருளாதார நிலையின் காரணமாகச் சீனா, செவ்வாய்க்கிழமை தனது நாணய மதிப்பை குறைத்துக் கொண்டது.

 

இதனால் சீன நாணயம் சர்வதேச சந்தையில் சுமார் 3 வருடச் சரிவை எட்டி, தனது வர்த்தகப் பரிமாற்றத்தை செய்து வருகிறது.

சீன சென்டரல் வங்கி

சீன சென்டரல் வங்கி

இதுகுறித்துச் சீன சென்டரல் வங்கி கூறுகையில், 'one-off depreciation' என்று அழைக்கப்படும் இந்த நடவடிக்கையின் மூலம் புதிய நாணய பரிமாற்ற மற்றும் மேலாண்மை நடவடிக்கையின் ஒரு பகுதியாகச் சீனா நாணயத்தின் மதிப்பு 2 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது.

புதிய சூழ்நிலை

புதிய சூழ்நிலை

இந்த நாணய மதிப்புக் குறைவினால் சீன சந்தைக்குச் சாதகமாகச் சந்தையில் புதிய சூழ்நிலை உருவாகும் எனச் சென்டரல் வங்கி நம்புகிறது.

வர்த்தகம் மற்றும் நாணய பரிமாற்றம்

வர்த்தகம் மற்றும் நாணய பரிமாற்றம்

தற்போதைய நிலையில் சீன சந்தையில் வர்த்தக அளவு கணிப்புகளுக்கு அதிகமான அளவிலேயே செய்யப்பட்டு வருகிறது. மேலும் சர்வதேச நாணயங்களின் பரிமாற்றத்தின் போதும் சீன நாணயம் வலிமையாகவே உள்ளது எனச் சென்டரல் வங்கி தெரிவித்துள்ளது.

நாணய மதிப்பீடு
 

நாணய மதிப்பீடு

அடுத்து வரும் நாட்களில் நாணய பரிமாற்றம் மற்றும் வர்த்தக அளவை மேம்படுத்திக் கொள்ளவே இத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளதாகச் சென்டரல் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஸ்திரமான வர்த்தகம்

ஸ்திரமான வர்த்தகம்

சர்வதேச சந்தையில் மோசமான பொருளாதார நிலையின் காரணமாக யுவான் 2 சதவீதம் குறைவாகவே மதிப்பிடப்படுகிறது. இந்நிலையில் நாணய மதிப்பைச் சீன அரசு 2 சதவீதம் குறைந்துள்ள நிலையில், சந்தையில் ஸ்திரமான வர்த்தகம் நடைபெறும் எனச் சீன நம்புகிறது.

போராட்டம்

போராட்டம்

சீன சந்தையில் அன்னிய முதலீடு அதிகளவில் குறைந்துள்ளதால், ஏற்றுமதி மற்றும் வர்த்தக அளவு கணிசமாகக் குறைந்துள்ளது. இதனை நிலை நாட்டவே சீன அரசு தற்போது போராடி வருகிறது.

சீனா

சீனா

சீனாவை பற்றி பிற வர்த்தக செய்திகளை படிக்க இதை கிளிக் செய்யவும்.

சமுக வளைதள இணைப்புகள்

சமுக வளைதள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China central bank devalues the yuan after poor economic data

China devalued the yuan on Tuesday after a run of poor economic data, guiding the currency to its lowest point in almost three years.
Story first published: Tuesday, August 11, 2015, 12:45 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X